This entry is part 27 of 33 in the series 3 மார்ச் 2013

உதயசூரியன்

 

கண்ணீரும் ,
துக்கமும்
இருளை நோக்கி ஓடுகின்றன
அவளுக்கு
பெற்றோர் இருந்தனர்
அண்ணன் இருந்தான்
அன்று
என் செல்பேசியில் மட்டும்
அவளின்
அழுகை கேட்டது
சில நிமிட
மௌனங்கள்
சில சமயங்களில்
விளங்குவதில்லை
நான்
இருளை நோக்கி
ஓடினேன்
இன்று
அவளின்
இருப்பிடம் தெரியவில்லை
என் செல்பேசியில்
அவளின் அழுகை
கேட்டுக்கொண்டே இருக்கிறது
———————————————
எனக்கு தெரியும்
விளக்குக்கும் தெரியும்
பூதம் வரப்போவதில்லை என்று
நப்பாசைதான்
தேய்த்துக் கொண்டிருக்கிறேன்
என் பக்கத்தில்
கால் மேல் கால் போட்டிருக்கும்
ஏழரையை கவனிக்க தவறவில்லை
உடல் ஓய்ந்த போது
பூதமும் சனி பகவானும்
நினைவில் வரவில்லை
புதிய பார்வையில்
புதிய உலகம் தெரிகிறது
இப்பொழுது
புரிய முயற்சிக்கவில்லை
ஏற்கவுமில்லை , சிரிக்கவுமில்லை
விட்டுவிட்டேன்
போனால் போகட்டும்
———————————–

நிர்வாணமாய்
ஓர்
அதிகாலைப் பொழுதில்
நடு ரோட்டில்
தன் மெய்யை
தன் காலால்
வருடும் நாய்
அஞ்சி
பின் வெறித்து
சிட்டாய்
விலகும்
சாதாரண மனிதர்கள்

Series Navigationமிரட்டல்தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !