தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !

This entry is part 4 of 29 in the series 24 மார்ச் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 57

என் உறக்கம் போனது  !

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

என்னிடம் விடை பெறாது அவள்
ஏகியதால்
என் விழிகள்  மறந்தன உறக்கத்தை !
நெருங்கி உன்னருகில் நான்
இருந்தாலும்
வருத்தப் படும் நொய்ந்து போய்
இருதயம் !
தவறான போக்கில் பயண மாது
எந்தன் இதயக்  கரைதனில்
வந்திறங்கி விட்டாள்  !
அவள் தவறை அறிந்து கொண்டால்
அலை அடிப்பின்
எதிரோட் டத்தைத்  தவிர்ப்பாள்  !

என் தாழ்ப்பாள் இழுக்கப் பட்டதும்
திறந்த கதவின் வழியாகத்
திடுமெனப்  பாய்ந்தி டுவாள் அவள்
திரும்பவும்  !
சுடும் காற்று குறும்புடன்
தொடும் போது
வெடுக்கென  எழுந்திடும் அவள்
தடுக்கப் படுவாள்
தாமத மான அந்த நேரத்தில் !

+++++++++++++++++++++++++
பாட்டு : 148   தாகூர்  தன் 64 வயதில் [ஜூன் – ஜூலை 1925]  சாந்திநிகேதனத்தில் எழுதிப் பிறகு டிசம்பர்-ஜனவரி 1926 இல் சிரகுமார் சபா  [Drama Chirakumar Sabha ]நாடகத்தில் பயன்படுத்தப் பட்டது.
+++++++++++++++++++++++++


Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  March 19, 2013
http://jayabarathan.wordpress.com/

Series Navigationசரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13வால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *