தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்

Spread the love

ராஜேந்திரன்

ஒரு வழியாய் மீண்டும் வகுப்புகள் திறந்து மாணவர்கள் தங்களின் எல்லையை உணர்ந்து கோஷமின்றி, ஒரு இரு நிமிடம் தினமும் மௌனமாய் நிற்கிறார்கள்.

மாணவர் போராட்டத்தின் போது தமிழ் உணர்வாளர்கள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டவர்கள் மௌனமாய் இருந்தது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

நரிகளாய் அவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பது போல் இதில் தமக்கு ஏதாவது கிடைக்காத என்று காத்திருந்தது நடக்காமலே போனது.

பாலசந்திரன் படத்தின் மேல் நடந்த அரசியலில், சிக்சர் அடித்தது போல் இன்று ஜெ இருக்கிறார்.

கருணாநிதியின் மத்திய அமைச்சரவை சகாக்களின் பல் பிடுங்கப்பட்டது.

அழகிரி இன்று எல்லாம் இழந்து சாமான்யனாய் எப்”போடா” வழக்கு பாயும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இதற்கு ஸ்டாலின் ஆடிய அரசியலே காரணம்.

தமிழக மாணவர்களே கொதித்தெழுந்த போது, உலகளாவிய அளவில் பரவியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் கொஞ்சம் கூட அசையவில்லை.

ராஜ்பாக்‌ஷேவிற்கு கூட இலங்கைப் பிரச்சனை தீர்ந்தால் நல்லது என்ற எண்ணம் இருக்கும்… ஆனால், இவர்களுக்கு..?

ஏன்..?

ஏனென்றால், அமெரிக்க, கனடா, லண்டன் வாழ்க்கையில் அவர்களில் இன்னும் பெரும்பாலோர் இருப்பது, அகதி எனும் நிலைப்பாட்டில்.

இலங்கையில் அமைதி திரும்பி விட்டது எனும் நிலை வருமானால், அவர்களில் பலருக்கும் திரும்பும் நிர்பந்தம் வரும்.

எத்துனை பேர் போவார் திரும்பி.

படித்து, உழைத்து கிடைக்க வேண்டிய வாழ்வு அகதி எனும் நிலையில் கிடைத்திருப்பதை இழக்கத் தான் மனம் உண்டோ அவர்களுக்கு.

இதில் மாட்டியது, மாணவர்கள் தான்.

மாணவர்கள் என்ன செய்யலாம்..?

அடுத்து, பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸை தோற்கடிக்க இவர்களை நிச்சயம் ஜெ உபயோகிப்பார்..

அதற்கு முன், மாணவர்கள் கீழ்கண்டவற்றை தெரிந்து கொள்ளல் நலம்:

பிஜி, மலேசியா, இலங்கை, இங்கெல்லாம் தோட்டத் தொழிலாளார்களாக போனவர்கள் யார்..?

சிங்கப்பூருக்கு சென்ற தமிழர்கள் யார்..?

சாஸ்திரி ஒப்பந்தம் என்ன..?

ஈழத் தந்தை செல்வா முன்னெடுத்து சென்ற வழி என்ன..?

குட்டிமணி, ஜெகன், இவர்கள் யார்..?

மேயர் துரையப்பா சுடப்பட்டது ஏன், யார்..?

பத்மனாபா கொலை நடந்தது ஏன்..?

இபிகேஆர்எல் எப் என்பது என்ன..?

அமிர்தலிங்கம் யார்..? எப்படி யாரால் கொல்லப்பட்டார்..?

பாண்டி பஜார் துப்பாக்கி சூடு சம்பவ பிண்ணனி என்ன..?

எம் ஜி ஆர் – கருணாநிதி – பிரபாகரன் பிரச்சனைகள் என்ன..?

இந்திரா காந்தி , இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காட்டிய தீவிரம் என்ன..?

ராஜீவ் காந்தி , இந்தியாவில் கொண்டு வந்த மறுமலர்ச்சி என்ன.?

ராஜீவ் ஜெயவர்த்தனா எம் ஜீ ஆர் ஒப்பந்தம் எப்படி ஏற்பட்டது.

அதில் தமிழக காங் – மூப்பனார், வாழப்பாடி – நிலை என்ன, ஏன் அவர்கள் பிரபாகரன் இல்லா ஒப்பந்தம் வேண்டாம் எனும் நிலையெடுத்தார்கள்.

அமைதிப் படையின் தவறுகள், அது தொடர்ந்து அதை கையாண்டு நினைத்ததைச் சாதிக்க ஆண்டன் பாலசிங்கம் போன்றோரை உபயோகிக்காமல், ராஜீவ் சிதறடிக்கப்பட்டது ஏன்..?

அது தொடர்ந்து இந்தியா இலங்கையை துவம்சம் செய்யாமல், ஜனநாயக முறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாய் செய்த முயற்சிகள்.

மாத்தையா, கிட்டு போன்றோர் கதி என்ன..?

ராஜதந்திர முறைகள் எதுவும் இன்றி கண்ணில்படுபவர் யாவரும் விரோதியென்ற மனநிலையே, இன்று இந்தப் பிரச்சனையின் காரணம்.

இவற்றையெல்லாம் அறிதல் நலம்.

இன்று தமிழகம், உழைக்க மறுக்கும் ஒரு கும்பலின் கட்டப்பஞ்சாயத்துக் கலாச்சாரத்தால், தமிழ்ர் தம் மனங்களில் விஷ விதைகள் விதைக்கப்படுகின்றன.

மண்ணின் மைந்தர் உரிமை கூறுபவர்கள், ஏன் பிற நாடுகளில் போய் புலம் பெயர்கிறார்கள்…?

தமிழ்கத்தை பிரிவு சக்திகளிடமிருந்து காப்பது காலத்தின் கட்டாயம்.

காங்கிரஸ், பிஜேபி எனும் இரண்டு தேசிய கட்சிகளிலும் தமிழர்கள் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தல் வேண்டும்.

கே என் நேரு, வீ.ஆறுமுகம் பசங்க, பொன்முடி ராசா இவர்களெல்லாம் தலைவர்கள் எனும் தலைவிதி மாற வேண்டும்.

ஓ பன்னீர் செல்வம் சொத்து பற்றியும், நத்தம் விஸ்வநாதன் பற்றியும் திண்டுக்கல், கோடைக்கானலில் கேட்டுப் பாருங்கள்.

மூட்டப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாய் அன்றி, வரும் பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், பிஜேபி கட்சியினருக்கு முன்னுரிமை கொடுப்போம்..

Series Navigationகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்புசின்னஞ்சிறு கிளியே

2 Comments for “மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்”

 • Suganya says:

  Dear Rajendran,
  குறித்த பிரச்சனைகள் பற்றி உங்கள் உளப்பாட்டை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மாணவர் போராட்டம் பற்றிய உங்களது அபிப்பிராயத்தினை நீங்கள் எழுதியுள்ளீர்கள். அவற்றினைப் பற்றி நான் கருத்துக் கூறவில்லை.
  நான் இலங்கையில் வட பகுதியில் வசித்துவரும் ஒருத்தி என்ற வகையில் குறித்த ஒரு விடயம் தொடர்பாகக் கருத்துக் கூற விரும்புகிறேன்.
  உங்களுடைய சில வரிகள் மனதிற்கு சினமூட்டுபவையாக இருக்கின்றன
  தமிழக மாணவர்கள் கொதித்தெழுந்தபோது உலகளாவிய ரீதியில் பரவியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் கொஞ்சமும் அசையவில்லை என்பது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எதை வைத்து உங்களால் அப்படிச் சொல்ல முடிந்தது? ஒரு விடயத்தினைத் தெரிந்து கொள்ளுங்கள். அகதி என்ற நிலைப்பாட்டில் இருப்போர் அங்கு வாய் திறப்பதில்லை. அங்கு குரல் கொடுப்போர் அந்தந்த நாட்டிற்குரிய பிரஜா உரிமைகளைக் கொண்டிருப்போர் தான். முடிந்தால் அந்தந்த நாட்டில் ஈழ அகதிக்களுக்கு எத்தகைய உரிமைகள் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்வையிட்டு பின்னர் எழுதுங்கள்.

 • ஷாலி says:

  கேள்வி கேட்க மட்டுமே தெரிந்த தருமி போல் ஏராளமான கேள்விகளை கட்டுரையாளர் அடுக்கி வாசகர்கள் கண்ணைக்கட்டி சுற்றி விட்டு விளையாட்டு காட்டுகிறார்.அவர் எழுப்பும் கேள்விகளுக்கு அவரே பதிலை கொடுத்து விட்டால் புண்ணியமாக போகுமே! கொடுக்க மாட்டார்.அவர் அடையாளம் அம்பலப்பட்டு விடும் என்று அவருக்கு நன்கு தெரியும்.கேள்வி ஊஞ்சலில் ஆடி, ஓடி மறையும் இவர் ஒரு மாயக்கண்ணன்.
  தமிழர்களை மழுங்கடித்த தறுதலை தலைவர்களைப்போல் மாணவ செல்வங்களின் தமிழ் இன உணர்வை மட்டுப்படுத்த மந்திரம் போடுகிறார்.இறுதியில்,காங்கிரஸ்,பாஜக கட்சியில் சேர கொக்கி போடும்போது, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. கட்டுரையாளர் நற்சான்றிதழ் பெற்ற இரு கட்சிகளின் பாராளு மன்ற உறுப்பினர்கள் தற்போது ராஜபக்சேயிடம் பரிசு வாங்க போயுள்ளார்கள்.இரண்டு கூட்டு களவானிகளும் சேர்ந்தே தமிழினத்தை ஒழித்ததற்க்கு பரிசு கொடுத்துத்தான் ஆகவேண்டும்.


Leave a Comment

Archives