புனைப்பெயரில்
சிவப்பு விளக்கு சுழலும் அரசுக்காரும், அரசு துரபதாதிபகளும் வேண்டாம் என்று சொல்லி சிக்னலில் நின்று நின்று அ.கெஜ்ரிவால் சென்ற போது ஏதோ எளிமையான அரசியல்வாதி உதயமாகிவிட்டார் என்று அதகளமானது.
ஆனால், கக்கன் , லால்பகதூரி, மொரார்ஜி, காமராஜர் , ராஜாஜி, கிருபளானி, சந்திரசேகர் போன்றோர் சாமான்யனை விட எளிமையாக வாழ்ந்து சென்றவர்கள்.
சரி அது நேற்றைய பொழுது..
இவர் இன்றல்லவா… இவருக்கு இன்று வேறு யார் மாற்றாக காட்ட..?
மற்ற கட்சி விடுங்கள்.
இன்று அதீத குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான காங்கிரஸிலேயே இருக்கிறார்.
அதுவும் தமிழர் ஒருவர்.
அவர் ஜெயராம் ரமேஷ். மத்திய ரூரல் டெவலப்மெண்ட் அமைச்சர்.
படிப்பு..?
அமெரிக்க எம் ஐ டி யில் சமூகம், பொருளாதாரம், மேலான்மை, பொறியியல்..
அமெரிக்க கார்னிகி மெலன் பல்கலையில் சமூக கோட்பாடுகள் பற்றி..
இந்திய ஐ ஐ டி மும்பயில் பி.டெக் மெக்கானிகல்
பின் உலகளாவிய வகையில் வேலைகள்.
ஆந்திரா கர்நாடகா என்று வாழ்ந்தாலும், சிக்மகளூரில் பிறந்திருந்தாலும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட தமிழர். அய்யங்கார்.
இவரை மிக மிக பாதித்தது, Gunnar Mydral ன் Asian Drama . வியட்நாம் போரை பற்றிய அற்புத தர்க்கார்த்த பதிவு.
இவர் மந்திரி ஆனதில் இருந்து , தனது காரில் சிவப்பு விளக்கு சுழல சென்றதில்லை.
தனது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு -45 நிமிட நடை – நடந்தே அடிக்கடி செல்கிறார்.
பலமுறை இவரது வாகனம், பிற மந்திரிகள், இராணுவ அதிகாரிகள் வாகனங்கள் செல்லும் போது நிறுத்தி வைக்கப்பட்ட ஜன சமுத்திரத்தில் ஒன்றாக இருந்திருக்கிறது.
டில்லியில் சிக்னலில் நின்று நின்று போவதாக மீடியாவில் முதல் பக்க செய்தியாக வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முன் பல வருடங்களாக, அதே வகை பதவியில் இருந்தும், இவர் நின்று நின்று தான் போகிறார்.
தற்போது, பிரதமர், ஜனாதிபதி, ராணுவ அதிகாரிகளின் போக்குவரத்து அடாவடிகளை கண்டித்துள்ளார்.
மேலும், டில்லியில் ராணுவ அதிகாரிகள் தங்களின் போக்குவரத்தின் போது தனியாக ராணுவ போலீஸ் வைத்திருப்பதை கண்டித்து, டில்லி போலீஸார் செய்ய வேண்டிய பணியை ராணுவம் தனது உச்ச அதிகாரிகளின் ஊர்தி ஊர்வலத்திற்கு தாமே எடுத்துக் கொள்வது, “..a state within a state within a state…” என்று கண்டித்துள்ளார்.
இந்திய சார்பு டிவிட்டர்களிடம் அதிர்ந்திருக்க வேண்டிய இந்த் ஈட்டி வரிகள் சில பத்திரிக்கை டிவியில் வந்ததுடன் சரி..
ஏன்..?
யோசித்தாலும் விடை தெரியவில்லை..?
இன்று இந்தியாவில் இருக்கும் எதேச்சிகார கொடுங்கோல் நிலையை,
“..a state within a state within a state… “ என்ற இந்த தொடரை விட அற்புதமாகச் சொல்லிட முடியாது.
டிப்ளமாட் என்ன ராணுவ வீரனை விட முக்கியமானவரா.?
தலை கொய்யப்பட்ட ராணுவ வீரனின் முண்டம் வந்த அதே டில்லி ஏர்போர்டில், உலகளாவிய வகையில் இந்தியத் தலைகுனிவிற்கு காரணமான, தேவயானி டில்லியில் வந்திறங்கி நடந்த நடையும், ““..a state within a state within a state…”” என்பதைத் தான் சொன்னது…
இதற்கு, ஜெயலலிதா, மாயாவதியின் கார்களின் வரிசை கட்டியம் கூறும்.
அரவிந்த் கெஜ்ரிவால் , அரசியல் பரிசோதனைகளை நேரிடையாக தின நிர்வாகத்தில் செய்திட விழைகிறார்.
அது முட்டாள்தனத்தின் உச்சம் என்று டில்லியில் அவர் நடத்திய ஜனதா தர்பாரே காட்டி விட்டது.
இந்த இணைய உலகில், மக்களிடம் குறைகளைப் பெற்று, எக்ஸ்கலேஷன் முறையில் தீர்வுகளைத் துரிதப்படுத்தியிருக்க முடியும்.
அது விட்டு, டேபிளை போட்டு நேரில் குறை கேட்டு தீர்த்திடலாம் என்பது மாயை.
ஒன்றா இரண்டா ஒரே நாளில் செய்ய… நிர்வாக கட்டமைப்பே செல்லரித்துக் கிடக்கிறது.
இங்கு தேவை கட்டமைப்பு சீர் செய்தல். அதற்கு முழு இணைய இணைப்புடன் கணணி மயமாக்குதலும், வேண்டாத இழவெடுத்த அந்த வரி முறையை ஒழித்தலுமே.
அந்தக் காலத்தில், வீடியோ கான்பிரன்சிங், இணைய வழி சேவை வசதி இல்லாத போது, ஜனதா தர்பாரும், ஜமா பந்தியும் தேவைப்பட்டது..
இப்போது?
நிர்வாக துரித நடவடிக்கை முறைகளே..
இதில், கிடைத்த டில்லியில் அரவிந்த கெஜ்ரிவால் ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுக்கட்டும்.,
அது காங்கிரஸை விட, பாஜக வை விட சிறப்பாக இருப்பின் நிச்சயம் அவருக்குத் தான் மக்கள் வாக்களிப்பர்.
ஆனால், ஜெயராம் ரமேஷ் போன்றோர் சத்தமின்றி செயல்படும் முறையை,
அரவிந்த் கெஜ்ரிவால் சிறிதாகச் செய்யும் போது, அதிக வெளிச்சம் பொட்டு சவுண்டு கொடுத்து அடுத்து பிரதமரும் அவரே என்பது,
ஒழுங்காய் இருக்கும் ஆட்டையை கலைப்பது போலே தான்…
நாங்க காலம் காலமாக யாருக்காவது அடிமைகளாகத் தான் இருப்போம் என்றும்..
இந்த சுதந்திரத்திற்கு , பிரிட்டிஷ்காரனிடமே அடிமையாக இருந்திருக்கலாம் எனும் கேவலமான சிந்தனையை நம்முள் வரக் காரணமாயிருந்த காங்கிரஸை தூக்கியெறிய கனன்று கொண்டிருக்கும் நிலையில்,
கெஜ்ரிவால் கொண்டு காங்கிரஸ் குழப்பம் செய்ய முயல்கிறது.
ஜெயராம் ரமேஷைப் பற்றி படியுங்கள். அவரின் மேன்மையில் ஒரு சதவிகதம் கூட அரவிந் கேஜ்ரியிடம் கிடையாது.
அப்படி காங்கிரஸிற்கு முழு அக்கறை இருந்திருந்தால் எங்களிடமும் ஒரு மேன்மையானவர் இருக்கிறார் என்று ஜெயராம் ரமேஷை முன்னிறுத்தி இருக்கலாமே..?
வானத்தில் பிஸினஸ் கிளாஸிலும் , இரவு பானம் நிரம்பிய கிளாஸிலும் மிதக்கும் கார்ப்ரேட் கில்லாடிகளை ஏன் ரட்சகர்களாகக் காட்ட வேண்டும்..?
மக்களையும் அரசையும் நிர்வாகம் பண்ணுதல் தொழில் அதிபர்களால் தான் முடியும் என்றால், நாட்டை பல பகுதிகளாகப் பிரித்து , அம்பானி, டாட்டா, ஆகியோருக்கு கொடுத்து,
ஸ்டாக் மார்க்கெட்டில் லிஸ்ட் செய்து,
தமிழ்நாடு 4567
மஹாராஷ்டிரா 10000
ஆந்திரா 8000
என்று தினமும் உள்ளே வெளியே விளையாடலாமே.
அரசியல் ஆட்சி என்பது , லாப நோக்கற்ற ஆட்சி முறை.
அது புரியாததால் தான் கனிம வளங்கள் வேண்டும் என்று நீரும், மண்ணும் மலையும் இங்கு சிதைக்கப்படுகின்றன.
பொண்டாட்டி நகையை அடகுவைத்து வந்த பணத்தில் முதலீடு செய்து, சிறிதாய் ஆரம்பித்து ஆலமரமாய் தனது இன்போஷிஸை வளர்த்த நாறாயணமூர்த்தியிடம் வேலை பார்த்த,
நந்தன் நீல்கனிக்கு காங்கிரஸ் பிரதம வேட்பாளராகவும்
பாலகிருட்டிணனுக்கு ஆம் ஆத்மி பிரதம வேட்பாளராகவும்
போட்டியிட ஆசை.
ஆனால், தலைப் பண்பு முழுதாய் கொண்டு நல் நிர்வாகம் செய்த, நாறாயணமூர்த்தி..?
அதனால் தான் இந்த இரண்டாம் மூன்றாம் நிலை எக்ஸ் கார்ப்பரேட் கில்லாடிகளை உருவாக்கிய, முதல் நிலை இன்போஷிஸ் நாறாயணமூர்த்தி,
இன்று தேசத்தின் பிரதமராக வர முழுத் தகுதி உள்ளவர் மோடி என்று தீர்மானமாக இருக்கிறார்.
ஆதார் அட்டை வழங்குதல் வேறு.. அதன் பயன்பாட்டு நிலைப்பாடுகள் வேறு. அதில் பல குளறுபடிகள் செய்யும் நந்தன் நில்கேனியிடம் நிர்வாகம் போனால்…?
30கோடி சேர்ந்துச்சு என்று இரண்டு பெண்களுக்கு அதை பிரித்துக் கொடுத்து விட்டு, ஆட்சி அதிகாரத்துடன் அரசியலுக்கு வரும் ஆம் ஆத்மியில் சேர்ந்த இன்போஷ்ஸ் இயக்குனர் பாலகிருஷ்ணன் முதலில் ஒரு சேவை அமைப்பையோ இல்லை சமூக சிந்தாந்த பிரச்சனையோ எடுத்து அதை முன்னெடுத்து சென்று பின் அதிகார அரசியலுக்கு ஆசைப்படட்டும்.
அதைத் தான் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் கிரண்பேடி செய்தார். பிரதமர் இந்திராகாந்தி காருக்கு அந்தக் காலத்தில் டிக்கெட் கொடுத்தவர் இன்று மோடிக்கு பிரதம டிக்கெட் கொடுங்கள் என்கிறார்.
இந்திராவிற்கு கொடுத்தது அபராத டிக்கெட்..
மோடிக்கு தரச் சொல்வது மக்களுக்கான ஜாக்பாட் டிக்கெட்.
அறிவு, நல் பண்புகள் தாண்டி இந்த தேசத்திற்கு தேவை ஒரு தலைமைப் பண்பு, அதுவும் உறுதியான இரும்புக்கரத்துடன் நம்மை காத்திடக்கூடிய சித்தாந்த தெளிவுடன்.
அதற்கு சரியான தீர்வு, நரேந்திர மோடியே…
நரேந்திர மோடியும், ஜெயராம் ரமேஷ் போன்றோரை பாஜகவிற்கு அழைக்க் வேண்டும்.
வகுப்புவாத அராஜகத்தை இரும்புக்கரம் கொண்டு குஜராத்தில் அடக்கியது, மாநில மேம்பாட்டில் அக்கறை என சாதித்த
ஒரு மோடிக்காகத் தான் இன்று மக்கள் பிஜேபியிடம் வருவது..
ஆனால் அதில் பல ராபர்ட் வதேராக்கள் இருப்பதற்கு ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல், வடக்கிற்கு நிதின் கட்கரி… தெற்கிற்கு எடியூரப்பாவே சாட்சி.
இன்று பிஜேபி யில் இருக்கும் பல ராபட் வதாரா வகை பார்த்துத் தான் மக்கள் புதிதாய் வரும் கெஜ்ரிவால் போன்றாரிடம் ஓடுகிறார்கள் என்பதை பிஜேபினர் புரிந்து கொள்ள வேண்டும்.
ராபர்ட் வதேரா பற்றி பிஜேபி சொல்லும் போது, சுரங்க மாஃபியா மன்னர்கள் ரெட்டி பிரதர்ஸ் ஞாபகத்தில் வந்து சிரிக்கிறார்கள்.
அது புரியாமல், எதேச்சிகாரத்துடன் கேடிகளுக்கு பிஜெபி சீட் கொடுத்தால், வாக்கு சிதறும், கெஜ்ரிவால் கட்சி என்றல்ல… யாராவது ஒரு துக்கடா அமைப்பு நின்றாலும் ஓட்டு அவர்களுக்கே விழும் , இதை பிஜேபி புரிந்து கொள்ள வேண்டும்.
எனது வாக்கு கண்மூடித்தனமாக பிஜேபிக்கு கிடையாது. என் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர், பிற போட்டியாளர்களான,
பிஜேபி ஆம்ஆத்மி வேட்பாளரை விட பெட்டர் என்றால், எனக்கு காங்கிரஸிற்கு வாக்களிக்க தயக்கமில்லை…
… புனைப்பெயரில்…
- பிரம்ம லிபி
- பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17
- நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]
- கடிதம்
- நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’
- புகழ் பெற்ற ஏழைகள் -41
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!
- நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்
- எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?
- மலரினும் மெல்லியது!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3
- திண்ணையின் இலக்கியத் தடம் – 17
- வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”
- இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்
- நாணயத்தின் மறுபக்கம்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !
- ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )
- மருமகளின் மர்மம் -11
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2
- ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்
- நீங்காத நினைவுகள் – 29
- மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்
- வைரஸ்
- திண்ணையில் எழுத்துக்கள்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 1 5
- மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது
- என் புதிய வெளியீடுகள்