எனது இரண்டாவது அணுசக்தி நூல் “அணுவிலே ஆற்றல்” என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளி வந்துள்ளது. அதை முதன்முதல் அச்சிட்டு வெளியிடுபவர் திரு. வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை. இந்த நூலின் பெரும் பகுதித் தகவல் 1960 முதல் 1962 வரை மஞ்சரி மாத இதழ்களில் வெளியானவை. இதில் உள்ள கட்டுரைகளில் அணுக்கள், பரமாணுக்கள், மூலகங்கள், அணுசக்தி, கதிரியக்கம் ஆகியவற்றின் அடிப்படைகள் பற்றியும், கதிரியக்கத் தீங்குகள் பற்றியும் ஓரளவு விளக்கங்கள் காணலாம். மற்றும் அணுமின் நிலையங்கள் பற்றி இதில் எந்த விபரமும் கூறப்பட வில்லை. அவற்றைப் பற்றி எனது முதல் அணுசக்தி நூல் விளக்கம் அளிக்கிறது.
http://jayabarathan.wordpress. com/atomic-energy-book/ [முதல் அணுசக்தி நூல்]
சி. ஜெயபாரதன், கனடா.
++++++++++++++++++++
நூலின் அட்டைப் படங்கள் 1 & 2 [இணைப்புகள்]
நுலைப்பற்றித் தகவல் 1, 2, 5, 6, 7 [இணைப்புகள்]
- மொழிவது சுகம் நவம்பர் 1 2013 – பிரான்ஸ், மொழிபெயர்ப்பு
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.
- இளைஞன்
- அப்பா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !
- ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு
- நீங்காத நினைவுகள் – 21
- காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்
- வாழ்க்கைத்தரம்
- சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 31.சர்வாதிகாரியாக மாறின ஏழை
- சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை
- பிறவிக் கடன்!
- கனவு
- ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்
- சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!
- Online tickets site will be closed Thursday (Nov 31st) Midnight for Sangam’s Thamilar Sangamam event
- வேட்டை
- அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்
- பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா
- நினைவலைகள்
- மது அடிமைத்தனம்
- சீதாயணம் [முழு நாடகம்] [5] படக்கதையுடன்
- ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்
- கடைசிப் பக்கம்
- கனவு நனவென்று வாழ்பவன்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !
மாணவர்கள் பாடத்திட்டமாக பயன்படுத்தக்கூடிய அருமையான புத்தகம்.
அறிவியலை தமிழில் அனைவரும் படித்து புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அதிலும் அணு ஆற்றல் பற்றிய நுணுக்கங்களை தெரிந்து புரிந்து கொள்வது மேலும் சிரமம். அதை எவ்வாறு எழுதி எளியோரையும் ஈர்க்க முடியும் என்பது எழுதுவோருக்கு பெருத்த சவாலாகும். இதை அணுநுட்ப அறிவியலாளர் நண்பர் திரு. சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதி வெளியிடுவது சாலச் சிறந்ததாகும். அவர் தமிழில் புலவராகவும், கவிஞராகவும், சிறுகதை நெடுங்கதை எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், மேல்நாட்டு இலக்கியங்களை தமிழில் தேன்சொட்டத்தரும் மொழிபெயர்ப்பாளருமாகத் திகழ்ந்து வருவது அவருக்கு இதுபோன்ற அறிவியல் நூலைப் படைக்கும் அனைத்து தகுதிகளையும் தந்துள்ளது. இதை தமிழ் வாசகர்களும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் படித்து பயன்பெறவேண்டும் என நான் விழைக்கின்றேன். தமிழ் கூறும் நல்லுலகில் இந்நூல் காலந்தோறும் பேசப்படும் என்றும் நான் நம்புகிறேன். நூலாசிரியர் திரு. சி. ஜெயபாரதன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
பெரியதோர் பாராட்டை எழுதியதற்கு எனது உளங்கனிந்த பணிவான நன்றி நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
நண்பர்களே,
இறுதியில் வரும் மூன்று வசனப் பக்கங்களில் முதல் இரண்டு பக்கங்கள் இடம் மாறி இடப்பட்டுள்ளன். இரண்டாம் பக்கமே ஆரம்பம், முதல் பக்கம் அடுத்தது.
சி. ஜெயபாரதன்
தமிழ் குடியில் பிறந்து தமிழிலே வளர்ந்து பல பட்டங்களைபெற்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பதவிகளில் பரந்து கிடக்கிறார்கள் தமிழர்கள். தாம் பெற்ற கல்வி அறிவை தனது தாய்மொழி மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற சமூக பிரஞ்ஞை இல்லாமல் வெறும் உஞ்சவிருத்தி செய்தே உயிர் வாழ்பவர்கள் மத்தியில், “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்னும் பெரு நெஞ்சிற்கிற்கு உரியவராய் விளங்குபவர் பேராசிரியர்.ஜெயபாரதன் அய்யா அவர்கள்.
அணுவுலைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பலைகள் இன்று எல்லா பக்கங்களிலும் எதிரொலிக்கின்ற சூழலில்,ஆசிரியரின் “அணுவின் ஆற்றல்” அதன் உண்மைகளை அனைவரும் புரிந்து கொள்ள வழி காட்டுகிறது.நாளைய தமிழ் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு அணு ஆத்திச்சூடி.தமிழ் இளைஞர்களே! அறிவியல் படியுங்கள் புவியில் புதுமைகள் படையுங்கள்.
அணுசக்தியைப் பற்றி தமிழர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுப் பாராட்டை எழுதியதற்கு எனது உளங்கனிந்த பணிவான நன்றி ஷாலி அவர்களே.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
இப்படி ஆங்கில (ரைட்ஸ் வாங்காமல்) காபீ பன்னி தமிழில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன ? தமிழர்கள் திருடர்கள் என்று காறி உமிழ மாட்டார்களா ?