வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)

This entry is part 21 of 26 in the series 17 மார்ச் 2013
 

Walt Whitman

(1819-1892)
 (புல்லின் இலைகள் -1)
 மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++++
வால்ட் விட்மன், அவனோர் பிரபஞ்சம் !
மன்ஹாட்டன் மைந்தன் !
புரட்சிக் காரன் ! உப்பிய சதை !
மோக முள்ளவன் ! பெருந் தீனியான் !
குடிப்பான் !, பிள்ளைகள் பெற்றவன் !
உணர்ச்சி வசப்படான் !
உயர்ந்தவன் அல்லன் மனித குலத்தில் !
தன்னடக்க மற்ற அகங்காரன் !
பிறன் ஒருவனை அவமதிப் பவன்
என்னை அவமதிப் பவன் !
என்ன செய்தாலும், என்ன சொன்னாலும்
இறுதியில் அது மீள்வது
என்னிடமே !
யுகங்களாய் முடிவற்றுத் தோன்றின
மகத்தான வாக்கு மொழிகள் !
என்னுடைய தெல்லாம்
நவீன மொழி !
நம்பிக்கை உறுதி மொழி
மறுக்கப் படுவ தில்லை பின்தொடர !
எல்லாம் ஏற்புடை யவை
எனக்கு !

காலத்தை ஒரு தனித்துவ மாய்
ஏற்றுக் கொள்கிறேன்.
காலம் பழுதற்றது !
நம்மை மட்டும் வட்ட மிடுது
வாழ்வுக்கு முழுமை அளிப்பது !
குழப்பும் அப்புதிரான விந்தை
முழுமைப் படுத்தும் !
மெய்ப்பாடு எனக்கு ஏற்புடைத்து
ஐயுற்று நான் அதன் மீது
கேள்வி கேட்ப தில்லை !
மூழ்க்கிடும் உலோகா யுதக் கோட்பாடே
முதலும், முடிவும் என்றுபேன் !

+++++++++++++
தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 13, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationவிட்டில் பூச்சிகள்“தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *