தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

உஷாதீபன்

Spread the love

முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும் என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. வேளாண் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி கண்காணிப்புப் பொறியாளராக 2004 ல் பணி நிறைவு பெற்ற இவர் மதுரை தானம் அறக்கட்டளையின் நீர்வளப் பிரிவில் திட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர்வள மையத்தில் நான்காண்டு காலம் திட்டப் பொறியாளராகப் பணியாற்றியபோதும், பெரியாறு வைகை பாசன மேம்பாடு திட்டப் பணிகளின் செயலாக்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தபோதும், பெரியாறு அணை பற்றிய பல விபரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர். தெிலிருந்தே பெரியாறு அணைப் பிரச்சனை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வந்து, இந்தத் தருணத்திற்கேற்றவாறு விவரங்களைத் தொகுத்துள்ளார். நீர்வள நிர்வாகம் பற்றிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மார்ச் 2009ல் துருக்கியில் (இஸ்தான்புல் நகர்) நடைபெற்ற 5-வது உலக நீர்வள மாநாட்டில் பெரும் அணைகளுக்கான பன்னாட்டு ஆணையம் முன்னின்று நடத்திய தேவைகளுக்கேற்ற நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உறுதி செய்தல் எனும் கருத்தரங்கிற்று இவரது கட்டுரை தேர்வு செய்யப்பட்டதோடு உலகளவில் தேர்வு செய்யப்பட்ட ஆறு பேச்சாளர்களில் இவரும் ஒரு பேச்சாளராக அங்கு உரையாற்றினார்.ஜூன் 1997 ல் டான்சானிய நாட்டில் நடைபெற்ற நீர் வடிப்பகுதிகளில் மேம்பாடுபற்றிய கன்னாட்டுக் கருத்தரங்கிற்கும் அவரது கட்டுரை தேர்வு செய்யப்பட்டு அங்கும் உரையாற்றியுள்ளார். இப்புத்தகத்தை தமிழோசை பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. முகவரி – 21 கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் கணபதி, கோவை-641006.(செல்-9788459063) விலை ரூ.45 மட்டுமே.

மு.பெ.

முல்லைப் பெரியாறு

Series Navigationபுத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்வாய் முதலா? வட்டக்குதம் முதலா?

One Comment for “புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்”

  • ushadeepan says:

    முல்லைப்-பெரியாறு அணை – வரலாறும் தீர்வும் என்ற இப்புத்தகத்தை எழுதிய மேன்மை மிகு பொறியாளர் அவர்களின் பெயர் திரு இரா.வெங்கடசாமி. தகவலுக்காக. – உஷாதீபன்


Leave a Comment

Archives