வால்ட் விட்மன் வசனக் கவிதை -40 என்னைப் பற்றிய பாடல் – 33

This entry is part 6 of 24 in the series 8 செப்டம்பர் 2013

(Song of Myself)

மர்ம நண்பன் .. !

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

 

ஏதோ ஒன்று அதோ அதுதான்

எனக்குள்ளே உள்ளது ! 

அது என்ன வென்று அறியேன் !

ஆயினும்

அது என்னுள் உள்ளதென

அறிவேன் !

நசுக்கப் பட்ட எனக்கு

வேர்த்துள்ளது !

சூடு தணிந்து

உடல் அமைதி அடைந்து

உறக்கம் வந்தது !

நீண்ட நேர உறக்கம் !

அது என்ன வென்று நான்

அறியேன்;

அதற்கொரு பெயரும் இல்லை !

வாய் உரைக்க முடியாத

ஒரு வார்த்தை !

 

 

எந்த ஓர் அகராதி யிலும்

இல்லை அச்சொல் !

எந்த ஓர் மொழியிலும்

இருப்ப தில்லை.

எந்தச் சின்னத்திலும்

இல்லை.

நான் ஊசலாடும் இந்த

ஞாலத்தை விட்டு

ஏதொன்றின்

மூலம் தூரி யாடுது !

படைப்போன் அதற்கு

நண்பன் !

அவன் அணைப்பு

எழுப்பி விட்ட தென்னை !

 

 

இன்னும் சொல்ல முடியும்

என்னால்.

மேற் போக்காகக் தான்

கூற முடியும்.

என் சகோதர, சகோதர ருக்காக

மன்னிப்புக் கேட்கிறேன்.

காணத் தெரியுதா,

சகோதர, சகோதரிகளே !

புரட்சி இல்லை,

மரண மில்லை, அது

ஓர் உருவாக்கம் !

ஐக்கியம் ! 

திட்டம் !

நிரந்தர வாழ்வு !

நிம்மதி, 

மகிழ்ச்சி அது !  

 

++++++++++++++++++++++

 

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (September  3, 2013)
http://jayabarathan.wordpress.com/

 

 

Series Navigationஉடலின் எதிர்ப்புச் சக்திஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *