தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

ஆட்டுவிக்கும் மனம்

வே பிச்சுமணி

Spread the love

மண்ணில்  மீண்டும் முளைக்க  புதைத்த பற்கள்

விண்ணில் மிளிரும்  வின்மின்களாய்  ஒளிருது

உன்னிடம் கதையாய்  சொன்ன என்மனம்

மண்ணில் உன்னை புதைத்து விட்டு

விண்ணில் தேட அறிவு  மறுக்குது

இன்பங்கள்  கனமாகின்றன

துன்பங்கள் எளிதாகின்றன

ஏழு வயதில்  மறைந்த பெண்ணை

இருபது வயதில்   வரைய வண்ணமில்லை

தடைபட்ட கனவுகள்

எப்படி தொடர்ந்திருக்கும்

ஊகிக்க  வழிதெரியாமல்

திண்டாடும்  மன ஆடுகள்

திண்டாட்டம் கடை நாளில்தான்

தீருமென தெரிந்தும்

வயற்றில்  உள்ள கனத்தை

நினைவில் அசை போடும்

ஆட்டு விக்கும் மனம்

 

 

ve.pitchumani

Series Navigationதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்

One Comment for “ஆட்டுவிக்கும் மனம்”

 • chithra says:

  Gosh!! It is so heart touching..These lines has brought out the whole expression ..so heart breaking..

  “மண்ணில் உன்னை புதைத்து விட்டு
  விண்ணில் தேட அறிவு மறுக்குது
  இன்பங்கள் கனமாகின்றன
  துன்பங்கள் எளிதாகின்றன”

  “தடைபட்ட கனவுகள்
  எப்படி தொடர்ந்திருக்கும்”


Leave a Comment

Archives