“ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

ஷாலி

// இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.//

இன்றைய ஹிந்து சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் மூடுமந்திரமே மேலுள்ளது.எப்படி?
ஹிந்து வேத தர்மத்தின் அடிப்படை இரண்டு, 1. ஸ்ருதி.நிலையானது. 2.ஸ்மிருதிகள். காலத்திற்க்கேற்ப மாறுவது.ஸ்ருதி-அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும்,ஸ்ருதி-அந்த தத்துவங்களையொட்டி காலத்திற்க்கேற்ப ஏற்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக் காலத்திற்க்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை.
http://www.tamilhindu.com/2008/06/questionsandanswers1/

வேத காலத்திலும் ஒருபால் புணர்ச்சியாளர்களுக்குள் மணம் நடக்கவில்லை.
அந்தக்காலத்தில் நடைமுறையிலிருந்த சதி,பாலிய விவாகம்,தேவதாசி போன்ற சடங்குகள் இன்று ஒழிக்கப்பட்டது. இந்தகாலத்தில் இல்லாத ஸ்மிருதிகளை காரணம் காட்டி ஓரினப்புணர்ச்சி ஜோடிகளுக்கு சட்ட அந்தஸ்து கேட்பது ஒரு மோசடி வாதமே!
எப்படியோ அவர்களுக்கு ஒரு தெய்வீக ஒளிவட்டம் தேவைப்படுகிறது.இந்த ஒளிவட்டத்தை பரிந்துரைப்பவர்கள் மாட்சிமை தாங்கிய இந்திய அரசியாரும் அவரது பட்டத்து இளவரசரும், இவர்களின் மூதாதைய ரோமானிய மன்னனான நீரோ,காலிகுலா,ஜூலியசீசர் போன்றவர்கள் ஓரின சேர்க்கையை ஆதரித்ததுடன் அதில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்கள்.ஆகவே ஹிந்துக்கள் இவர்கள் வழி காட்டுதலை கணக்கிலெடுக்க தேவையில்லை.

மனு ஸ்மிருதியில்,”ஓரினசேர்க்கையில் ஈடுபட்டபிறகு அதில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும்.” கூறப்படுவதாக சொல்கிறார்கள்.இதை ஒரு ஆரோக்கியத்திற்கான வழி காட்டியாக வேண்டுமானால் இன்றும் எடுத்துக்கொள்ளலாம்.எந்த உறவோ? அதற்குப்பின் குளிப்பது நல்ல விசயமே. இதை வைத்துக்கொண்டு அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து,வேத மந்திரம் ஒலிக்க கெட்டி மேளம் கொட்டி ஆணுக்கும்,ஆணுக்கும் மாங்கல்யம் தந்தனோம் சட்டப்படி செய்வது ஹிந்து தர்மமா?
ஹிந்து சமூக சட்ட வழிகாட்டி ஸ்மிருதிகள் இதைத்தான் சொல்கின்றதா?நிச்சயம் இல்லை.

மகாபாரதத்தில் வரும் சிகண்டி(திருநங்கை) கூட ஒருபால் புணர்ச்சிக்காக சிகண்டியாக மாறவில்லை.
பாஞ்சால மன்னன் துருபதனின் மகன் சிகண்டி,முற்பிறவியில் அம்பா என்னும் பெண்ணாக காசி அரசனின் மூத்த மகளாக இருந்தாள்.அம்பாள்,அம்பாலிகா தங்கைகள்.சுயவரத்தின் போது பீஷ்மர் கவர்ந்து சென்றார்.மற்ற மன்னர்களும் பீஷ்மரும் அம்பாவை மணக்க மறுக்கவே பீஷ்மரை பழி வாங்க கடும் தவம் செய்து சிகண்டியாக பிறந்து குருசேத்திரத்தில் களத்தில் நிற்கிறாள்.இயற்கையாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் திருமணம் தனக்கு மறுக்கப்பட்டதே அம்பாவின் கோபத்திற்கு காரணம்.

அம்பா தான் சிகண்டி என்று பீஷ்மருக்கு தெரிந்ததால் ஒரு பெண்ணை எதிர்த்து போரிட மறுக்கிறார்.இறுதியில் சிகண்டியை முன்னிறுத்தி அர்ச்சுனன் பீஷ்மரை கொள்கிறான்.

