திண்ணையின் இலக்கியத்தடம் -10

This entry is part 4 of 24 in the series 24 நவம்பர் 2013

Taller_Buddha_of_Bamiyan_before_and_after_destructionமார்ச் 4 2001 இதழ்:

தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க?

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக் கழகமும் இந்தியாவும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது நல்ல திட்டம். 2.பாரதிதாசனுக்கு ஜாதி முத்திரை குத்த முயன்ற ஒரு ஜாதி சங்கத்தின் முயற்சியை அவரது பேரன் முறியடித்துள்ளார். 3. சிதம்பரமும் மூப்பனாரும் சந்தித்தால் அது செய்தி! 4.திரிபோலியில் 53 ஆப்பிரிக்க நாடுகளை ஒருங்கிணைக்கும் மாநாடு நடந்தது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103043&edition_id=20010304&format=html )

தலித் கலை இலக்கியம் இன்றைய சூழலில்- கே ஏ குணசேகரன்- மைய நீரோட்டத்துக்குள் தலித் கலை இலக்கியம் வரும் போது அது “தன்வயப்படுத்தும்” . அது அந்தக் கலையின் அசல் தன்மையை நீர்த்துப் போகச் செய்து விடும். இளைய ராஜா ஒரு உதாரணம். நாம் சிந்திக்க வேண்டியது தலித் கலை இலக்கியம் மைய நீரோட்டத்துக்குள் வரத்தான் வேண்டுமா?

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103042&edition_id=20010304&format=html )

கவிதைகள்: பற்றுவரவுக் கணக்கு- சித்திர லேகா, அழகு- சி.மணி, இன்றைக்கு என்பது இனிக் கிடையாது- இரா.சுந்தரேஸ்வரன், தலைவா-ஜெயானந்தன், ஹைக்கூக் கவிதைகள்- கோகுல கிருஷ்ணன்

கதைகள்: அம்பாடி- சக்கரியா, சங்கிலி- வண்ணதாசன், யந்திரம்-ஜெயகாந்தன்
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
Manaveli Performing Arts Group to present Eighth Festival Toranto- Feb 28 2001
அறிவியலும் தொழில் நுட்பமும்- கணினி மென்பொருளில் எப்படி சிக்கலெடுப்பது
சமையற் குறிப்பு- கூல் ஃபலூடா, ஓட்ஸ் கிச்சடி

மார்ச் 11 2011 இதழ்:

மாறுதலான சினிமாவும் மாறி வரும் சினிமா பார்வையும் – அம்ஷன் குமார் – சினிமாவின் வியாபாரப் படங்கள் மற்றும் கலைப் படங்கள் பற்றிய பார்வையுடன் சினிமா என்னும் ஊடகத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய விரிவான கட்டுரை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60103111&edition_id=20010311&format=html )

உடைவது சிலைகள் மட்டுமல்ல் – மஞ்சுளா நவநீதன்- சென்ற இதழில் சின்னக் கருப்பன் “தாலிபான் கள் புத்தர் சிலைகளை உடைப்பது அவர்கள் சமூகச் சூழலுக்குப் பொருந்துவதே” என்னும் தொனியில் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக ம.ந. எழுதுகிறார். எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான நெறிகள் இருக்கவே முடியாது. உடன் கட்டை ஏறுவதையும், குழந்தைத் திருமணத்தையும் மதவாதிகளை மீறி சட்டத்தால் மாற்றவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார். பெரியார் கூட கோயிலில் புகுந்து சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கவில்லை. ஜனநாயக விழுமியங்களுக்கு அடையாளம் இது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103112&edition_id=20010311&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.மூப்பனார் அதிமுக கூட்டணி. 2. விவசாயப் பொருட்கள் விலை வீழ்ச்சியால் பல விவசாயிகள் தற்கொலை. 3.அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் துப்பாக்கியால் பலரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 4.உலகெங்கும் நில நடுக்கங்கள். 5.இந்தியப் பெண்களில் 28ல் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் இருக்கிறது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103113&edition_id=20010311&format=html )

இலக்கியக் கட்டுரைகள்:

காட்சிப் படுத்தலும் கலை ஊடகங்களும்: பாவண்ணன்- காட்சிப் படுத்தல், படிமங்கள் வழி குறிப்பால் உணர்த்துதல் இலக்கியம் மற்றும் சினிமா இரண்டிலுமே மிகவும் முக்கியத்துவமானது . பாவண்ணன் சிலப்பதிகாரத்தின் பாடலை மேற்கோளிடுகிறார்:

துறுகல் அயலது மானை மாக்கொடி
துஞ்சுகளிறு இவரும் குன்ற நாடன்
தன் நெஞ்சுகளன் ஆக நீயெலன் யான் என
நற்றோள் மணந்த ஞான்றை மற்று அவன்
தாவல் அஞ்சினம் உறைத்து
நோயோ தோழி நின் வாயினாளே

புதுக்கவிதைகளில் அவர் கையாள்வது:

சிறகிலிரிந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

திரைப்படங்களில் “சந்தியா ராகங்கள்” படத்தில் முதல் காட்சியில் பாட்டியம்மாள் இறந்து சரியும் போது அவரது பின்னணியில் எரியும் அடுப்பு, அடுத்த காட்சியில் அவரது சிதையின் நெருப்பு அதற்கு அடுத்த காட்சியில் தாத்தா ஏறிய ரயில் வண்டியின் எஞ்சின் நெருப்பு. காட்சிப்படுத்துதல் மிகவும் நுட்பமானதும் படிமங்கள் மூலம் வாசகர் அல்லது பார்வையாளனுக்கு எதிர்வரும் நிகழ்வுகள் அல்லது பாத்திரப் படைப்புக்குத் தரும் அழுத்தம் எனப் பலவும் உணர்த்தப் படுகின்றன. முழுமையாக வாசிக்க வேண்டிய கட்டுரை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60103111&edition_id=20010311&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும் – இயந்திர மனித வடிவமைப்பு- Robot Design – ஜோர்டன் போல்லாக்-

சமையற் குறிப்பு- சிக்கன் எலும்பு சூப் , வஞ்சிரம் மீன் ஊறுகாய்

கதைகள்: அஞ்சு ரூபா- அருண் வில்பிரட் ஜஸ்டின், ஒரு பெண்ணாதிக்கக் கதை, ஒரு ஆணாதிக்கக் கதை – பாரதி ராமன், மாயை- ரகுநாதன்

கவிதைகள்: பேசடி பிரியமானவளே- எட்வின் பிரிட்டோ, எலிப்பந்தயம்- பசுபதி, பாட்டி – சேவியர், உயிர்த்திருத்தல் – இரா.சுந்தரேஸ்வரன்

மார்ச் 18, 2001 இதழ்:

“தங்களுக்குப் பிறகே நான்”-பாரி.பூபாலன்- அயனாவரமானாலும் அலபாமா ஆனாலும் மனிதர்கள் ஒரே மாதிரி என்று விளக்கும் அனுபவப் பகிரல்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103181&edition_id=20010318&format=html )

தமிழ் நாடு- அடையாள அரசியலும் கட்சிகளும் – முதல் பகுதி – வ.ஐ.ச. ஜெயபாலன்- மாநில மற்றும் மொழி அடிப்படையிலான அடையாளம் மற்றும் தேசிய அடையாளம் என்னும் இரட்டை நிலை பாரதியார் தாகூர் முதற்கொண்டு இந்தியக் குடிமக்கள் எல்லோரிடமும் காணப்படும். ஜாதி அடிப்படையிலான அடையாளத்தில் ஒன்று படுவோரை ஒருங்கிணைக்கும் அதிகார மையமாக காங்கிரஸும் திமுகவும் உருவெடுத்தாலும் அவர்கள் இவர்களின் ஒருங்கிணைப்பைப் புறந்தள்ளி வாரிசுகளை முன்னிறுத்துவதால் தலைமைக்கான வெற்றிடம் உருவாகியுள்ளது. இடதுசாரிகள் வர்க்க அடையாளத்தை மீனவர் மீதோ அல்லது விவசாயக் கூலித் தொழிலாளிகள் மீதோ ஏற்ற இயலாமல் தோல்வியுற்றனர்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103182&edition_id=20010318&format=html )

இந்தவாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- பங்காரு லட்சுமணன் தெஹல்காவில் பணத்துடன் காட்டப் பட்டதை விமர்சிக்கும் சோனியாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன பின்னணி என்பது கவனிக்கப் பட வேண்டும்.2.மூப்பனார் சிதம்பரம் குமரி அனந்தன் ஆளுக்கொரு துண்டு காங்கிரஸுடன் புறப்பட்டு வ்ிட்டார்கள். 3.வைகோவை திமுக கழற்றி விட்டு விட்டது.4.ஏ என் எஸ் சிவராமனுக்கு அஞ்சலி.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103183&edition_id=20010318&format=html )

வாஜ்பாய் பதவி இறங்க வேண்டும்- சின்னக் கருப்பன்- மிஸ்ரா பங்காரு லட்சுமண் ஆகியோரின் ஊழலுக்குப் பொறுப்பேற்று வாஜ்பாய் பதவி விலக வேண்டும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103184&edition_id=20010318&format=html )

இலக்கியக் கட்டுரை:
தமிழ் நாவல்கள்- விமர்சகனின் சிபாரிசு- தர வரிசையில் தமிழ் நாவல்கள் ஜெயமோகன் பட்டியலும் விமர்சகன் பட்டியலும்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60103182&edition_id=20010318&format=html )

அறிவியலும் தொழில்நுட்பமும்- நுண்நீர்மவியல்- Microfluidics- ஸ்டாபன் க்வேக்

கதைகள்: கைகாட்டி- தி.ஜானகிராமன், பாசிகள்: அஸ்வகோஷ்

கவிதைகள்: மகளிர் தினம் – திலகபாமா, மூக்கோணத்தின் மூன்று முனைகள்- விக்கிரமாதித்யன், ஊரெல்லாம் ஒரு கதை தேடி- இரா.சுந்தரேஸ்வரன், விருந்து – செஸா வயேஹோ – தமிழில் சுகுமாரன்

சமையல் குறிப்பு- காலா மீட், மட்டன் மார்வெல்

மார்ச் 25 இதழ்:

அம்மாயி- பாரி பூபாலன் : தன் தாய் வழிப் பாட்டியின் மறைவை ஒட்டி அவரின் சிக்கனம் அதே சமயம் பிறருக்கு உதவும் குணம் மற்றும் பாசமாகப் பிள்ளைகளை, பேரன் பேத்திகளை அரவணைக்கும் பாங்கை நினைவு கூரும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103251&edition_id=20010325&format=html )

உருவ வழிபாடு தான் சரியான வழிபாடு – சின்னக் கருப்பன்- பல அறிவு ஜீவிகள் இந்தியாவிலும் பல முஸ்லீம்களும் உருவ வழிபாட்டைச் சாடி எழுதிய கட்டுரைகளுக்கு இது எதிர் வினை. மிகவும் நீண்ட ஆய்வும் சிந்தனையும் கொண்ட கட்டுரை. இதை முழுதாகப் படிக்கவும். இதை சுருக்க இயலாது. ஒரு பகுதி இது:

குறியீடுகள் இருக்கும் போது தான் அந்தக் குறியீடுகளைத் தாண்டிய நிர்க்குணபிரம்மத்தைச் சிந்திக்கக் கூட இயலும். சகுணப் பிரம்மமான மனிதனின் அறிவுக் கெட்டிய கடவுள் கூட மனிதனின் சிறு சிறு தவறுகளுக்குக் கோவித்துக் கொள்ளப் போவதில்லை. தாயாய் தந்தையாய் சகோதரனாய் நண்பனாய் மனைவியாய் கடவுளைப் பார்க்கும் மனிதன் , எல்லாவற்றையும் தாண்டி எல்லோருக்குள்ளும் இருக்கும் – தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்- கடவுளை பாமியான் புத்தச் சிலையிலும், ஒரு சிறு பிள்ளை செய்த மண் பொம்மையிலும், தாய்மார்கள் மஞ்சள் தூள் கொண்டு பிடிக்கும் பிள்ளையாரிலும், மாவிளக்கிலும் , மகத்தான மைக்கேல் ஆன்சலோ சிற்பத்திலும் , மனிதன் படைத்த பெருங்காப்பியங்களிலும், அழிவிலும் ஆக்கத்திலும் நின்றாடும் மாசில் வீணையிலும், மாலை மதியத்திலும் , வீங்கிள வேனிலிலும் , தன் அழகான அனுபவத்தின் உச்சத்தில் , இறைவனை உள்ளில் உணரவும், அந்த மஞ்சட் தூள் பிள்ளையார் தண்ணீரில் கரைக்கப் படும் போது படிமத்தின் நிலையாமை தாண்டி படிமத்தின் உள் நிற்கும் கடவுளை உணர இயலும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103252&edition_id=20010325&format=html )

இந்த வாரம் இப்படி: மஞ்சுளா நவநீதன்- 1.தெஹல்கா விவகாரம். 2. சிதம்பரம் புதிய கட்சி. 3. நிலாக் காலம் அரிதாக வந்திருக்கும் நல்ல தமிழ்ப் படம்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103254&edition_id=20010325&format=html )

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்- உலகமயமாதலின் உச்சம் என்ன?- டயானாவின் மரணத்தைப் பற்றிய வித்தியாசமான பார்வை.

குறட்டை ஆராய்ச்சி- ஆகேஷ்- குறட்டை பற்றிய நகைச்சுவைக் கட்டுரை.

கவிதைகள்- யாரோ பாடிய கபாடிப் பாட்டுகள், 24 மணி நேரம்- அ.முத்துலிங்கம், இளமைக் காலம் – பிரபு, நீ- ஸேவியர், நாளை விடிந்து விடுமே – எட்வின், சில சந்தேகங்கள்- கிறிஸ்

கதைகள்- அசலும் நகலும் – ரகுநாதன், பழக்கம் – அசோகமித்திரன்

சமையற் குறிப்பு- பறங்கிக்காய் பால் கூட்டு, கொண்டைக் கடலை வடை

ஏப்ரல் 1, 2001 இதழ்:

உனக்குள் ஒரு மாற்றம் : பாரி பூபாலன் – உனக்குள் ஒரு மாற்றம் – தமது தத்துவார்த்தமான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் பாரி பூபாலன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104011&edition_id=20010401&format=html )

தமிழ் நாவல் – ஜெயமோகனின் பட்டியல்- கோபால் ராஜாராம் – விருப்பு வெறுப்புகளுடனே ஜெயமோகன் நாவல் பட்டியலைத் தயாரித்திருக்கிறார் என்பதே ராஜாராமின் கருத்து. தமது அணுகு முறையில் ஒரு நாவல் பட்ட்டியலை அவர் தருகிறார். கோபால் ராஜாராமின் கட்டுரையைப் படித்து விட்டு ஜெயமோகன் கட்டுரையைப் படிப்பது நல்லது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104012&edition_id=20010401&format=html )

இந்த வாரம் இப்படி-மஞ்சுளா நவநீதன்- 1.அமெரிக்கா சுற்றுப் புறச்சூழல் தொடர்பான க்யோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு. 2.மான் சாண்டோ நிறுவனம் மரபணு மாற்றிய உனவுப் பொருட்களை விற்க முயல்கிறது. 3.86000 மைல் அகலமுள்ள சூரியப் புள்ளி. 4. மிர் விண் நிலையம் மூடப்பட்டது. 5.கிளாடியேட்டர் படத்துக்கு ஆஸ்கார் விருது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104013&edition_id=20010401&format=html )
வன்முறையும் இலக்கியமும் -2 -நாவலாசிரிய திலகவதியுடன் யமுனா ராஜேந்திரனின் உரையாடல்
(முதல் பகுதி கிடைக்கவில்லை)

திலகவதி தாம் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதத் துவங்கிய போது ஏற்பட்ட கசப்பான அனுபவனகளைப் பகிர்ந்து கொள்கிறார். எழுதியவற்றவையே வித்தியாசமாக எழுதுவதில் நிறைவு அடைவதாகவே அவர் சமகால எழுத்தாளர்கள் பற்றிக் கருதுகிறார். எழுத்தினால் சமுதாய மாற்றம் வராது என்பதே அவர் கருத்து. எழுத்தைத் தவிர்த்தும் தாண்டியும் எழுத்தாளர்கள் நிறைஅவே செய்ய வேண்டும் என்பது அவர் கருத்து. என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பாகக் கூறவில்லை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60104011&edition_id=20010401&format=html )

கவிதைகள்- ஞாயிற்றுக்கிழமை- முகம்மது சலீம் , உயிர் உணர்வதெப்போது- திலக பாமா, ஊமை விழிகள் – பிரபு, சரித்திரம் – கல்யாணராமன், தூரிகைக் காடுகள் -ருத்ரா,

கதைகள்- மூன்றாவது போட்டி – லாவண்யா, ப்ரீத்தா- இரா.சுந்தரேஸன், சாம்பல் குவியலில் அஸ்வ கோஷ்

சமையல் குறிப்பு- அவியல், நேந்திரங்காய் வறுவல், வேர்க்கடலை சுண்டல்

ஏப்ரல் 8, 2001 இதழ்: புதிய நந்தன் களும் பழைய பாரவைகளும் : கே ஏ குணசேகரன் கட்டுரை மீதான ஒரு பார்வை: – கோபால் ராஜாராம் – முந்தைய இதழ்களுள் ஒன்றில் தலித் கலைகளை மேல்சாதியினர் தமதாக்கி விடுகின்றனர் என்னும் தொனியில் குணசேகரன் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக கோபால் ராஜாரம் கட்டுரையில் பரத நாட்டியம் மேல் சாதியினரின் கலை என்பதை முழுமையாக நிராகரிக்கிறார். தலித்தோ , தலித் அல்லாதவரோ ஏன் தன் அடையாளத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்பது அவர் கேள்வி.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104081&edition_id=20010408&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன் -வைகோ திமுக கூட்டணி இல்லை. 2. வன்னியர் ஓட்டு முழுவதுமே ராமதாஸுக்கு போகிதா? 3. ஒவ்வொரு பட்ஜெட் முன்பும் அரசுக்கு எதாவது நெருக்கடி ஊடகங்கள் மூலம் வருவதாக ப.சிதம்பரம் கருத்து. 4.கல்வித் துறையில் முரளி மனோகர் ஜோஷி நிறைய கோமாளித்தனங்கள் செய்கிறார். 5. சினிமா விருதிலும் பாஜக கோமளித் தனத்தையே வெளிப்படுத்தி உள்ளது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104082&edition_id=20010408&format=html )

விருதுகள், பரிசுகள் பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை – யமுனா ராஜேந்திரன்- திகசிக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப் பட்டிருப்பதை ஜெயமோகனும் காலச் சுவடு இதழும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் ஜெயமோகன் ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்களில் இதே தொனியில் எழுதியிருக்கிறார். அதற்கு யமுனா ராஜேந்திரனின் நீண்ட் கடுமையான எதிர்வினை இந்தக் கட்டுரை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104083&edition_id=20010408&format=html )

கதைகள்- குறைப்பிறவி- ஜெயகாந்தன், மனப்பான்மைகள்- அஸ்வ கோஷ், தலைப் பிரசவம் – சேவியர்

கவிதைகள்- நாளை , பூக்களின் மொழி – கோகுல கிருஷ்ணன், எங்கள் வீதி – பாரதி ராமன்.

அறிவியல் தொழில் நுட்பம் – அறிவியல் துளிகள்- விஜயராகவன்

சமையற் குறிப்பு- முட்டை மசாலா, மீன் கபாப்

ஏப்ரல் 15 இதழ்:

திருடன் – பாரி பூபாலன் -தம் கண்ணெதிரே நடந்த திருட்டைத் தடுக்க எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் ஆதங்கம் வெளிப்படும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104151&edition_id=20010415&format=html )

வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை- மாவோயிஸ்டுகளின் கொலைகளைக் கண்டிக்கும் கட்டுரை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104152&edition_id=20010415&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன் – தமிழ் நாட்டின் விசித்திரமான தேர்தல் கூட்டணிகள், 2. அமெரிக்காவிலிருந்து ஈரானுக்கு ஜஸ்வந்த் சிங் சென்றது துணிச்சல். 3. சினிமாத் தணிக்கைக் குழு தமாஷ் பண்ணுகிறது. ((www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104153&edition_id=20010415&format=html )

இலக்கியக் கட்டுரை
அன்புள்ள ஆசிரியருக்கு – ஜெயமோகனின் கடிதம்- திகசிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை ஒட்டி ஜெயமோகன் மற்றும் காலச்சுவடின் எதிர்வினைகளை கோபால் ராஜாராம் கடுமையாக விமர்சித்திருந்தார். தம் தரப்பை அழுத்தம் திருத்தமாக மீண்டும் எடுத்துரைக்கிறார் ஜெயமோகன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60104152&edition_id=20010415&format=html )

தமிழோவியன் – விளிம்பு நிலை மக்களின் அனுபவத் தெறிப்பு- யமுனா ராஜேந்திரன்- தமிழோவியன் இலங்கையின் மலைப்புரத்து மக்களின் குரலான கவிதைகளை வடிவமைத்தவர். அவரது கவிதைகள் பெரிதும் சிங்கள வன்முறையில் பிரதிகள் அழிந்ததால் குறைவாகவே இப்போது வெளிவந்துள்ளன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60104151&edition_id=20010415&format=html )

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் – இலக்கியப் புத்தாண்டுப் பலன்- பாரதி ராமன்

கதைகள்- வழி- எஸ்.ராமகிருஷ்ணன், அடகு-காஞ்சனா தாமோதரன், காசுக்காக அல்ல- அஸ்வ கோஷ்

க்விதைகள்: பார்த்துப் போ- கோகுலக் கிருஷ்ணன், சிலுவையில் ஒரு சிவப்புப் புறா- சேவியர்.

சமையற் குறிப்பு- முட்டை பஜ்ஜி, நெத்திலி க்ருவாட்டுப் பொறியல்

ஏப்ரல் 22, 2001 இதழ்:

சச்சின் – லாவண்யா- சச்சின் லட்சியவாதி, தேசபக்தர், அணியின் பிற வீரர்களுடன் தோழமை உள்ளவர், இளைஞர்களுக்கு முன்னுதாரணமானவர்.

டெக்ஸன் ஆன் லைன் – டெக்ஸன் – உலகின் முதிர்ச்சியுள்ள 42 மென்பொருள் குழுமங்களில் 25 இந்தியாவில் உள்ளன. 2. ஹாரி பாட்டர் படிக்காதவர்கள் உடனே படிக்கவும். மிகவும் சுவையான கதை.

புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் – எதிர்வினைகள் பற்றி – கோபால் ராஜாராம்- முந்தைய இதழில் தமது கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு கோபால் ராஜாராமின் பதில்.

இந்த வாரம் இப்படி – மஞ்சுளா நவநீதன்- 1. திருச்சியில் நுகர்வோர் சங்கம் பொதுச் சொத்தை வீணடிக்கும் கட்சிக்கு எங்கள் ஓட்டு கிடையாது என்று கோஷமிட்டது. 2. எல்லையில் பங்களாதேஷ் இந்திய வீரர்கள் மோதல், 3. வாஜ்பாயி படத்தை யார் பயன்படுத்தலாம் தமிழ் நாட்டுக் கட்சிகளிடையே போட்டி 4. சுப்ரமணியசுவாமி மீது காங்கிரஸ் எரிச்சல், 5.www.techreview.comக்குப் போய் விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கதைகள்: இரண்டாவது சாவு – சேவியர், மனைவி -ரகுநாதன் , திறப்பு – வண்ணதாசன்

கவிதைகள்- காதல், காதல், காதல் – ருத்ரா, விடிந்தபின் எல்லாம் மறையும்- ஜோன் ராஜரூபன்

அறிவியலும் தொழில் நுட்பமும்- தொலைதொடர்புக் குவியம் – விஜயராகவன்

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் – கனடாவில் கடன் – அ. முத்துலிங்கம்- கனடாவில் கடன் அட்டை வாங்கிய அனுபவம்.

ஏப்ரல் 30 இதழ்:

இந்த வாரம் இப்படி – மஞ்சுளா நவநீதன்- 1.ஜெயலலிதாவின் நான்கு வேட்பு மனுக்களும் நிராகரிப்பட்டன. 2.அவர் தம் நகைகளை உண்மையிலேயே ஏழைகளுக்குத் தானம் செய்வாரா? 3. அமெரிக்கத் துணைக்கண்ட நாடுகள் கூட்டம் க்யூபெக் நகரில். 4.நாகாலாந்தில் போர் நிறுத்தம் இலங்கையில் போர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104301&edition_id=20010430&format=html )

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- விஜயா தேஷ்பாண்டே- புத்தர் காலத்துக்கு முந்திய இந்திய மருத்துவத்தில் சராக சம்ஹிதா, சுஸ்சுருத சம்ஹிதா ஆகிய இரண்டு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. புத்தர் காலத்துக்குப் பின் பௌத்தத்தமும் இந்து மதமும் இணையாக அல்லது இணைந்து இந்திய மருத்துவத்தை வளர்த்தன. பௌத்தம் சீனத்தில் பரவும் போதே இந்திய மருத்துவமும் பரவியது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104302&edition_id=20010430&format=html )

நாவல் பட்டியல் பற்றி மீண்டும்- கோபால் ராஜாராம்- ஜெயமோகனின் கட்டுரை அதற்கு ராஜாராமின் எதிர்வினை (கட்டுரையாக). அதற்குப் பின் ஜெயமோகனின் மறுப்பு கடிதமாக. இதற்கு ராஜாராமின் பதில் கட்டுரையாக வந்துள்ளது. இந்தக் கட்டுரையை நான் சுருக்கித் தரும் முன் இந்தக் கட்டுரையில் வெளிப்பட்டிருக்கும் கோபால் ராஜாராமின் பண்பு நம்மை வியக்க வைக்கும். இடது சாரிகள் என்று தாக்குதலுடன் ஜெயமோகன் எழுதியுள்ள கடிதத்துக்கு எந்த வித வன்மமோ துவேஷமோ இன்றி பதிலளிக்கிறார். ஜெயமோகனின் இலக்கியத்தைப் பாராட்டும் ராஜாராம் அவர் முன்வைக்கும் ஒரு தகுதியை முற்றிலுமாக நிராகரிக்கிறார். ஜெயமோகன் எப்போதுமே ஒரு எழுத்தாளனுக்கு விரிந்து பரந்த வாசிப்பும் இலக்கியத்தின் வெவ்வேறு கால கட்டங்களின் உருவ உள்ளடக்க விவகாரங்களில் பாண்டியத்துவமும் இருக்க வேண்டும் என்று வாதிடுபவர். இதன் மறுபக்கம் அப்படி வாசித்துத் தன் பாண்டியத்துவத்தை வெளிப்படுத்த முடியாதவன் எழுத்தாளன் என்று சபைக்கு வரவே கூடாது. கோபால் ராஜாராமின் வாசிப்பு முதிர்ச்சி அற்றது என்றும் சாடுகிறார் ஜெயமோகன். ஆனால் கோபால் ராஜாராம் எழுத்தாளனுக்கு வாசிப்புப் பின்னணி கட்டாயம் என்னும் ஜெயமோகனின் கருத்தை முற்றிலுமாக அழுத்தம் திருத்தமாக நிராகரிக்கிறார். கநாசு வின் பொய்த்தேவு நாவலை அவர் ஒரு நல்ல படைப்பாக ஏற்கவில்லை. ஏனெனில் அது தலித்துகளை மேல்சாதியினரைப் பார்த்துத் தன்னை உயர்த்திக் கொள்ளும் செய்தியை உள்ளடிக்கியது என்று வாதிடுகிறார் ராஜாராம். கோபால் ராஜாராமின் நிதானமும் பண்பும் அவர் தம் கருத்துக்களில் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையை ஒரு பக்கமும் மறுபக்கம் அவரது பண்பான குணத்தையும் வெளிப்படுத்துகின்றன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104303&edition_id=20010430&format=html )

தமிழ் நாடு வன்முறையின் அரசியலும் சமூக இயலும் – 2001 தேர்தலும் – வ.ஐ.ச. ஜெயபாலன் – அண்டை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரளத்தில் மொழி மற்றும் மத அடிப்படையில் நடந்த வன்முறைகளை இலங்கைச் சூழலுடன் ஒப்பிடும் ஜெயபாலன், 2001 தேர்தலில் வன்முறை வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கிறார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20104304&edition_id=20010430&format=html )

சு.ரா.வுக்கு கனடாவில் இயல் விருது- அப்பாத்துரை முத்துலிங்கம்- சுராவின் இலக்கியய் பணிக்காக டொரொன்றோ பல்கலைக் கழகம் அளித்த விருதின் செய்தியும் சுராவின் பணி பற்றியுமான கட்டுரை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60104302&edition_id=20010430&format=html )

இரண்டு செய்திகள் – ஜெயமோகன் இரண்டு செய்திகளைத் தருகிறார் – 1.பொன்னீலனின் தாயார் அழகிய நாயகி அம்மாள் அவர்கள் அமரராகி விட்டார். அவர் தமது நினைவுகளிலிருந்து பதிவு செய்த ‘கவலை’ என்னும் தன் வரலாற்று நாவல் வெளிவர வேண்டும் என்று சுரா விரும்பியதைக் குறிப்பிடுகிறார். 2. பாமா எழுதிய கருக்கு என்னும் தன் வரலாற்று நாவலுக்கு கிராஸ் வர்டின் பரிசு கிடைத்துள்ளது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60104303&edition_id=20010430&format=html )

கவிதைகள்- மகிழ்ச்சியும் கவலையும் – பாரதி ராமன், மீனவ வாழ்க்கை, தேர்தல் – சேவியர், என் காதல் – பி.கே- சிவக்குமார்

கதைகள் : Ctrl+ Alt + Del -ஆகேஷ், காவலுக்கு- தி.ஜானகி ராமன்

அறிவியலும் தொழில் நுட்பமும் – இரா. விஜய ராகவன்

Series Navigationவெள்ளையானை நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *