திண்ணையின் இலக்கியத்தடம் -12

This entry is part 18 of 26 in the series 8 டிசம்பர் 2013

சத்யானந்தன்

ஜூலை1 2001 இதழ்:

கதைகள்: செக்குமாடு – குறுநாவலின் முதல் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன்

ஜூலை 7,2001 இதழ்:

ஜெயமோகனின் கன்னியாகுமரி- வ.ந.கிரிதரன்- ஒரு நாவலைப் படித்து முடித்தபின் அது வாசகர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு நாவலின் வெற்றியின் அளவுகோல். கற்பு என்பது பற்றிய விழுமியங்களை மு.வ., விந்தன், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன் அனைவருமே கேள்விக்கு ஆளாக்கியிருக்கின்றனர். ஜெயமோகன் நாவலில் அவரது முன்னுரையைக் கருத்திற் கொள்ளாமல் பார்த்தால், நாவலை ஆபாச இலக்கியம் என்னும் பிரிவுக்குள் நிச்சயமாக அடக்கி விடலாம்.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60107071&edition_id=20010707&format=html )

அஹிம்ஸையில் எதிர்ப்பு- Sister True Emptiness- 60களில் தென் வியட்னாமில் பௌத்தர்களுக்கு எதிராக நடந்த அரசு அடக்குமுறைகளையும் தன்னை எரித்தும் போராட்டத்தில் சுடப்பட்டும் இறந்த பௌத்தத் துறவிகள் மற்றும் பொது மக்களின் தியாகத்தை விளக்கும் கட்டுரை. எழுதியிருப்பவர் பௌத்தப் பெண் துறவி. (http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107071&edition_id=20010707&format=html )

இந்த வாரம் இப்படி- இரா.மதுவந்தி- 1.அதிமுகவின் அரசியல் நடவடிக்கைகள், 2.பாமக அதிமுக கூட்டணி முறிவு, 3.பாஜகவின் அரசியல் ஏடு சீனா பற்றி எழுதியுள்ள கட்டுரை சரியாக வரவில்லை.4.நாகாலாந்தில் ஏன் அமைதி வரவில்லை. 5. ஒரு ஹிந்திப் படம் முஸ்லிம் அமைப்புகளால் எதிர்க்கப் படுகிறது.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107072&edition_id=20010707&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்

கெரெக் மக்கா செய்த செல்லுல்லார் தொழில் நுட்பப் புரட்சி, செவ்வாய் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரின் கதை, நம் எதிர்காலத்தைப் புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு.

கதைகள்: செக்குமாடு – குறுநாவலின் நிறைவுப் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன்

கவிதைகள்- நான் திரும்பி வந்து விட்டேன் – மீனா, தொடர்ச்சியாய் சில தவறுகள்- சேவியர், நாட்டு நடப்பு- பசுபதி , நகரத்து மனிதனின் புலம்பல்- வ.ந.கிரிதரன், எதிர் நிலைகள், எதிர் வினைகள்- பாரதி ராமன்

சமையற் குறிப்பு- காய்கறி சூப் , எலும்பு சூப்

ஜூலை 15,2001 இதழ்:

அஹிம்சையில் எதிர்ப்பு- 2- இரண்டாம் பகுதியில் ஸிஸ்டர் ட்ரூ எம்டினெஸ் மாணவர்களின் தீவிரமடைந்த போராட்டம் இறுதியில் ராணுவப் புரட்சி மூலம் கொடுங்கோல் ஆட்சி வீழ்த்தப் பட்டதையும் விவரிக்கிறார். தாய் மண்ணின் மீது பற்று என்னும் மையக் கருத்தில் ஒரு அழகிய கவிதை இதன் முக்கிய அம்சம்.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107152&edition_id=20010715&format=html )

இந்த வாரம் இப்படி- இரா.மதுவந்தி- ஜெயலலிதா கட்டளை 2. முஷாரப் வருகை 3. காமராஜர் பிறந்த நாள்
(http://www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20010715&format=html )

நகர்வாசமும் வீடுபெறலும்- யமுனா ராஜேந்திரன்

பிரான்ஸில் இரண்டு நாட்கள், இந்தியாவில் இரண்டு மூன்று வாரங்கள் கட்டுரையாசியரின் பயணத்தில் நிகழ்ந்த சந்திப்புகள், பரிமாற்றங்கள் மற்றும் விவாதங்கள்

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107153&edition_id=20010715&format=html )

pl0715014ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை?- மார்வின் ஹாரிஸ்- இந்துக்கள் மத நம்பிக்கையின் காரணமாகப் பசுக்களைக் கொள்வதில்லை. இதனால் பொருளாதார ரீதியில் நஷ்டமே. காந்தியடிகள் கூட பசுவதை கூடாது என்றே வாதிட்டார். இந்தியர்கள் பசுவால் பெறும் பயன் பன் மடங்கு என்பது அவர்கள் எதையும் வீணடிப்பதில்லை என்பதால். பசுவால் அல்ல.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107154&edition_id=20010715&format=html )

ஜனநாயக அராஜகம்- காலச்சுவடு கண்ணன்- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விதத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் கட்டுரை
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107155&edition_id=20010715&format=html )

கன்யாகுமரி ஏன் நம்மைச் சீண்ட வேண்டும் – புதிய ஜீவா- வ.ந.கிரிதரன் ஜெயமோகனின் கன்யாகுமரி நாவலை விமர்சித்ததற்கு எதிர்வினை. இந்த நாவல் ஆழ்மனங்களின் அடுக்குகளைத் தொடர்வது. நல்ல முயற்சி.பாசாங்குகளற்றது. அதே சமயம் ஆண் பெண் உறவில் ஒழுக்கம் என்னும் ஒரு பரிமாணத்தை மட்டுமே நாவல் தொடுகிறது.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60107151&edition_id=20010715&format=html )

கவிதைகள்- இருவர்- ஞாநி, கொலுசுகள்- ருத்ரா, தோற்றுப் போகாதே-சேவியர், பழக்கமாகும் வரை- கோகுல கிருஷ்ணன், விடியல்- ராஜன், என் விடுமுறை- அனந்த், புகழின் நிழல்- பாரதி ராமன், சுடர்ப்பெண்கள் சொல்லும் ரகசியம்- வ.ந.கிரிதரன்.

கதைகள்- பசிக்கிறது- இரா.சுந்தரேஸ்வரன், தொலைதல்- லாவண்யா
ஜுலை 22 இதழ்:

காஷ்மீர் பிரச்சனை: இரா. மதுவந்தி, மஞ்சுளா நவநீதன்- காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காஷ்மீரைப் பிரித்துத் தனி நாடாக்குவது இல்லை. சுதந்திரத்தின் போது நடந்த இந்தியப் பிரிவினையை மாற்றி ஒன்று பட்ட இந்தியாவை மீண்டும் உருவாக்குவதே.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107222&edition_id=20010722&format=html )

இந்த வாரம் இப்படி- இரா. மதுவந்தி- நடிகர் திலகம் மறைவு, முஷாரப் கூத்து, இந்து யாத்திரிகர்களும் இந்து கிராமத்தவர்களும் கொலை

(http://www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20010722&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- மின்னணுக் கல்வி அறிவு- விஜயராகவன்

கவிதைகள்- அன்பே-அ.லெ.ராஜராஜன், ஹைக்கூ கவிதைகள்-பிரபு, நிரந்தர நிழல்கள்- எட்வின் பிரிட்டோ, சேவியர் கவிதைகள், போதும் எழுந்து வருக, நன்றி மீண்டும் வருக -ருத்ரா

கதைகள்: ஆசிரியரும் மாணவனும்- வ.ந.கிரிதரன்
சமையற் குறிப்பு- பாசிப் பருப்பு சாம்பார்

ஜூலை 29,2001 இதழ்

பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள்: ஆ.இரா.வேங்கடாசலபதி- புதுமைப்பித்தனின் படைப்புகளைப் பதிக்கும் போது வேங்கடாசலபதி ஆய்ந்து கண்ட பழைய இலக்கிய இதழ்கள் மற்றும் வெளியாகி உள்ள நூல்களின் பாடப் பிழைகள் பற்றிய விரிவான கட்டுரை. அவசியம் முழுமையாகப் படிக்க வேண்டும். புதுமைப் பித்தன் சொ.வி. சொ.விருதாச்சலம், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராசாரி என்னும் புனைப்பெயர்களிலும் எழுதி இருக்கிறார்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60107291&edition_id=20010729&format=html )

இந்த வாரம் இப்படி- இரா.மதுவந்தி- இந்திய ராணுவத் தலைவரின் பேட்டி, 2.மேலவளவு தலித்துகளைக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை, 3.பூலான் தேவி பாராளுமன்ற உறுப்பினரானார், 4.தேசிய முன்னணியில் பாமக.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107291&edition_id=20010729&format=html )

ஒரு அரசியல் பயணம்- காலச்சுவடு கண்ணன்- ஒரு தாதாவால் தம் நிறுவனக் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட பிறகு அவரை எதிர்கொண்டதும் அவரைப் பற்றிய முழுவிவரம் தெரிந்ததும் ஒரு அரசியல்வாதி எப்படி உருவாகிறார் என்று பிடிபட்டதும்

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20107293&edition_id=20010729&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- கடலை அழிக்கிறது மனித குலம், கிருமிப் போர் முறை (Germ warfare), புதிய மாசரெட்டி கார்.

கவிதைகள்- நிலவு ஒரு பெண்ணாகி- கே ஆர் விஜய், காதலும் கணினியும் -கஜல், நிகழ்வின் நிழல்கள், இருக்கிறது ஆனால் இல்லை- சேவியர், தொழில்- பாரதிராமன், தனிமை-அனந்த், ஜாதி-நா.பாஸ்கர்

சமையற் குறிப்பு- பூசணி அல்வா, சேனைக் கிழங்கு பக்கோடா

ஆகஸ்ட் 5, 2001 இதழ்:

ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்: இந்திரா பார்த்தசாரதி – 1971ல் இந்திரா பார்த்தசாரதி தமிழ்பத்திரிகைகள் செய்யும் ‘இலக்கிய’ப் பணியைத் தோலுரித்து எழுதியுள்ள கட்டுரை. இன்றும் நிலை மேலும் மோசமாகி இருப்பதே சோகம். தொல்காப்பியர் மற்றும் சித்தர் பாடல்களில் இருந்து அவர் எடுத்தாண்ட அரிய பகுதிகளில் சில கிழே:

இலக்கியத்துக்கு இதுதான் எழுத வேண்டும் என்னும் வரையறை கிடையாது என்னும் தொல்காப்பியர் கூற்று:

அறக்கழிவு உடையன பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப

புதிய மரபைத் தோற்றுவிக்கலாம் என்று-

விருந்தே தோறும்
புழுவது புனைந்த யாற்றின் மேற்றே

சிவவாக்கியர் பாடல்
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமா நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

பாம்பாட்டிச் சித்தர் பாடல்

நாறிவரும் எச்சில் தனை நல்லமுதமென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்குமிழ் என்றும்
கூறுவார்கள்.. புத்தியில்லாக் கூகை மாந்தர்கள்

புதுமையை, சுதந்திர சிந்தனையைப் புறந்தள்ளும் – அதிகார பீடத்துக்கு அடிவருடும் தமிழ்ச் சூழலை இ.பா. சாடி 40 வருடங்களுக்கு மேலாகி விட்டது. பிற மொழிகளில் இத்தகைய நிலை இல்லை என்பதற்கு “மாத்ரு பூமி” பத்திரிக்கையை உதாரணமாகக் காட்டுகிறார். முழுமையாகப் படிக்க வேண்டும்.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108051&edition_id=20010805&format=html )

இந்த வாரம் இப்படி- சின்னக் கருப்பன் – ஜெயலலிதா புது வழக்கு, யூடி ஐ வீழ்ச்சி, வாஜ்பாய் ராஜினாமா, வன்முறை சூழல்

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108052&edition_id=20010805&format=html )

தேவதேவனின் கவிதையுலகம்- ஜெயமோகன். வீடு என்னும் படிமம் தேவதேவனின் பல கவிதைகளில் தென்படும். அவர் நவீனத் தமிழ்க் கவிதையின் தத்துவ தரிசனங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஜெயமோகன் எடுத்தாண்டுள்ள கவிதைகளில் ஒன்று:

அமைதி என்பது

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்து விட்டு
உன்னருகே வருகிறேன்

அமைதி என்பது மரணத் தருவாயோ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60108051&edition_id=20010805&format=html )

தினம் ஒரு கவிதை- சங்கமம்- கே ஆர் விஜய்- பெங்களூருவில் ‘தினம் ஒரு கவிதை’ உறுப்பினர்களின் சங்கமக் கூட்டம் நடந்தது. அதன் தொகுப்பு

அறிவியலும் தொழில் நுட்பமும்- 1.எகிப்தை அழித்தது என்ன? 2.ரோபோ கப் 2001

கவிதைகள்: தி கோபால கிருஷ்ணன் கவிதைகள், தேவதேவனின் மூன்று கவிதைகள், சேவியர் கவிதைகள், சென்னை- பிரபு, டி எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும் – ருத்ரா, என்று கூறுபவர்க்கு- இளங்கோ, சூரியனாவேனோ- திலகபாமா. ஹைக்கூ கவிதைகள்- கே ஆர் விஜய்.

