பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;

author
2
0 minutes, 1 second Read
This entry is part 22 of 24 in the series 24 நவம்பர் 2013

bharathy-cehllamma

முனைவர் ந.பாஸ்கரன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
பெரியார் கலைக்கல்லூரி
கடலூர்-607 001.

கட்டுகள் உடைத்து உருவாகும் கட்டுப்பாடுகளுக்குள் சமுதாயம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் மகாகவி பாரதி.  தெளிந்த சிந்தனைக ;குள்ளிருந்து கொப்பளித்து வெளிவரும் தனது சொற்களைப் பேச்சு, உரை, கட்டுரை, கதை, வசனம், கவிதை என்ற எவ்வுருவத்தில் அமரவைப்பினும் அதனை ஓர் ஆயுதத்தைக் கையாளும் கவனத்துடனேயே செய்துள்ளார்.  பேண்ணுக்கான, பெண்ணுக்குரியத் தமது சிந்தனையையும் அதுபோன்ற தளத்திலேயே பதிவு செய்கிறார்.  சீர்திருத்தம் பிரச்சாரத்தில் பெண்ணுரிமைக்கெ முன்னுரிமையைக் கொடுத்துள்ளார்.  பிற சிந்தனைகளைவிட பெண்ணுரிமைக் கருத்துகளை வலிமையுடன் வெளியிட்டுள்ளார்.

தேசபக்தி உணர்வும் பெண்களும்:-
“பெண்களுக்கு தேசாபிமான பயிற்சி வேண்டும் என்பதை                 தாய்ப்பாலுடனேயே சேர்த்து ஊட்ட வேண்டும்.”

என்ற தமது கருத்தை இந்தியா இதழ்க் கட்டுரையின் வழி (மார்;ச் 16ஃ90) வெளியிடுகிறார்.  இத்தகையத் தகுதி தமிழ்ப்பெண்ணுக்கு உண்டு என்பதை சங்க இலக்கியப் பதிவின் மூலம் உணர்ந்திருக்கிறார்.  இதனை, வீரத்தாய்மார்கள் என்ற கட்டுரையில் பதிவு டிசய்கிறார்.  புறநானூற்று பெண்களுக்கானப் பெருமைகள் அழியாப் புகழ்கொண்ட பழங்கால மாது என்ற கட்டுரையில் தன்மகன் புறமுதுகுகாட்டி போர்க்களத்தில் இறந்தால் அவனுக்கு தைரியம் ஊட்டிய என் மார்பினை அறுத்துக் கொள்வேன் என்று வீரம் உரைத்த பெண்ணை வியக்கிறார்.  தேசியத்தின் வலிமை பெண்கள் கொண்டிருக்கும் தேசபக்தி அறிவைப் பொறுத்தே அமையும் என்பதில் பாரதி, உறுதியுடன் இருப்பதைப் பெண்களும் சாதீய அபிவிருத்தியும் என்ற கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

பெண்களுக்கான அமைப்புக் குரல் :
ஏழு வயது செல்லம்மாளைத் திருமணம் செய்து கொண்ட பதினான்கு வயது பாரதிக்கு தொடக்கக் கால திருமண நாட்களில் பெண் சமுதாயம் சார்ந்த விடுதலை எண்ணங்கள் இல்லை என்றே துணியலாம்.  1882ல் பிறந்த பாரதி 1987ல் திருமணம் புரிந்து கொண்டு சுமார் 1904ல் பொது சிந்தனையில் தீவிரம் காட்டத் தொடங்கிய பின்னர் குறிப்பாகத் தேசத்தில் பெண்கள் சமுதாயம் நலிவுற்று இருப்பதையும் அவர்களின் பங்கும் விடுதலைப் போருக்கு அவசியம் என்பதையும் எண்ணத்தில் கொண்டுதையலை உயர்வு செய்யும் பாரதியாக உருவானது 1906ல் சுவாமி விவேகானந்தரின் சீடர் நிவேதிதாதேவியின் சந்திப்புக்குப் பிறகே நிகழ்ந்துள்ளது.  இதனை,
“பாரதம் இப்பொது அடைந்திருக்கும் இழிவு
நிலையிலிருந்து விடுபட ஆண் மட்டுமின்றி
பெண்ணும் தேசபக்தி உடையவளாக
வரவேண்டும்”
என்ற கருத்தை நாகரீக வளர்ச்சியில் பெண்கள் நிலை என்ற கட்டுரையில் புலப்படுத்துகிறார்.

துருக்கி, தென் ஆப்பிரிக்கா சார்ந்த பெண்விடுதலை சங்கத்தின் செயல்பாடுகளைக் கெட்டறிந்த பாரதி அனைத்து பகுதிகளிலும், அனைத்து நிலைகளிலும் உள்ள நமது பெண்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதில் கவனம் கொண்டார்.  இதற்கு அழப்படையானத் தேவை பெண்கல்வியில் சிறந்தவளாக வர வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்துள்ளார்.  இதனை, பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வு எண்ணங்களை வெளியிடுவதற்கென்றே தாம் நடத்திய ‘சக்கராவர்த்தினி’ என்ற இதழில் 1979ல்

“அநாகரிக மனிதர்களை பெண்களை இழிவுபடுத்துகின்றனர்.  இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு முக்கியமாக மூன்று வழிகள் உள்ளன.  முதலாவதனா வழி கல்வி, இரண்டாவதான வழி கல்வி, மூன்றாவதான வழி கல்வி, அதாவது கல்வியைத் தவிர வேறு எதுவும் பயன்தராது.”
என்பதான கட்டுரைச் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு மாதர் பள்ளி வேண்டும் என்பதை வலிமையுடன் அறிவுறுத்தி இருக்கிறார.  குறிப்பாகத் தமிழ் நாட்டுப் பெண்கள் விழிப்புணர்வு சிந்தையில் வீறுகொண்டெழ வேண்டும் என்பதை,

‘பெண் விடுதலைக்காக தர்மயுத்தம் தொடங்குங்கள்’ என்ற தமிழ்நாட்டின் பெண் விழிப்பு என்ற கட்டுரையில் வேண்டுகோள் வைக்கின்றார்.

பெண்களை அடக்குதலையும், அடிமைப்படுத்தும் ஆதிக்க சக்திகளையும் குடும்ப அமைப்பிலிருந்தே எதிர்க்கும் வல்லமைகளைப் பெற வேண்டும் என்கிறார்.  அப்பா, அண்ணன், தம்பி, கணவன் என்ற உறவு நிலைகளில் உள்ளோர் இழிவு செய்வார்களேயானால் வீட்டுக்குள் இருந்து கொண்டே எதிர்ப்பதற்கானப் போர்க்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.  கணவன் தீமை செய்யும் போது அவனுக்கு உணவு கொடுக்காமல் மனைவியர் உண்ண வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியேறாமல் கொடுமையை எதிர்த்து நின்று வெல்ல வேண்டும் என்றும் பாரதியின் உள்ளக்கிடக்கையாக இருந்துள்ளது.  ஏனெனில், ‘பெண் உயராவிட்டால் ஆண் உயர்வு இல்லை’ என்பதை வலியுறுத்துகிறார்.  சொல்கின்ற எதையும் தன்னிலிரந்து தொடங்கும் வல்லமை மிக்கவர் பாரதி.  பெண் விடுதலைக்கான எண்ணங்களை தமது மக்கள் தங்கம்மாளை விட்டு எழுதச்சொல்லி புதுச்சேரியில் ‘பெண் விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது’ என்னும் பொருளில் கட்டுரைப் புனைய வைத்து அதனை மேடையில் படிக்கவும் வைத்த பெருமைக்குரியவர் பாரதி.

பெண்ணுரிமைக் குரல்
பெண்கல்வி, ஆண்சமம், பணிக்குசெல்லல், அரசியல் ஆளுமை, வீரவுணர்வு, சொத்துரிமை, மண சுதந்திரம் போன்ற பல்வேறு உரிமைகளில் நிறைவு எய்தும் பெண்களால் மட்டுமே தேச முன்னேற்றத்தைத் தர இயலும் என்பதில் பாரதி உறுதியும் தெளிவும் கொண்டவராக இருந்துள்ளார்.

இதனை, பாரதி வகுத்து தந்துள்ள பெண்ணுரிமைக்கானப் பத்து கொள்கைகளின் வழி வெளிப்படுத்துகிறார்.

அவையாவன,
1.    பெண்கள் ருதுவாகும் முன்பு திருமணம் செய்யக் கூடாது.
2.    விருப்பமில்லாத ஆணை மணந்துகொள்ள வற்புறுத்தக்கூடாது.
3.    திருமணத்திற்குப் பின்பு மகிழ்விலா நிலையில் கணவனை விட்டு நீங்க உரிமை கொடுக்க வேண்டும்.  அதன்பின் அவமதிக்கக் கூடாது.
4.    சொத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும்.
5.    மறு விவாக அனுமதி கொடுக்க வேண்டும்.
6.    மணமின்றி தொழிலில் ஈடுபட விரும்பினால் வழிகொடுக்க வேண்டும்.
7.    கணவனைத் தவிர வேறு ஆணுடன் பேசுவதை பயம் பொறாமையால் தடுக்கக் கூடாது.
8.    உயர்கல்வி வழங்க வேண்டும்.
9.    அரசாட்சியில் பதவியேற்க சட்டம் தடையாகக் கூடாது.
10.    சனநாயக நாட்டில் ராஜாங்க உரிமையில் பங்கு தர வேண்டும்.

என்பனவாம்.  இப்பத்து உரிமைகளையும் பெண்களுக்கு ஆண் தடையின்றி வழங்க முன்வர வேண்டும்.  அப்பொழுது ‘திமிர்ந்த ஞானச் செருக்குள்ள செம்மை மாதர்கள்’ நமது தேசத்தை உயர்த்துவார்கள் என்பதை தனது உரத்த குரல்வழி பதிவு செய்துள்ளார்.

பெண்ணுணர்வில் கவனம் செலுத்தாது இருந்த பாரதி, நிவேதிதா அம்மையார் மூலம் புத்தொளியினைப் பெற்று கிராமம், மாநிலம், தேசம், உலகம் என்னும் விரிந்த அளவில் பெண்ணுக்கான சுதந்திரமும் உரிமையும் ஓங்கி வளரவேண்டும் என்றும் உறுதிகொண்டு உழைத்துள்ளார்.  அதற்கென தாம் பயின்ற சங்க மகளிர் முதல் தமது மனைவி செல்லம்மாள் தமது மகள் மகள் தங்கம்மாள், சகுந்தலா போன்றொர் வதை அதற்கான முன்னெடுப்புகளாக்கி உள்ளார்.  பெண்ணுரிமைக்கு குரல்கொடுத்து பாதையும் சமைத்த பாரதியை நாமக்கல் கவிஞர் ஓர் ஆசானாக பாடி மகிழ்கிறார்.

இதனை,
“கண்ணிரண்டில் ஒரு கண்ணை கரித்தாற் போலும்
கைகாலிகள் இரண்டிலொன்றை கழித்தாற் போலும்
பெண்ணினத்தை ஆணினத்திற் குறைந்த தாகப்
பேசிவந்த நீசகுணம் பெரிதும் நீங்கப்
பண்ணிசைக்கும் மிகப்புதுமைக் கவிகள் பாடிப்
பாவையரைச் சரிநிகராய்ப் பாராட்டும் நல்
எண்ணமதை நம்மனதில் இருக்கச் செய்த
ஏற்றத்தால் பாரதி ஓர் ஆசான் என்போம்.”
என்ற கவிதையால் உறுவெளிப்படுத்துகிறார்.  நல்லாசன் பாரதி வழிநின்று ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம’;, ‘செம்மை மாதரை’ உயர்த்துவோம்.என்ற நாமக்கல் மொழியிலேயேப் பாரதியைப் போற்றுவோம்.

 

 

Series Navigationசீதாயணம் நாடகம் -8 படக்கதை -8மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே”-என்றும்
    “வானாறு பேரிமய வெற்பு முதல்
    பெண்குமரி யீராகும் ஆரியநா டென்றே யறி!”-என்றும்
    இந்திய நாட்டை பிராமணர்களின் நாடாகப் பாடிமகிழ்ந்தான்!.
    “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
    பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே”

    “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
    ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்”. -என்று புலம்பினான்!.

    பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும்.நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை தூக்கிப் பிடித்த பாரதி.
    “நாலு குலங்கள் அமைத்தான் – அதை
    நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்”-என்றான்.
    “நான்கினில் ஒன்று குறைந்தால்
    வேலை தவறிச் சிதைந்தே – செத்து
    வீழ்ந்திடும் மானிடச் சாதி”-என்று ஒப்பாரி வைத்தவன் பாரதி.

    பொதுவாக அநேக கவிஞர்கள் திட,அல்லது திரவ உற்சாக ஊக்கப்பொருளை வாயில் வைத்தால்தான் அவர்களுக்கு கவிதை பிறக்கும்.அந்தந்த மன நிலைக்குத் தகுந்தார்ப்போல் பாடுவார்கள்.இதை பெரிதாய் எடுத்து ஆடவேண்டியதில்லை.எல்லாம் மயக்கத்தில் திரிகிற பார்ட்டிகள். நான்கு வர்ண சனாதனத்தை ஆதரிக்கும் பாரதியிடம் இருந்துவரும் பெண்ணுருமை சிந்தனை தோற்றமும் நம்மையும் மயக்கும் போதையே.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ஷாலி அவர்களே, அது எப்படி நான் நினைத்ததை சரியாக அப்படியே நீங்களும் சொல்லியுள்ளீர்கள்? சுமார் 20 வருடங்களுக்கு முன் சிவகங்கை திருப்பத்தூரில் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் விழா நடை பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் திருமதி குத்சியா காந்தி தலைமையில் மத்திய அமைச்சர் மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் கலந்துகொண்டார்கள். அதில் என்னையும் பேச அழைத்திருந்தனர். அப்போது இந்த சாதிகள் பற்றி நான் பேசியது சலசலப்பை உண்டுபண்ணியது இப்போது நினைவுக்கு வருகிறது. என்னுடைய சொற்பொழிவின் சாரம் வருமாறு:

    ” சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி உளறியுள்ளான். ஏன் தெரியுமா? அதை யார் இதுவரை மதித்து சாதிகள் இல்லை என்று கூறுகின்றனர்? அப்படியெனில் அது வெறும் உளறல்தானே? ஏன் இந்த உளறல்? பாண்டியில் இருந்து இந்தப் பாடலைப் புனைந்ததாலா? புரிகிறது! இது தண்ணி அடித்துவிட்டு சொன்னது என்று! ”

    எப்படி என் பேச்சு? இதை நான் அன்று அந்த போது மேடையில் பேசினேன்….

    இது போன்றுதான் பாரதி பாடியுள்ள செந்தமிழ் நாடும், ஆரிய நாடும்! அப்படித்தானே திரு ஷாலி அவர்களே? அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *