கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்

This entry is part 16 of 31 in the series 13 அக்டோபர் 2013
பூவண்ணன்

உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர்  இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர்

 

 

குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி ஒன்றிய தலைவர் அதனால் பதவி விலக வேண்டிய செய்தியும் மக்கள் ஆட்சியை வெறுத்து சர்வாதிகாரதிர்க்கான பாதையை விரும்புவர்களை தெளிவாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன

http://indiatoday.intoday.in/story/bjp-councillor-gujarat-forced-to-quit-for-having-third-child/1/313716.html

 

The 45-year-old businessman, who had defeated former mayor Ashok Dangar in the 2010 municipal polls, quit on Monday, four months after his wife gave birth to a boy. Rishi was born after two daughters — Charmi (11) and Dhruvi (7).

 

Dhava reportedly was keen to have a son and he tried to flirt with the law, interpreting it to suit his wish.

பாராளுமன்ற தேர்தல்,சட்டசபை தேர்தல்,மாநகராட்சி தேர்தல்,இடை தேர்தல்,பெரும்பான்மை இல்லாததால் மறுபடியும் பொது தேர்தல் என்று தேர்தல்களுக்கு குறைவு கிடையாது.இதில் எதை கட்டாயம் ஆக்குவது.வோட்டு போடாததால் எத்தனை பேருக்கு தண்டனை வழங்குவது
வெற்றி பெற்றவர் எந
்த காரணமும் கூறாமல் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கிறதா இல்லையா.பல ஆயிரம்/லட்சம் வோட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற ஒருவருக்கு இருக்கும் உரிமை சாதாரண வாக்காளருக்கு கிடையாதா
பிடிக்கவில்லை,காதல் தோல்வி,வயிற்று வலி அல்லது காரணமே இல்லாமல் வெற்றி பெற்றவர் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கும் போது வோட்டு போடுபவருக்கு குறிப்பிட்ட காரணத்தால் அல்லது காரணமில்லாமலோ வோட்டு போட மாட்டேன் என்ற நிலையை எடுக்க உரிமை கிடையாது என்று எப்படி இருக்க முடியும்

நான் முற்றும் துறந்த முனிவன்,அனைத்து இச்சைகளையும் தாண்டியவன் என்று கூற/வாழ ஒருவருக்கு உரிமை உண்டா இல்லையா.
அதே போல நான் அரசியலை துறந்த முனிவன்,ஒருமனதாக தேர்வு ஆகாத போட்டி நடக்கும் தேர்தல் அரசியலை வெறுக்கும் ஒருவன் என்றால் அதில் தவறு காண முடியுமா

போட்டி இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் போட்டியில் இருந்து அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவது சட்டப்படி சரியா இல்லையா
அப்படி ஒரு நிலை இருக்கும் தொகுதிகளில்/பஞ்சாயத்துகளில் வோட்டு போட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் எப்படி வோட்டு போடுவார்கள்.ஒருவர் நின்றாலும் அந்த தொகுதியில் அவருக்கும் NOTA பொத்தானிர்க்கும் போட்டி இருக்குமா

ஒரே மனிதர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் நின்று வெற்றி பெறுகிறார்.ஒன்றை அவர் கட்டாயமாக ராஜினாமா செய்தாக வேண்டும்.
அதற்கு உடனே ஓரிரு மாதங்களுக்குள் இடைதேர்தல் வரும்.

சட்டசபை உறுப்பினர் மேல்சபை உறுப்பினர் ஆக சட்டம் வழி வகுக்கிறது.மேற்கு வங்கத்தில் ஒரு எம் எல் ஏ அரசு வேலை கிடைத்து விட்டதால் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது.
தனி கட்சி துவங்க முடிவு செய்து பதவியை ராஜினாமா செய்கிறார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
தலைவரின் குறிப்பிட்ட நடவடிக்கை பிடிக்காமல்,அல்லது மந்திரி பதவி தரவில்லை என்று ராஜினாமா செய்கிறார். அதையும் சட்டம் அனுமதிக்கிறது.

வெற்றி பெற்றவருக்கு ராஜினாமா செய்யும் உரிமை மட்டுமல்லாமல்,அரசியல் அமைப்பின் கீழ் குற்றங்கள் என்று வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றால் பதவி நீக்கம் செய்வதையும் சட்டம் அனுமதிக்கிறது.
இது மட்டும் அல்லாமல் சில சர்வாதிகாரிகள்,சர்வாதிகார இயக்கங்கள்,பிறக்கும் குழந்தைகளை வைத்தும் வெற்றி பெற்றவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டங்களை இயற்றி இருக்கிறார்கள்.

பிடிக்காத தீர்மானங்கள் வரும் போது வோட்டு போடாமல் வெளிநடப்பு செய்யலாம்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
பல ஆயிரம் மக்களின் வோட்டுக்களை பெற்று வெற்றி பெற்று ஒரு பொறுப்பான பதவியில் அமர்ந்தவருக்கு ஆயிரம் உரிமைகள் இருக்கிறது.அவர் விருப்பபடி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
வாக்காளனுக்கு இருக்கும் ஒரே உரிமை யாருக்கு வோட்டு போடுவது,அல்லது வோட்டு போட மாட்டேன் என்று முடிவு எடுப்பது.அந்த உரிமையை பிடுங்க நினைப்பது சரியா
வோட்டு போடாதவர்களை தேர்தல் ஆணையம் தேடி சென்று ஏன் வோட்டு போடவில்லை என்று கேட்டு அதை கணக்கில் எடுத்து கொள்ளட்டும்.மாறாக தனி மனிதன் கட்டாயமாக வாக்கு சாவடிக்கு சென்று ஏதாவது ஒரு பொத்தானை அழுத்தி தான் தீர வேண்டும் எனபது சர்வாதிகாரம் மக்கள் ஆட்சி அல்ல

கட்டாய வாக்கு பதிவு என்பதை கல்லூரி தேர்தல்கள்,அரசு அலுவலக ஊழியர் சங்கங்களில் கூட நடைமுறைபடுத்த முடியாது.
இந்த அழகில் பல கோடி மக்களை கட்டாயபடுத்த முடியும் என்ற நம்பிக்கை/வெறி  சிலருக்கு,சில இயக்கங்களுக்கு  இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று அல்ல   நாம் மிகவும் பயங்கொள்ள வேண்டிய நிகழ்வு
ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உணவு உட்கொள்வேன்,மருந்து எடுத்து கொள்ள மாட்டேன்,பால் குடிக்க மாட்டேன், .திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.மேலாடை அணிய மாட்டேன் எனபது போல வோட்டு போட மாட்டேன் என்பதும் தனி மனிதரின் அடிப்படை உரிமை

இந்த உரிமையை பறிக்க நினைப்பது,பல ஆயிரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மூன்றாவது குழந்தை பெற்று கொண்டார் என்று பதவி நீக்கம் செய்வது போன்றவை சர்வாதிகாரத்தை நோக்கி நம்மை அழைத்து செல்ல நடக்கும் முயற்சிகள்.இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் வருங்காலத்தில் மக்கள் ஆட்சியை மீட்க   நாம் கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகமாக இருக்கும்

——————–

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 85 அந்தி மங்கிடும் வேளை .. !அவசரகாலம்
author

பூவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *