(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
நொடித்துப் போய் நோகச் செய்யும்
நதிகளி லிருந்தும்,
என் தளர்ச்சி நிலையி லிருந்தும்
மீட்சி யில்லை எனக்கு !
அவை யில்லாமல் நான்
எதுவும் இல்லை !
அவை மூலம் உன்னதம்
அடையத் தீர்மானம் செய்தேன்,
மனிதருள் நான்
தனித்து நின்ற போதும்.
என் குரலே ஒருங்கிசைத்து
எதிரொலிக்கும்
ஆண்குறியைப் பாடி !
இனப் பெருக்கத்தைப் பாடி,
தேவை யான
உன்னத சிசுக்கள்
உருவாக்கும் முறையைப் பாடி,
அவை மூலம்
உன்னத மனிதர் படைக்கும்
உடலுறவுத்
தூண்டலைப் பாடி,
கூடிக் கலந்து,
தடுப்பில்லா மோகத்தில் எனது
படுக்கைத் துணைவியின்
பாட்டைப் பாடி,
எந்த ஒரு மேனிக்கும்
ஒவ்வோர் மனித உடலுக்கும்
உள்ளதோர்
ஒப்புமைக் கவர்ச்சி !
யாராக நீயோ
ஒப்பு நோக்கும் உடம்பு
உன்னுடையது !
தீரா இன்பம் தருவது !
இரவும், பகலும்
பற்களால் கடித்தென்னைத்
தின்பது கவர்ச்சி !
பச்சை உறவு நிமித்தங்கள்
பாதாள உணர்ச்சிகள்,
பாடுகிறேன் நான் அவற்றை !
இதுவரைக் காணாத
எதையோ தேடிச் செல்கிறேன்
பல்லாண்டு களுக்கு முன்பு
ஆழ்ந்து நான்
தேடிய போதினும் !
ஆத்மாவின் மெய்க் கானத்தை
பாடுகிறேன்,
எங்காவது தகுதி யுள்ள
இடத்தில் !
++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/
6. http://jayabarathan.wordpress.
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (October 2, 2013)
http://jayabarathan.wordpress.
- நீங்காத நினைவுகள் – 19
- மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
- மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு
- சிலை
- அழகிப்போட்டி
- நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’
- திண்ணையின் இலக்கியத்தடம்-4
- புகழ் பெற்ற ஏழைகள் - 28
- ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்
- அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
- அத்தம்மா
- டௌரி தராத கௌரி கல்யாணம் …22
- பேபி பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள காலவெளிப் பிளவுப் பழுதுகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 5 பிருந்தாவன லீலைகளின் முடிவு.
- தாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !
- கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்
- அவசரகாலம்
- நீண்டதொரு பயணம்
- கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?
- தேடுகிறேன் உன்னை…!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 44 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) உடற் கவர்ச்சித் தூண்டல் .. !
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1
- புண்ணிய விதைகள் – சிறுகதை
- காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
- சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனை
- பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
- தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’
- காதலற்ற மனங்கள்