அன்று காசி மன்னன் தன் மகன் சிகண்டி ஒரு தன்பால் பிறவி என்று தெரிந்து அதே பாலைச் சேர்ந்த ஒரு திருநங்கையை திருமணம் செய்து வைத்து சட்ட அந்தஸ்து கொடுக்கவில்லை.ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்வித்தான்.திருநங்கை சிகன்டியால் ஆணுக்குரிய உறவை தர முடியாததால் ஓடிவிட்டான்.என்பதே பாரதம் சொல்லும் கதை.

அர்ச்சுனனுடன் கூடுவதற்கு ஊர்வசி ஆசைபட்டபோது அவன் அதற்க்கு மறுக்கிறான்.இதனால் கோபம் கொண்ட ஊர்வசி “நீ அலியாகப் பிறப்பாய் என்று சாப மிட்டாள். இந்த சாபத்தினால் அர்ச்சுனன் ப்ருங்கலன் என்ற அலி ரூபத்தில் துரியோதனனுக்கு தெரியாமல் மறைந்து வாழ்ந்தான்.இந்தக்கதையிலும் ஆண்,பெண் உறவையே முக்கியப்படுத்தப்படுகிறது.ஓரினப் புணர்ச்சியை அல்ல.

கடவுள் சம்மந்தப்பட்ட எந்த மதத்திலும் இயற்கைக்கு புறம்பான வாழ்க்கை நெறிகளை சொல்லவே இல்லை.வேதத்தின் அடிப்படையான நிலையான ஸ்ருதியில் ஓரினபுணர்ச்சி கூடல் பற்றி ஒன்றும் இல்லை.அதேசமயம் ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் மற்றும் இஸ்லாமும் இதற்க்கு கடும் தண்டனைகளை சட்டமாக்குகின்றன.லூத்து (LOT) என்ற தீர்க்கதரிசி ஓரிறை கொள்கையை போதித்தபோது,அவ்வூர் ஆண்கள் அனைவரிடமும் ஆண் புணர்ச்சியே வழமையாக இருந்தது.இந்த வரம்பு மீறிய மக்களை தீக்கற்களை(Meteor shower) மழையாக பொழிந்து அழித்ததாக குர்ஆன் கூறுகிறது.

ஓரினப்புணர்ச்சியை மூன்றாவது காமம் என்கிறது வேதகாலம். ( Tritrya-Prakriti ) அக்காலத்தில் தன்பால் புணர்ச்சியாளர்களை மக்கள் எவரும் புறககணித்ததில்லை.இழிவு படுத்தியதில்லை.இவர்களை க்லிபா,நபும்ஷக,சாந்தா,என்று அழைத்தனர்.மக்களால் வணங்கப்படும் தெய்வங்களாக ஸ்ரீ அர்த்தனாரிஸ்வரர்,அரவான்,பகவதி தேவி,சைதன்ய மகா பிரபு,சாந்தி-சாமுண்டா,கணதார,கங்கம்மா தேவி,கார்த்திகேயன்,எல்லம்மா தேவி என்று இன்றும் காட்சி தருகின்றனர். உடல் ஊனமுற்றவர்களைப்போலவே இரக்கப்படவேண்டியவர்கள் பால் ஊனமுற்றவர்கள்.அதேசமயம் “கிடக்கிரதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை “ என்பது அறிவுக்குப் பொருத்தமல்ல.

ஓரினப்புணர்ச்சியாளர்களுக்கு சட்டப் பூர்வமான திருமண அந்தஸ்து கொடுத்தால் என்ன நடக்கும்? இன்று இலை மறை காய் மறையாக நடக்கும் ஓரினப்புணர்ச்சி பகிரங்கமாக நடக்கும்.சட்டபூர்வமற்ற சிறுபான்மைவாதிகளுக்கு சட்ட அந்தஸ்து கிடைத்தால் தங்களை பெரும்பான்மையாக மாற்றிக்கொள்ள பெரிதும் முயற்சி செய்யத்தான் செய்வார்கள்.

இன்று நம் பள்ளி,கல்லூரி,மற்றும் வேலை செய்யும் இடங்களில் அடையாளம் தெரியாமல் உள்ளவர்கள் இனிமேல் பகிரங்கமாக தன் இனத்திற்கு ஆள் பிடிப்பார்கள். “இதில் ஒன்றும் தப்பில்லை என்று உச்ச நீதி மன்றமே சொல்லி விட்டது.வாங்க பிரதர் ஜாலியாக இருக்கலாம்.” என்று பலஹீனமானவர்களுக்கு வலை வீச்சு நடக்கும்.
ஒரு ஆணோ.அல்லது பெண்ணோ.ஒருமுறை இச்சுகத்தில் (நரகில்) வீழ்ந்தால் பிறகு காலம் முழுதும் மீளமுடியாது.இன்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் வசிக்கும்,ஹாஸ்டல்,சிறைச்சாலை,ராணுவ முகாம்களிலும் கூடா உறவு ஒருசில ஆர்வலர்களிடம் நடக்கத்தான் செய்கிறது.சட்ட அனுமதி கிடைத்தால் இது தொத்து வியாதி போல் வேகமாக பரவும்.

ஒரு ஆணும் ஆணும் இயற்கைக்கு மாறான மலத்துவாரம் வழியாக புணர்ச்சியில் ஈடுபட்டால் பின்பு ஆயிரம் ஐஸ்வரியா வந்தால் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.”பெண் ஷோக்கைவீட பீ ஷோக்குதான் பெரும் ஷோக்கு” என்று கூறுவது கவனிக்கத்தக்கது.ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் இவர்களை எதிர்பார்த்தே காத்துக்கிடகிறது.

இந்தியாவிலேயே தென் இந்தியாவில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்.1.ஆந்திரம் 2.கர்நாடகம் 3.மகாராஷ்டிரம் 4.தமிழ்நாடு.வடக்கிலுள்ள டெல்லியில் இதற்க்கு சட்ட பாதுகாப்பு கொடுத்தால் உடனடியாக தென் மாநிலங்களில் எய்ட்ஸ் இன்னும் வேகமாகப் பரவும்.இன்னும் மக்களுக்கு அடிப்படை வசதி,குடிநீர்,சுகாதாரம் போன்றவைகளை முழுமையாய் தர முடியாத அரசாங்கத்திற்க்கு இது பெரும் துன்பமாக மாறும்.

சிறுகச் சிறுக முன்னேறிவரும் இந்தியாவை கத்தி இன்றி ரத்தம் இன்றி எப்படி அழிப்பது என திட்டமிட்டு கலாச்சார போரில் இறங்கி விட்டனர் நமது எதிரிகள்.நமது பெரும்பான்மை அறிவு ஜீவிகளும் இம்மாய வலையில் மாட்டிக்கொண்டனர்.ஹிந்து மதத்தில் மறைந்த இம்மாமத யானையை அடையாளம் கண்டு விரட்டாவிடில் அது ஏற்ப்படுத்தும் அழிவு நாசம் அளவிடமுடியாதது.பால் ஊனமுற்றவர்களை பரிவோடு அரவணைப்போம்.ஆனால் ஊனத்தைக் காட்டி ஞானத்தை பறிக்க அனுமதியோம்.

தெய்வ சிந்தனையை மறந்த, மறுத்த மேலை நாட்டு பொருள் முதல்வாதிகள் மற்றும் வக்கிர மனவாதிகள் மட்டுமே ஓரினப்புணர்ச்சிக்கு ஆதரவாக உள்ளனர்.இவர்களால் இன்றைய மேலை உலக குடும்ப வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி உள்ளது.இவர்கள் கல்வி,கேள்வி,பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினாலும் ஆன்மீகத்தில் அடித்தட்டில் வீழ்ந்து கிடக்கின்றனர்.இந்த வால் இழந்த நரிகளின் ஓலத்தை கேட்டு நமது பண்பாடு,கலாச்சார நாகரீகத்தை இழந்துவிடக்கூடாது.இந்தியாவிலுள்ள அனைத்து ஆன்மீக மதங்களின் அறிவார்ந்த மக்கள் இத்தீங்கினை எதிர்க்க வேண்டும்.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *