( 8 ) வணக்கம்ங்கய்யா….-கை கூப்பிச் சொல்லியவாறே ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்து பதில் வணக்கம் சொன்னான் இவன். ஐயா…கீழுத்து கிராமத்துலேர்ந்து வர்றேனுங்க…பக்கத்து வெங்கிமலைல ரெண்டு நாளா சரியான மழைங்க… நின்றுகொண்டே சொன்ன அவரை, முதல்ல உட்காருங்க….என்றான் இவன். இருக்கட்டுங்கய்யா…என்றவாறே பேச்சைத் தொடர்ந்தார் அவர். இந்த அலுவலகத்திற்கு வந்த நாள் முதல் கவனித்துக் கொண்டுதான் வருகிறான். வருகிறவர்கள் கிராமத்து மக்கள். ரொம்பவும் பயந்தவர்களாயும், மரியாதை கொண்டவர்களாயும், இருக்கிறார்கள். பொது ஜனம் அலுவலகங்களை அணுகும்போது அவர்களுக்கு ஏனிந்தத் தயக்கம்? […]
இருக்கட்டு;ங்கய்யா…பன்னெண்டு மணி வரைக்குமாச்சும் எரியட்டும்..;பிறகு அணைச்சிக்கிடுவோம்…- சிரித்துக் கொண்டே சொன்னார் லட்சுமணன். நம்ம வீடுகள்னா இப்டி பகல்ல லைட்டுப் போடுவமா? இந்த எடத்துலெ எவ்வளவு வெளிச்சம் இருக்கு…அது போதும்…அணைங்க… கேட்கமாட்டீங்களே… என்றவாறே விளக்கை அமர்;த்தினார் லட்சுமணன். எந்தமாதிரியான சூழ்நிலைல உட்கார்ந்திருக்கோம்ங்கிறதைவிட, எப்படி வேலைசெய்கிறோம்ங்கிறதுதானே முக்கியம் லெட்சுமணன்? அது உள்ளதுதானுங்க…ஆனாலும் பொதுமக்கள் வந்து போகுற இடமில்லீங்களா? பார்வையா இருந்தாத்தானே மதிப்பா இருக்கும்… அவுரு சொல்றதும் சரிதான சார்…நீங்க ரொம்ப சிம்பிள் சார்…அப்படியிருக்கக் கூடாது…ஆபீசுக்குன்னு உள்ள ஸ்டேட்டசை மெயின்டெய்ன் பண்ணத்தான் […]
( 6 ) அய்யா, இங்கே சொருகட்டுங்களா…? – கேட்டவாறே எரிந்து கொண்டிருக்கும் பத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்துக் கொண்டிருந்தார் பியூன் லட்சுமணன். இந்த பாருங்க லட்சுமணன், நான் உங்களுக்குப் பலமுறை சொல்லிட்டேன்…என்னை இப்படி ஐயா கொய்யான்னெல்லாம் கூப்பிடாதீங்கன்னு…கேட்க மாட்டேங்கிறீங்க. சாதாரணமா சார்ன்னே கூப்பிடுங்கன்னு சொன்னா திரும்பத் திரும்ப இப்டியே கூப்பிடுறீங்களே? எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு… ஐயா, உங்களை மாதிரி மனுசாளைக் கூப்பிடாம வேறே யாரைக் கூப்பிடச் சொல்றீங்க? நல்ல மனசுள்ளவாளைத்தான் மனசோட […]
ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த இவன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். அந்தப் பையனோடு தனித்தே நின்று பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. உங்க பேரு என்ன தம்பி? மம்மது சார்… அவன் சத்தமாகக் கூறியதைக் கேட்ட இவன், மெதுவா…மெதுவா…பொது இடங்கள்ல சத்தமில்லாமப் பேசணும்…என்றான் அவனைப் பார்த்து. சரி சார்…என்று தலையாட்டிய அவன் ‘எங்கப்பாவுக்குச் சேர வேண்டிய பணமெல்லாம் கொடுத்துட்டீங்களா சார்…? – என்றான் அடுத்தபடியாக. அவன் ஏதோ பிரச்னையோடுதான் […]
பஸ்ஸில் அமர்ந்த கையோடு பையில் வைத்திருந்த சிறு நோட்புக்கை எடுத்து அன்று அலுவலகம் சென்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசித்து எழுத ஆரம்பித்தான். தனது இருப்பின் தன்மையில்தான் அதன் பொறுப்புணர்ச்சியில்தான் அலுவலகத்தின் சீரான இயக்கமே உள்ளதாய்த் தோன்றியது. சற்றே நெகிழ விட்டால் ஒரேயடியாய் நெகிழ்ந்து தளர்ந்து முடமாகி ஸ்தம்பித்து விடுகிறது. தான் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையில்தான் அலுவலர் நிம்மதியாய் முகாம் செல்கிறார். திட்டப்பணிகளைக் கவனமாய்க் கண்காணிக்க முடிகிறது. அந்த வகையில் தனது பங்கு மிக […]
“உங்க ஆபீஸர் பேசினார். வந்தவுடனே உங்களைப் பேசச் சொன்னார்…” “வண்டி பஞ்சராயிருக்கு. நல்ல வேளை அவனை விட்டுட்டுத் திரும்புறபோதுதான் பஞ்சர். இல்லைன்னா அவன் ஸ்கூல் போறதும் லேட்டாயிருக்கும்…” என்றவாறே மெதுவாய் வண்டியை உருட்டி வந்து வராண்டாவில் ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு வந்ததில் மூச்சிரைத்தது. “வழியிலே ஏதாச்சும் ஒர்க் ஷாப்புல விட வேண்டிதானே…?” “ஏழு மணிக்கு எந்த ஒர்க் ஷாப் திறந்து வச்சிருக்கான்…? ஒன்பதாகும்…பாஸ்கரன்ட்டத்தான் விடணும்…” அன்று பஸ்ஸில்தான் […]
“அப்பா, நீ குளிக்கப் போகலாம்…” என்றவாறே வெளிப்பட்ட ரமேஷைப் பார்த்து ‘தலையை அழுந்தத் துடை’ என்றான். சென்ற வருடம்வரை இவன்தான் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் வேண்டாம் என்கிறான். உடம்பைத் தொட்டுத் துடைத்தால் கூச்சப்படுகிறான். ஒரு நாள் அவன் தலையில் கைவைத்துப் பார்த்தபோது, சொட்டச் சொட்ட ஈரம் தென்பட்டது. “இந்தத் தண்ணீர் அப்டியே தலைல இறங்கும்…சளி பிடிக்கும்…அதனால ஈரம் போகத் துடைக்கணும்…புரிஞ்சுதா?” – என்றவாறே நன்றாகத் துவட்டிவிட்டான். வேண்டாம் என்று சொல்லும்போது தினமும் எப்படித் துடைப்பது? அந்தச் சிறு […]
( 1 ) நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு. “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?” “இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…” “நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா நல்லாயிருக்கும்…பிறகு சனி, ஞாயிறு வந்திடுது…” “இவனுக்குள் கோபம் கிளர்ந்தது. ஒரு வேலை தன்னை மட்டுமே சார்ந்து இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாகச் செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படியில்லையே? சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், அலுவலர், […]
உஷாதீபன் ushaadeepan@gmail.com சார்…சார்…விட்ருங்க…. – சத்தமாகவே சொன்னார் அவர். பதறிப் போய் ஓடி அந்தப் பையனைத் தூக்கப் போனதைத்தான் அப்படித் தடுத்தார். அதற்குள் அந்தப் பையனாகவே எழுந்து, வண்டியையும் தூக்கி நிறுத்தி, சட்டென்று கையிலும், காலிலும் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு, திரும்பவும் வண்டியை உயிர்ப்பித்து, டுர்ர்ர்….என்று சீறிக்கொண்டு கிளம்பி விட்டான். அப்போதும் இடது கையில் அவனது கைபேசி இருந்தது. இப்பயும் என்ன வேகம்? எப்படிக் க்ளட்ச்சைப் பிடிப்பான் எப்படிப் பாதுகாப்பாய் ஓட்டுவான் என்று […]
உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. யாரை எப்பொழுது எப்படி மடக்குவாள் என்று யாராலுமே கூற முடியாது. மடக்குகிறாளா, மடங்குகிறார்களா தெரியவில்லைதான். இத்தனை நாள் இவளைப் பற்றியே நினைக்க வைத்துவிட்டாள். எந்த நேரமும் தன் நினைவில் இருந்திருக்கிறாள். படுக்கையில் […]