கதைகள்: மாபெரும் பயணம்- ஜெய மோகன், வேறு வேறு அணில்கள்- வண்ணதாசன்
சமையற்குறிப்பு: மசாலா சப்பாத்தி, மைதா மாவு அல்வா

ஆகஸ்ட் 12, 2001 இதழ்:
பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும்- மார்வின் ஹாரிஸ்- ஆடுகள் போல பன்றிகளுக்கு உடலில் முடி கிடையாததால் அவை சேற்றில் அல்லது தமது கழிவுகளின் மீது புரண்டுத் தம்மைக் குளிர்வித்துக் கொள்ளும். 2. மத்திய கிழக்கு நாடுகளில் பெரிதும் காடுகள் அழிந்து ஆடுமாடுகளுக்கான உணவுக்கே வழியில்லாமற் போனது பன்றி வளர்ப்பு குறைய மற்றொரு காரணம்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108121&edition_id=20010812&format=html )

இந்த வாரம் இப்படி -மஞ்சுளா நவநீதன்- சிவாஜி மறைவு, முஷாரப் விவகாரம், கருணாநிதி கைது, ஏர்வாடி மன நோயாளிகள் எரிந்து சாவு
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108122&edition_id=20010812&format=html )

தமிழ் மதம் என்று உண்டா- இந்திரா பார்த்தசாரதி-விஷ்ணுவை ஆரியர் போலவே திராவிடரும் கடவுளாகக் கொண்டனர் என்று தொல்காப்பியரை மேற்கோளிடுகிறார் இ.பா.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108123&edition_id=20010812&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்- வேகவேகமாக வாழ்வு, ஒரு தண்ணீர்-தண்ணீர் கதை- சுப முடிவுடன், உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப் பட்ட தக்காளி, ஒரு அதிவேக கணினி கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது

கவிதைகள்: டி எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும் 3– ருத்ரா, திக்குத் தெரியாத காட்டினிலே- வ.ந.கிரிதரன், இரண்டு கரிகாலன் கவிதைகள், ஐந்து கோபாலகிருஷ்ணன் கவிதைகள், ஒரு பேறு-விக்கிரமாதித்தன், சிதைந்த இரவிலொன்று- இளங்கோ,டூக் ரெட் ப்ரெட் மற்றும் மெல் டாக் எழுதிய கனெடியக் கவிதைகள், அன்புத் தங்கைக்கு-நா.பாஸ்கர், எதிரியிடம் ஒரு வேண்டுகோள்-கோகுலகிருஷ்ணன், புரியவில்லை-ஸ்ரீனி, ஆறு சேவியர் கவிதைகள்.

கதைகள்: விசாரணை- நாகூர் ரூமி, கேட்டால் காதல் என்பீர்கள்-சேவியர், முதல் மனிதனும் கடைசி மனிதனும்- முனைவர் செண்பகம் ராமசாமி

சமையற் குறிப்பு: ரவா பொங்கல், உசிலி உப்புமா

ஆகஸ்ட் 19இதழ்:

இந்திரா கோஸ்வாமியின் எழுத்துலகும் இந்திய ஞானபீட விருதும்- பாவண்ணன்- இந்திரா கோஸ்வாமி அஸ்ஸாமின் தலை சிறந்த எழுத்தாளர் . பெண்களின் துயரே மையப் பொருளாகும் இவரது படைப்புகளில்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60108121&edition_id=20010812&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும் – தண்டுசெல்கள் என்பவை யாவை?
கவிதைகள்: டி எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும் 2- ருத்ரா, தினந்தோறும்- ஸ்ரீனி, பி ஆர் விஜய் கவிதைகள், சேவியர் கவிதைகள், பாலம் – விக்கிரமாதித்தன், கொட்டி விட்ட காதல்- நா.பாஸ்கர்
கதைகள்:வேதாளம் சொன்ன ‘சாட்’ கதை- வ.ந.கிரிதரன், கிராமத்துப் பாதை- பா.ஜெயப் பிரகாசம், தாயிற் சிறந்ததொரு- விந்தன்.

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்- அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

சமையற் குறிப்பு: ரவை சீடை, வாங்கி பாத்

ஆகஸ்ட் 19 2001 இதழ்:

வெற்றியும் அதிர்ஷ்டமும் – பாரி பூபாலன்- அமெரிக்காவுக்கு வந்த போது பெரிய வெற்றி அடைந்த மகிழ்ச்சி இருந்தது. இப்போது வெறுமை மனதில். வெற்றியின் அளவுகோல் மிகவும் நுட்பமானது. கடினமானது.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108191&edition_id=20010819&format=html )

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள், 2.தி.க.வின் வரவு செலவு கணக்கு, 3. மனித உரிமைகள்

(http://www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20010819&format=html )

இஸ்லாமிய அடிப்படை வாதமும் இந்துத்துவமும்- காலச்சுவடு கண்ணன்- தமிழ்ச் சூழலில் இந்துத்துவ அடிப்படைவாதம் எதிர்ப்புக்குரியதாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் மன்னிக்கக் கூடியதாகவும் இரு விதமாக அடையாளப் படுத்தப் படுகின்றன.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108193&edition_id=20010819&format=html )

பிரிவினையின் ஞாபகமும் நாவல்களும்- ஃபாரிதா எம் சையது (பாகிஸ்தான்) – சுமார் பத்து லட்சம் மக்களைப் பலி கொண்ட இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரங்களைப் பல நாவல்கள் பதிவு செய்திருக்கின்றன. இரு நாட்டு மக்களின் மனதில் இன்னும் ஆறாத ரணம் அது.

(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108194&edition_id=20010819&format=html )

பாலமாகி சிறந்து நிற்கும் பணி- பத்மநாப ஐயருடன் யமுனா ராஜேந்திரனின் உரையாடல்- க்ரியா ராமகிருஷ்ணன், நா.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உட்பட பல எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருந்து பல இலங்கைத் தமிழ்ப் படைப்புகளை தமிழுலகுக்கு அறிமுகம் செய்த அனுபவங்களைப் பகிர்கிறார் ஐயர்.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108195&edition_id=20010819&format=html )

குறள்- கவிதையும் நீதியும்- ஜெயமோகன்- ஒரு நீதி நூல் என்றே அணுகப் படுவதால் குறளை வாசிப்போர் அதன் கவித்துவமான அம்சத்தைக் காணத் தவறி விடுகின்றனர். நவீனக் கவிதை நீதி சொல்லாது போதிக்காது என்பது வேறு. குறளை அதன் கவித்துவப் பரிமாணத்தை ஆய்ந்து ருசித்து வாசிப்பது என்பது வேறு.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60108191&edition_id=20010819&format=html )

காலந்தோரும் கலந்துறவாடும் மொழிகள்- வெங்கட் சுவாமிநாதன்- இதிகாசங்களை எல்லா மொழிகளுமே உள்வாங்கித் தம் படைப்பு ஒன்றைக் கொண்டன. ஆனால் சம காலத்தில் இந்திய மொழிகளுக்கு இடையே மொழிபெயர்த்துப் படைப்புகளைப் பகிர்வதில் சரஸ்வதி ராம்நாத், பாவண்ணன் போன்றோர் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். தலித் இலக்கியம் இந்தியாவில் இப்போது பெற்றுவரும் மலர்ச்சி முழுமையாக உணரப் படாது போய் விடுகிறது. மொழிபெயர்ப்புக்கு கௌரவம் தரும் சூழல் இன்னும் உருவாகவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60108193&edition_id=20010819&format=html )

தினம் ஒரு கவிதை- கலந்துரையாடல்- சென்றவாரத் தொடர்ச்சியாக நிகழ்ச்சி பற்றிய சுருக்கமான கட்டுரை.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60108194&edition_id=20010819&format=html )

