மார்கழி கோலம்

5
0 minutes, 2 seconds Read
This entry is part 15 of 33 in the series 3 மார்ச் 2013

***********

 

முகத்தை வருடிய தென்றல்
வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று
சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது
மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் ..

 

கைபேசி,கணினி,மடிகணினியின்
மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு –
உயிர் தெளித்து மார்கழி கோலம் …

 

– சித்ரா
(k_chithra@yahoo.com)

Series Navigationவாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
author

சித்ரா

Similar Posts

5 Comments

  1. Avatar
    sathyanandhan says:

    பெருநகரங்களில் கிட்டத்தட்ட மார்கழிக் கோலம் கண்ணில் படுவதில்லை. அப்படியே பட்டாலும் வாகனங்கள் அவற்றை நொடியில் அழித்து விடும். பெண் கவிஞர் தம் பணியிடையே அதை மேசை மீதே மீட்பது அழகிய கவிதை. பெண் கவிஞர்கள் நிறையவே எழுத வேண்டும். ஆண்களால் ஆக்கிரமிக்கப் பட்டதே தமிழ் இலக்கிய உலகம். அன்பு சத்யானந்தன்

  2. Avatar
    எஸ்.எம்.ஏ. ராம் says:

    கவிஞர் அழகாகவே கோலமிட்டிருக்கிறார். ஆனால்,தலைப்பிலும் உள்ளேயும் அங்கங்கே புள்ளிகளை மறந்ததேன்?
    ஒற்றெழுத்துக்களைச் சொல்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *