வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
சுதந்திரமாய் நீயும் நானும் .. !
(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
நான் உன்னைக் காதலிக்கிறேன்
நீ என்னை
உனது முழு உடைமையாய்
ஆக்கிக் கொள் !
நீயும் நானும் மற்றவரிட மிருந்து
விடுபட்டுச் செல்வோம்
முற்றிலும் விட்டு விலகி
சுதந்திரமாய்
விதிகள் யாவும் மீறி !
காற்றிலே இரு கழுகுகள்,
கடலிலே இரு மீன்கள்
விதிகளை மீறி
நம்மைப் போல் வாழ வில்லை !
கோர மான சூறாவளி
என்னை ஊடுருவிப் பயணித்து
உணர்ச்சி வசத்தில்
நடுக்கம் வருது எனக்கு !
இருவரும் ஒன்றிப்
பிரிவின்றி வாழ்வதற்கு
என்னை நேசிக்கும்,
என்னுயிரை விட நான் நேசிக்கும்,
பெண்ணிட மிருந்து
வருகிறது
வாக்குமூல உறுதி அளிப்பு !
எல்லா வற்றையும் சேர்த்து
ஏற்றி விடுவேன்
வாழ்வின் முனைக்கு !
அப்படி வாழ ஒரு விதியாயின்
நானே காணாமல்
போய் விட வேண்டும்.
நானும் நீயும்
ஒன்றாய்ச் சேர்ந்த பிறகு
நமக் கென்ன கவலை
நம்மைப் பற்றி மற்றவர்
என்ன நினைப்பார்
என்ன செய்வார் என்று ?
மற்றவரைப்
பற்றி நமக்கென்ன ?
ஒருவருக் கொருவர் உறவில்
இன்பத்தை
அளித்துக் கொள்கிறோம்.
கடைசியில்
ஒருவரை ஒருவர்
களைத்திடச் செய்கிறோம்,
அப்படி வாழ
அவசியப் பட்டால் !
++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/
6. http://jayabarathan.wordpress.
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (October 17, 2013)
http://jayabarathan.wordpress.
- மெல்ல மெல்ல…
- அகமுகம்
- விவேகானந்தர் 150 -ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவுக்குப் பாராட்டு விழாவும்.
- மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு
- ஆழ் கடல்
- உலகெலாம்
- சிறுகவிதைகள்
- நய்யாண்டி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. !
- ஆணோ பெண்ணோ உயிரே பெரிது
- கண்ணீர் அஞ்சலிகளின் கதை
- பிரயாணம்
- லீலாதிலகத்தில் வேற்றுமைக் கோட்பாடுகள்
- பாவடி
- ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
- புகழ் பெற்ற ஏழைகள் 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை
- என்ன இது மாற்றமோ ..?
- திண்ணையின் இலக்கியத் தடம் -5
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)
- சீதாயணம் [3] (இரண்டாம் காட்சி)
- “காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.
- நெடுநல் மாயன்.
- Writing Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2nd
- க்ளோஸ்-அப்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- பார்வையற்றோர் நலப் பணி நினவு கூர்தல்