ஆகஸ்ட் 25, 2001 இதழ்: போலி விவாதத்தின் நிஜ முகங்கள்- புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை- அரவிந்தன்- இளைய பாரதி என்பவர் புதுமைப்பித்தன் தம் மனைவிக்கு எழுதிய “கண்மணி கமலாவுக்கு ” என்று எழுதிய கடிதங்களில் தொகுப்பை வெளியிட்டது முதலில். புதுமைப்பித்தனின் படைப்புகளை காலச்சுவடு நிறுவனம் மொத்தமாக வெளியிட்டது பின்னர். இது விஷயமாக திண்ணையில் நிறைய கட்டுரைகள் வந்த பின் காலச் சுவடு தரப்பைத் தெளிவு படுத்தும் மற்றும் ஒரு கட்டுரை.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108251&edition_id=20010825&format=html )
இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- 1.இனவாதத்துக்கு எதிராக டர்பன் மாநாடு, 2. பெரியார் பற்றிய அ.மார்க்ஸ் புத்தகம், 3. ஆர் எஸ் எஸ் – கிறித்துவ மதத் தலைவர் சந்திப்பு, 4.பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆர் எஸ் எஸ் பிடியில்?
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108252&edition_id=20010825&format=html )
கால அதிர்ச்சி- காலச்சுவடு கண்ணன்- அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இந்தியாவில் பண்பாடு உறைந்து விட்டதாகக் கருதுகிறார்கள். பிற்போக்கான பல வழிமுறைகளை அவர்கள் கை விடவே இல்லை. ஒரு விவாகரத்து வழக்கே உதாரணம். இந்தியா தொடர்ந்து கலாசார மாற்றங்களை உள்வாங்கி உருமாறிக் கொண்டு தான் இருக்கிறது.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108253&edition_id=20010825&format=html )
அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் கோட்பாடும் ஆலன் கிரிஸ்பானும்- ப்ரையன் எஸ் வெஸ்பரி- பணப்புழக்கம், பணவீக்கம், மைய வங்கி முடிவு செய்யும் வட்டி விகிதங்கள் பற்றிய பொருளாதாரக் கட்டுரை.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108254&edition_id=20010825&format=html )
கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்- இந்திரா பார்த்தசாரதி- பழைய திண்ணை இதழ்களை நாம் தேடிப் படிப்பது இது போன்ற அரிய கட்டுரைகளுக்காகத் தான். சிலப்பதிகாரத்தை இளங்கோ அடிகள் கண்ணகியின் கற்பு நெறியைப் போற்ற எழுதினார் என முன் வைக்கப் படும் வாதங்களைப் புறந்தள்ளுகிறார். இ.பா. தன்னைப் பிரிந்த பின் மாதவி ஒரு ஓலையை கோவலனுக்கு அனுப்புகிறாள். ஆனால் கண்ணகியோ தனது கற்பு நெறியால் தான் உயர்ந்தவள் என்னும் கண்ணோட்டத்தில் அவன் பிரிந்த நாட்களில் அவனுக்கு எந்தக் கடிதமும் அனுப்பவில்லை. மறுபடி அவன் திரும்ப வந்த போதும் அவனுடம் அளவளாவவோ நல்லுறவுடன் வாழவோ முயலவில்லை. கோவலன் கவுந்தி அடிகளுடன் அளவளாவியது தான் அதிகம். இறுதி வரை கண்ணகிக்குத் தன் கற்பின் பெருமையே பெரியதாக இருந்தது. கோவலன் இன்னொருத்தியோடு போயிருக்கா விட்டால் இந்தப் பெருமை கிடைக்காமற் போயிருக்குமோ என்னுமளவு அதுவே முக்கியமானதாக இருந்தது. இதை கீழ்க்காணும் பாடல் மூலம் நிறுவுகிறார் இ.பா. அவன் கொலையுண்ட பின் மதுரை வீதிகளில் அரற்றியபடி வந்த கண்ணகியின் கூற்று இது:

பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல்
கொண்ட கொழுநர் உறுகுறை குறை தாங்குறூம்
பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல்
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108255&edition_id=20010825&format=html )

திண்ணைக் கவிதைகள்- ஒரு விமர்சனம்- இள முருகு
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60108252&edition_id=20010825&format=html )
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
சோ அடுத்த முதல்வரா- பாராது- ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்கும் முன் ஜெவுக்கு பதிலாக யார் வரலாம் என்ற யூகங்களுக்கு நடுவே எழுதப்பட்டது.
(http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108256&edition_id=20010825&format=html )
கதைகள்: எலிப்பொறி- பவளமணி பிரகாசம், எழுத்தோ எழுத்து – பாரதிராமன்
கவிதைகள்: ஆலும் மரம்- விவேகா, சாத்தான் சொல்லும் வேதங்கள்:ஸ்ரீனி, மேகம்- சங்கர் நாக், புதுமைகள்- பெ.மகேந்திரன், காதல் விண்ணப்பம்- வந்தியத் தேவன், ஒரு வெள்ளை அறிக்கை மற்றும் சில கவிதைகள்- தி.கோபால கிருஷ்ணன், சேவியர் கவிதைகள், மூன்று பேர்- விக்கிரமாதித்தன்.

சமையற்குறிப்பு: மிளகாய்ப் பூண்டு சட்டினி.

Series Navigationஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கைவால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *