தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று

This entry is part 20 of 26 in the series 8 டிசம்பர் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 92

என் கனவை நிறைவேற்று

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

image (2)

 

தப்பிக் கொள்கிறான் எனக்குத்

திகைப்பூட்டி !

தப்பிச் செல்கிறான் இன்னும்

எனக்குப் பிடிபடாது !

அவனுக் கென்னை அளித்திட நான்

முன்வந் துள்ளேன் !

எங்கே ஒளிந்து கொண்டான் அவன் ?

ஒவ்வோர் நாளும்

நூறு சாக்குப் போக்குகள்

கூறிப் புறத்தே

மறைந்து கொள்கிறான் !

என் கனவு நிறைவேறியது

வந்து விடு !

என் இளமை வாலிபத்தை நீ

வளமை ஆக்கி விடு  !

இந்தப் பூந்தோட்டத் துக்கு

இனிய தென்றலை

அனுப்பி வை !

 

துயர்ப் படல மூட்டத்தை

நிவர்த்தி செய் !

நல்வாழ்வுக்கு  எனக்கோர்

நற்செய்தி அனுப்பு

புதிய இசைப் பாடலாய்  !

வாழ்வு மீது

நம்பிக்கைத் தாகம் மிகுந்து

கொந்தளிக்குது !

அதற்கோர் வாய்மொழி தேடு

இருட்டு வெளியில் !

விண்வெளியில் செல்லட்டும்

திசை மாறும் காற்றாக,

தரையில் வீழ்ந்த

போகுள்* பூக்களின் சிதறும்

நறுமணம் போல் !

 

++++++++++++++++++++++++++++++

போகுள்* பூக்கள் : Bokul tree’s creamy white flowers

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 218   1939 ஜனவரியில்  தாகூர்  77 வயதினராய்  இருந்த போது  எழுதப் பட்டது.  இந்தக் கீதம் ஷியாமா [Shyama] பாட்டு நாடகத்தில் பாடப் படுகிறது.  அதில் ஷியாமா முன்பின் தெரியாத ஒருவன் மீது காதல் வயப்படுகிறாள்.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  December  3 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *