தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்

This entry is part 17 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

ரா.பிரேம்குமார்,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி,

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்.

முன்னுரை:

ஒரு மொழியின்கண் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றை வரையறை செய்து விளக்குவது இலக்கணமாகும். இவ்விலக்கணத்தில் மொழியின் வளமை, மரபு மற்றும் கட்டமைப்பு வரையறைகளை விளக்குவதிலும் இலக்கணம் இன்றியமையாத இடம் வகிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்குமே இலக்கணக் கட்டுக்கோப்பும் வரையறையும் உண்டு. இவ்வாறு இல்லாமற் போயின் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாமல் போய்விடும். தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் மற்றும் நடுத் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தெலுங்கு ஆகிய இரு மொழிகளின் கட்டமைப்பையும் வரையறைகளையும் விளக்குவதில் இலக்கண நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இம்மொழிகளில் தோன்றிய இலக்கண நூல்களான முறையே தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணி எனும் இருபெரும் இலக்கண நூல்களில் உள்ள வினையடிகளை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.

வினை  என்பதன் பொருள்

இரண்டு, ஊழ், கருத்து, கள்ளம், தொழில், போர், வஞ்சகம் செய்தற்குரியது, பரிகாரச் செயல், தீச்செயல், தந்திரம், தொந்தரவு ஆகிய பொருண்மைகளில் அகராதியில் வினை என்ற ஒரு சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் பதிவாகி உள்ளன.

வினையடி என்பதன் பொருள்

வினையடி   என்பது   வினைக்குப்   பின்னால்   கால
இடைநிலைகளும்
அவற்றுக்குப்  பின்னால்  ஒன்றிரண்டு  இடங்களில்  சாரியையும்
அதன்  பின்னர்

விகுதியும் நீங்;க வினையை அல்லது தொழிலை மட்டுமே குறிப்பது வினையடி எனப்படும். ஒரு வினைச்சொல்லின் வேர்ச்சொல்லை மட்டும் காண்பதனை ஒப்பது, அதனில் தொழில் அல்லது வினை இடம்பெற்றிருப்பது வினையடி எனலாம்.
தொல்காப்பியத்தில் வினை

தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் ஆறாவது இயலாக வினையியல் இடம்பெற்றுள்ளது. இங்குத் தொல்காப்பியர் கூறிய கருத்தும் இலக்கண முன்னோர் கருத்தும் இணைந்து இடம்பெற்றிருக்கின்றன. மொத்தம் 49 நூற்பாக்களில் வினை, வினையின் வகை, திணை, பால், எண், இடம் போன்றவற்றிற்கு ஏற்பச் சொற்களில் ஏற்படும் மாற்றஙகளையும் அவற்றின் வகைபாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

நூற்பா: வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது

நினையுங் காலைக் காலமொடு தோன்றும்

(தொல். சொல். 195)

பொருள்: வினை என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமையைக் கொண்டு நிற்பதும் ஒரு நிலை உண்டு. அந்நிலை மட்டுமல்லாது காலத்தோடு பொருந்தி நிற்பதும் வினைச்சொல் என்று பொருள்படும்.

காலத்தின் வகை

நூற்பா:    இறப்பின் நிகழிவின் எதிர்வின் என்றா

அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும்

மெய்நிலை உடைய தோன்றலாறே    (தொல்.சொல். 196)

பொருள்: காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன இவை குறிப்பொடுங் கொள்ளும் பொருள் நிலைமை உடையவாறு தோன்றும். தொல்காப்பியர் உடைய என்று நூற்பாவில் கூறியுள்ளது மூன்று காலத்திற்கும் பொருந்தி வரக்கூடியது. இச்சொல் வேற்றுமை உருபினை ஏற்காது, காலம் குறித்து வந்தடைவு பெற்றுள்ளது எனலாம்.

ஆந்திர சப்த சிந்தாமணியில் வினை

நூற்பா: உபக்ருதி பரிணதி ஸம்வ்ருதி பேதா த்த்ரிவிதா க்ரியா

பொருள்: உபக்ருதி, பரிணிதி, ஸம்வ்ருதி என்று வினை மூன்று வகைப்படும்
என்கிறது,

1. உபக்ருதி  வினை:  க,  ஞ்,  க்திஞ்  போன்ற  க்ருத்  உருபு  இறுதியாகக்
கொண்ட வேர்ச்சொற்களில் வரும்.

பரிணதி வினை: அய், அவ், அர் என்ற எழுத்துகளை ஏற்று இயற்கையாக வரும்.

ஸம்வ்ருதி வினை: உபதேசக் காலத்தில் இயற்கை வடிவத்துடன் கூடி இயல்பாக வரும் என்று சூத்திரங்களின் வழி அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் வினையடி

நூற்பா:    அம் ஆம் எம் ஏம் என்னுங் கிளவியும்

உம்மொடு வரூஉம் கடதற என்னும்

அந்நாற் கிளவியோடு ஆயெண் கிளவியும்

பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே    (தொல்.சொல்.)

பொருள்: அம் முதலாக ஓதப்பட்ட எட்டீற்றினையும் உடைய சொல் உயர்திணைப் பொருட்கண் தன்னொடு கூடிய பன்மை வினை உரைக்கும் சொல்லாம். இந்நூற்பா உணர்த்துவது தன்மை உரைக்கும் வழி விளக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக உளப்பாட்டுத் தன்மை உடைய பன்மைச் சொற்கள் சொற்களில் தன்மைப் பன்மையில் வினையடிகள் கையாளப்பட்டுள்ளதை விளக்குகிறது.

உண்டனம், உண்கின்றனம், உண்பம்

உண்: வினையடியாக வந்து தொழில் உணர்த்தி நிற்கும் சொல்லாகும். முறையே மூன்று கால இடைநிலைகளுக்கும் ஏற்ப உண்(டு), கின்று, பு என்பன காலம் காட்டும் இடைநிலைகளாக வந்துள்ளன.

உண்டனம்: (உண்) வினையடி இறந்த காலம் உணர்த்தும் வினைச்சொல்லில் (உண்) என்பது வினையடியாக இடம்பெற்றுத் தொழில் உணர்த்தி நிற்கிறது எனலாம்.

உண்கின்றனம்: இவ்விடத்தில் ‘உண்;’ என்ற வினையடிச் சொல் நிகழ்காலம்;;;;;;;;;;;;; உணர்த்தி – அன்சாரியை பெற்று அம் விகுதியோடு வந்துள்ளது.

உண்பம்: உண் என்பது இவ்விடத்தில் எதிரகாலம் உணரத்தும் வினையடிச் சொல்லாக இடம்பெற்றுள்ளது.

நூற்பா:
அவற்றுள்

செய்கென் கிளவி வினையொடு முடியினும்

அவ்வியல்
திரியா தென்மனார்
புலவர்
(தொல்.சொல்.)

பொருள்:
செய்கு
என்னும்
சொல்
வினையொடு
முடிந்துழியும்
பாலுணரத்தும் தத்தம் இயல்;பில் இருந்து திரியாது இயற்கையாக வரும்.

காணகு யான:
காண்
என்பது
இங்கு
வினையடியாக
அமையப்பெற்றுள்ளது.
இதில் உயர்திணைப் பாலுணரத்தும் சொல்லாக இருப்பினும்

பொதுவாகப் பலரபால் உணர்த்தும் பன்மைச சொல்லாக இவ்விடத்தில் இடம்பெற்றுள்ளது. “னஃகான் ஒற்று ஆடூஉ அறிசொல்” என்பது விதி. இதில் காண், யான் என்ற இரு சொற்கள் பாலையும் குறிப்பாக உணர்த்தாது, பலர்பாலை உணர்த்திப் பொதுவினையாக வந்துள்ளன.

உயர்திணைக் குறிப்பு முற்றில் வினையடி

நூற்பா:    பன்மையும் ஒருமையும் பாலறி வந்த

அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்

காலக் கிளவி உயர்திணை மருங்கின்

மேலைக் கிளவியோடு வேறுபாடிலவே    (தொல்.சொல்.)

பொருள்: பன்மையும் ஒருமையும் ஆகிப் பால் விளங்க வந்தனவாகிய மேற் சொல்லப்பட்ட மரபினாகிய குறிப்பொடு வரூஉங் காலத்தையுடைய சொல் உயரதிணை மருங்கின் மேற்சொல்லப்பட்ட சொல்லோடு வேறுபாடில்லை.

எ –  டு:

உடையம்: உடை – வினையடி. தொழில் உணர்த்தி வரும் தெரிநிலை. இச்சொல் உளப்பாட்டுத் தன்மை வகையைச் சார்ந்தது. அம் விகுதி தன்மைப் பன்மை விகுதியாக வந்துள்ளது.

உடையன்: உடை – வினையடி. தொழில் உணர்த்தி வரும் தெரிநிலை. வினைச்சொல் தனித்தன்மை வகையைச் சார்ந்தது. இங்கு விகுதியாக அன் உருபு இடம்பெற்று ஆண்பால் வினைமுற்று விகுதியாக வந்துள்ளது.

ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையடி

நூற்பா:
அநு  பந்த  ப்ரார்த  நயோர்  ணௌ
வ்யதி  ரேகாதி
கேசா

பஸ்ஸாத்

பொருள்
ஒரு
சொற்றொடரில்
இடைச்சாரியை
உருபுகள்
வரும்போதும்

வேண்டுகொளை
உணர்த்தும்
சொற்கள்  வரும்போதும்
ணிச்

என்ற  உருபு  வரும்போதும்;;;;  அச்சொல்லில்  எதிரமறைப்பொருள்

வரும்போதும்  முதல்  மொழியினில்  ஏழாம்  வேற்றுமை  உருபு

வரும்போதும்
மாற்றங்கள்
நிகழும்.
(இஞ்சு)
உருபுக்குத்

தொடர்புடைய நு உருபுக்குப் ப கரம்
வரும். இவ்வாறு
வரின்

அச்
சொற்றொடரில்
மாற்றம் நிகழும்.

எ –  டு:
போஷிஞ்சு சுந்நாடு (காப்பாற்றிக் கொணடிருக்கிறான்)

நுதிஞ்சு அந்நாடு (போற்றிக் கொண்டிருக்கிறான்)

ஐயிஞ்சு அந்நாடு (வெற்றி கொணடிருக்கிறான்)

இந்த
மூன்று
வினைச்  சொற்களும்  நிகழ்காலத்தை
உணரத்தும்

துணை
வினைச்
சொற்களாக
இடம்பெற்றிருந்தாலும்
இவற்றில்

வினையடியாக,

போஷி

காத்தல்

நுதி

போற்று

ஐயிஞ்சு

வெற்றி

மேற்கண்ட மூன்று சொற்களும் தொழில் உணர்த்தும் உளப்பாட்டுத் தன்மை வினையாக இடம்பெற்றுள்ளன எனலாம்.

தன்மை ஒருமையில் வினையடி

நூற்பா:    ப்ரதமை கவசந லோப ஸ்தத் தர்மா தீதயோ க்ரியாணம்
ஸ்யாத்

பொருள்:    தத்  தர்மப்  பொருளிலும்  இறந்த  காலப்  பொருளிலும்
வினைச் சொற்களின் தன்மை ஒருமை கெடும் என்பதாம்.

எ –  கா:   போஷிஞ் சுந் (காத்து)

ம்ரொக் ருந் (வணங்கி)

இவை தன்மை ஒருமையில் இடம்பெற்றிருக்கும் வினைச் சொற்களாகும். இவற்றில் வினையடியாகப்

போஷி, மரொக்க

என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கில் வினையடிகளை வினைச் சொற்களாக மாற்றி இருப்பதால் தேசிய வினைகள் அதிகம் இருக்கும். இங்குத் தேசியம் என்பது தூய தெலுங்குச் சொற்கள் என்று பொருள்படும் எனலாம்.

நூற்பா:    ஸ்த்ரீவ தே கவச நந்து

பொருள்: எழுவாயாக வரும் வினைச் சொற்களில் உயர்திணை அல்லது அஃறிணையைக் குறிக்கும் பெண்பாற் சொல்லை எதிர்மறையில் எதிர்காலத்தினை உணர்த்தும்;;;; முன்னிலை ஒருமைச் சொல்லுக்கு து உருபு வரும் நிகழ்கால முன்னிலை ஒருமைக்குத் தி உருபும் வரும் என்பதாம்.

எ –  கா:   சிலுக ரஞ்ஜில் லுநு (கிளி மயங்காது)

சிவுரு வில ஸல்லது (தளிர் விடாது)

இவ்வெடுத்துக்காட்டில் உள்ள சொற்களில் வினையடியாக ரஞ்ஜி, ஸில் என்னும் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இச்சொற்கள் முன்னிலை ஒருமையைக் குறிக்கும். அஃறிணைப் பொருளில் வரும் துணை வினைகளாக இடம்பெற்றுள்ளன.

முடிவுரை

; திராவிட மொழிக் குடும்பத்தைச் சாரந்த தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் வினைச் சொல்லில் இருந்து வினையடிகள் இங்கு எடுத்தாளப்பெற்று விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் வினை என்பதற்குத் தெளிவான விளக்கமும் வரையறையும் தரப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கு இலக்கண நூலான ஆந்திர சப்த சிந்தாமணியில் அவ்வாறு விளக்கப்பெறவில்லை. எனினும் இரண்டு நூல்களுமே வினை, வினையடிகளைத் தெளிவாக விளக்கியுள்ளன. ஆந்திர சப்த சிந்தாமணி தேசிய வினைகளாகச் சமஸ்கிருதத்தில் இருந்து உள்வாங்கி வினையடிகளை வினையாக மாற்றும் செயலினை விளக்குகிறது. இரணடு இலக்கண நூலிலுமே வினையடிகள் மூவிடங்களிலும் எவ்வாறு வரும் என்பதனை இதன்வழித் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

துணை நின்றவை

தொல்காப்பியம் சொல்லதிகாரம், கழக வெளியீடு
முனைவர் சி. சுhவிதரி (மொ.பெ.) ஆந்திர சப்த சிந்தாமணி

முனைவர் பொற்கோ, இலக்கண உலகில் புதிய பார்வை (தொகுதி –  3)

முனைவர் இரா. அறவேந்தன், சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்

முனைவர் ச. அகத்தியலிங்கம், தமிழ் மொழி அமைப்பியல்
சமூகத் தமிழ் அகராதி, கழக வெளியீடு

Series Navigationபாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!தூங்காத கண்ணொன்று……
author

ரா.பிரேம்குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *