வால்ட் விட்மன் வசனக் கவிதை -39 என்னைப் பற்றிய பாடல் – 32 (Song of Myself) கடவுளின் கை வேலை .. !

This entry is part 7 of 15 in the series 1 செப்டம்பர் 2013

 

 

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

இறைவன் செயலுக்குத் தடங்கலின்றி

மருத்துவன் கிடைப்பான்.

முதியவன் கை அழுத்திடப்

பெறுவதையும்,

உதவி செய்வதையும் காண்கிறேன்.

பலகணியில் சாய்ந்து கொண்டு

குறித்துக் கொள்கிறேன்,

வெளிச் செல்லும் வாசலை,

பிழைத்துச் செல்லும் பாதையை !

பிரேதமே !

உன்னைப் பற்றிச் சொல்வேன்,

நல்லதோர் உரம் நீ !

உறுத்த வில்லை என்னை அது !

இனிதாய்

நறுமணத் தோடு வளரும்

வெள்ளை ரோஜாவை

நுகர்கிறேன்.

 

புல்லின் இதழ்களை முத்தமிடச்

செல்கிறேன்; மினுக்கும்

முலாம் பழக் கொங்கைகளை

தழுவப் போகிறேன்.

வாழ்வே ! உன்னை

ஆழ்ந்து அலசிப் பார்த்தால், நீ

பல்வேறு மரணங்கள்

வெளிப்படுத்தும் வாசல் என்று

சொல்வேன் !

பல்லாயிரம் தடவை நானே முன்பு

செத்துள்ளேன்,

சிறிதும் ஐய மில்லை !

 

வானத்து விண்மீன்களே !

மோனமாய் நீவீர்

முணு முணுப்பது கேட்கிறது

எனக்கு !

சூரியன்களே ! 

சுடுகாட்டுப் புல்லிலைகளே !

ஓயாத இட மாற்றம்,

பதவி

உயர்வுகள் தெரியுது !   

இலையுதிர் காலத்தில்

உண்டானது

மண்டி நீர் கலந்த

தடாகம் !

அந்திமாலைச் செவ்வானில்

நிலவை விட்டு  

மேலே செல்கிறேன்.

இருளைத் தாண்டி மேலே

ஏறுகிறேன்.

பகலின் தீவிரப் பரிதிக் கதிர்கள்

பேய்களாய்ப்

பிரதிபலிக்க உணர்கிறேன் !

 

 ++++++++++++++++++++++

 

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (August 29, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 22டௌரி தராத கௌரி கல்யாணம் ……17
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *