தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !

This entry is part 14 of 23 in the series 16 ஜூன் 2013

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

பிரியும் வேளை வந்து விட்டால்

பிறகு விட்டுச் செல்

எனக்கு  இறுதியில் உனது

மன நிறைவுப் பூர்த்தியை !

காலங் காலமாய் நான்

காலவெளியில்

மிதக்க விடுவேன் வெகு தூரத்தில்

எனக்குரிய

கனவுக் கீதங்களாய் !

பலகணி வழி நீ பார்க்க வருகிறாய்  

சில சமயம்

நானங்கே இல்லாத போது !  

எனைக் காண முடியாத அங்கு

எனக்குரிய ஓர்  பலகணி !

 

கானகத்தின் எல்லையில்

மோனமாய் மல்லிகை போல் பூங்கொடி

சோக நறுமண ரகசியத்தைச்

சொல்லும் நமக்கு !

கிளை மேலிருக்கும்  

மழைக் காலப் பறவை ஒன்று

திரும்பி உன் நினைவைக்

கொண்டு வராது  !

ஈரடிப்புக் கருநிழலில்

பிரிவாய்க் காட்டும் உடற்குறிப்பு !

பிரிவுக் குறிப்புணர்த்தும்

சைகையில்

புரியும் எமக்குள் இருக்கும்

ஐக்கியம்  !

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 174   1925 அக்டோபரில் தாகூர்  64 வயதினராய் இருந்த போது சாந்திநிகேதனில் நிகழப் போகும் புதிய இசை நாடகத்துக்கு எழுதிய பாடல் இது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 10, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 11யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *