‘காசிக்குத்தான்போனாலென்ன’

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

நான் காசிக்குப்புனித  யாத்திரை செல்வதாய் முடிவு செய்தேன் குடும்பத்தோடுதான்..ரொம்ப நாளாக இருந்த யோசனை.குடும்பத்தோடு  என்றால் அது என் சகோதரர்கள் என் சகோதா¢கள் குடும்பங்கள் சகிதமாகத்தான். எனது குடும்பம்  அது போன தலைமுறை பொ¢ய க்குடும்பம்.   இரண்டு அண்ணன்கள் மூன்று அக்காக்கள்.எனக்கு ஒரு தங்கை எல்லாருக்கும் இளையவள். எங்கள் குடும்பத்தில்  போதுமப்பா இந்த  ப்பூவுலகவாழ்க்கை என்று இந்த ப்பூமியைக்காலிசெய்து விட்டு  அவள் எப்போதோ போய்ச் சேர்ந்தாள்
.                             காசிக்குப்போகும்  இத்தனை  ஜனங்களோடு  ‘நான் மட்டும் விடுவேனா வந்துதான் தீருவேன்’ என்று அடம் பிடித்தார்  அந்த இற்றுக்கொண்ட   தங்கையின் கணவர். இன்னும் இவர்களோடு பொ¢ய அக்கா வின் பெண்மக்கள் மூவர்.அவர்களில் கணவனை இழந்துவிட்ட ஒரு அக்கா பெண்ணும் அடக்கம்.இன்னும் அவர்களில் மிச்சமிருக்கும் மாப்பிள்ளைகள் அல்லது கணவன் மார்கள்,அந்த வகையில்   உறவாய் வந்த  சம்பந்திமார்கள்,தலைதீபாவளியையே பார்க்காது அவசர அவசரமாய்க் காலமாகிப்போன மாப்பிள்ளை ஒருவனைக்கட்டிக்கொண்ட(நாங்கள் எல்லோரும் ஜாதகம் எல்லாம் பார்க்கவேண்டிய இடங்களில் பார்த்துதான் அவளுக்கு அவரைக்கட்டிவைத்தோம்) என் சின்ன சித்தியின் மூத்த  மகள்.
இப்படி கூட்டிக்கொண்டே போனால் எத்தனை பேர்தான் வரும் என்று.சொல்லிவிடுகிறேன் ஒரு இருபத்தைந்து பேருக்கு க்குறையாது.சீர்காழியிலும் பட்டுக்கோட்டையிலும் ராஜேந்திர சோழனின் கங்கைகொண்சோழபுரம் பக்கம் குருகைகாவலப்பர்கோவிலிலும்  நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் என்று  பிழைப்புக்குபோய் வாழ்ந்துகொண்டிருக்கும்  இவர்களை எல்லாம்  ஒன்றாய்க்கூட்டிக்கொண்டுபோய்  சென்னை சென்ற்றலில் இருந்து புறப்படும் கங்கா காவோ¢ ரயிலில்   இடம், பார்த்து மூட்டை முடிச்சுகளோடு ஏறி  அமர்த்தி நானும் அமர்ந்துகொள்ளவேண்டும்.கொண்ட கடமைபொ¢து.
ஆபிசில் எனக்கு எத்தனையோபிடுங்கல்கள்.ஒன்றா இரண்டா எதை விடுவது எதனைச்சொல்வது. எல்லாவற்றிர்க்கும் அது இது என்று சால்ஜாப் சொல்லி ஒரு விடுப்பு எடுப்பதற்குள் உனக்கா இல்லை எனக்கா என்று ஆகிவிடுகிறது.கங்கா காவோ¢ மாலை ஐந்து மணிக்கு என்றால் நான்கு மணிவரைக்கும் எனக்கு விசாரணை இருக்கிறது என்றார்கள் சொல்பவர்கள்  வல்லமை பெற்ற அதிகா¡¢கள். வாய்திறந்துஎதுவும் பேசிவிடமுடியுமா.யாரோ எங்கோ செய்த தப்புக்கெல்லாம் யார் யாரையோ  மாட்டிவிட்டு ஆபிசில் சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள்.நமக்கு அஷ்டமத்தில் ம்சனி ஆகத்தான் இப்படி என்று வீட்டில் என் மனைவி சொல்லிக்கொண்டாள்.’எப்போதும் சாமர்த்தியம் போறாது என்று அவளிடம் வசவு வாங்கும்படிக்கு எனக்கு இப்படி எல்லாம் வேறு  ஆகவேண்டுமா. ஆயிற்றே.
நான் பணியாற்றும் அதே அலுவலகத்தில் என் பக்கத்து இருக்கை முத்துக்குமரன்.எனக்கு ஒத்தாசை செய்வதாய் ஒரு விலாசம் தந்து, ‘யோவ் காசி அனுமான் காட்டிலே சங்கர மடத்துக்கு மூணாவது வீடு.என் ஷட்டகருக்கு மைத்துனர். கிருஷ்ணான்னு கூபிடுவா கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள்னு பேரு. சாஸ்தி¡¢கள்தான் அப்ப்றமா அவர் கனபாடிகள் ஆனார். அவருக்கும் ஊர் வைத்தீசுரன் கோவில். காசிக்குப் போய் காலம் ரொம்ப காலம் ஆச்சி. நீர்  அவரப்பாரும். அவசியம் பார்க்கணும். உமக்கு புது இடத்தில்  அங்க கொஞ்சம் ஒத்தாசை. அதுக்குத்தான் இந்த விலாசம்.  இது என் ஆத்துக்கா¡¢ ஏற்பாடு ஓய்’;அந்த முத்துக்குமரன் கொடுத்த அந்த கிருஷ்ணாவின் விலாசத்தை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டேன். அது என்னவோ  பாருங்கள் கிருஷ்ணமூர்த்தி சாஸ்தி¡¢கள் இந்த ப்பெயர் ஊருக்கு ஊருக்கு ஊர் சாஸ்தி¡¢களுக்கு  என்று மட்டுமேதான் வைக்கப்பட்டு இருக்கிறது. அது என்ன அப்படி ஒரு பெயர் ராசியோ..சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்கிறார்களே.பிறகு என்ன செய்வது.
காசி யாத்திரை என்றால் அலஹாபாத்தில்தான் முதலில் இறங்கவேண்டும். அங்கே  வடக்கே இருப்பவர்கள் அலஹாபாத் என்று சொல்லாமல்  அந்த ஊரை இலஹாபாத் என்கிறார்கள். அது எப்படியோ இருக்கட்டும்.

தி¡¢வேணி சங்க்ம சங்கல்ப ஸ்னானம் தொடங்கி,கயா ஸ்ரார்த்தம்,காசி ஸ்ரார்த்தம் இத்யாதிகள் வரை  நடத்தி வைக்கும் சாஸ்தி¡¢யை புக் செய்யும் கா¡¢யம் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டது என்றாலும் ஒரு விலாசம் அவசர அக்கறைக்கு இருந்தால் ஒரு ஒத்தாசைதானே. ஆக க்ருஷ்ணா சாஸ்தி¡¢ விலாசம் வாங்கி இருக்கட்டும் என்று வைத்துக்கொண்டேன்.அதிர்ஷ்ட தேவதை எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாள் என்பது யாருக்கும் தொ¢வதில்லை.ஒரு  நொண்டி சன்னதி வீதியில் பிச்சை எடுத்துகொண்டே போனானாம். கருணாசாகா¢ பார்வதிதேவி பரமசிவக்கடவுளிடம் ‘ சுவாமி அவனுக்கு க்கொஞ்சம் உதவினால் தேவலை? என்றாளாம்.உடன் படி அளக்கும்  பெருங்கடவுள் பரமசிவனார் மனம் இறங்கி பொற்காசுகள் சிலவற்றை அவன் வரும் வழியில் வைத்து விட்டு ‘வேடிக்கையைப் பார் பார்வதி’ என்றாராம்.  பிச்சைக்காரன் பொற்காசு  கண்ணில் படுமுன்பாகவே  தன் கண்கள் இரண்டையும் மூடி நாம் குருடானால் எப்படி சாலையில் நடப்போம் என்று கற்பனை செய்து கொண்டு வேகமாய்  நடந்து அந்த க்காசுகளைத்தாண்டிக்கண் திறந்தானாம்.’பாரேன் பார்வதி நான் கொடுத்தேன். நீதான் கொடு என்றாய்.அவன் விதி அவன் பொற்காசுகள் காணு முன்னே கண்களை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.பிரமன் லேசுப்பட்டவனா அவ்ன் எழுத்தும் லேசுப்பட்டதா’ என்ன என்று பரமசிவனார் தர்மபத்னி பார்வதி யிடம் சமாதானம் சொல்லி முடித்தாராம். ஆக நானும் அந்த கிருஷ்ண சாஸ்தி¡¢கள் விலாசம் வாங்கி எதற்கும் இருக்கட்டுமே என்று ஓரமாய் வைத்து  இருந்தேன்.
அலஹாபாத்தும் கயாவும் சென்று கா¡¢யங்கள் முடித்தோம். பிறகுதான் வாராணாசிக்கு வந்தோம்.
வாராணாசியில் இருந்த மூன்று நாட்களில் பிதிர்கள்,தெய்வம்,லௌகீகம் என நேரத்தை பி¡¢த்து வைத்துக்கொண்டு செயல் பட்டோம். அப்படித்தான் எல்லாருமே செய்கிறார்கள்.காலை ப்பிதிர் கா¡¢யம் மாலையில் விசுவனாதர் இல்லை விசாலாட்சி இல்லை  இல்லை காலபைரவர் எதுவோ ஒரு கோவில் என்று தா¢சனம் பார்த்துக்கொண்டோம்.அப்போதுதான் முத்துக்குமரன் சொன்ன அந்த கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் நினைவு வந்தது. முதலில்
என் மனைவிதான் அந்த விலாசம் வைத்துக்கொண்டு யாரையோ விஜா¡¢த்தாள்.காசியில் பட்டுப்புடவை க்கடை வைத்திருக்கும் நம்மூர் ஒரு செட்டியார்தான் சொன்னார்.’இதே சந்தில மொத வீடு அவ்ர் வீடு’ என்று. ஆகா இதை விட வேறு என்ன வேண்டும் என்று மனம் சொல்ல நானும் அவளும் அந்த கிருஷ்ண மூர்த்தி கனபாடிகள் வீடு நோக்கி நடந்தோம்.
ஆமாம் இதுதான் அவர் வீடு. கனபாடிகள் வீட்டு வாயிலில் தமிழிலேயே பெயர் எழுதி யிருந்ததது.
‘சார்’
‘கோன்’
‘சார் நாங்க தமிழ் நாட்டுக்காரா வந்திருக்கோம்’
ஆறு அடிக்கு மேல் உயரம் இருக்கலாம் ஒரு மடிசாறு மாமி வந்தாள்.
‘என்ன வேணும். யார் நீங்க’
கம்பி கேட்டு பூட்டிய படியே இருந்தது. மாமி கேட்டுக்குப்பின்னால் இருந்து பேசினாள்.
‘வாத்தியார் ஏற்பாடு ஆயிட்தா’
ஆமாம் மாமி.அது எல்லாம் சென்னையிலேந்து ஏற்பாடு பண்ணிட்டுத்தான் வந்தோம்.அலஹாபாத். கயா எல்லாம் போயிட்டு காசி வந்திருக்கம்.இங்கயும் பிதுர் க்கடன் எல்லாம் பண்ணி ஆச்சி’
மாமிக்கு முகம் நிறம் டக்கென்று மாறிக்கொண்டது.
‘கிருஷ்னமூர்த்தி கனபாடிகள்ங்கறது’
‘என் ஆத்துக்காரர்தான்’
‘அவர பார்க்க முடியுமோ’
‘இன்னிக்கு பொ¢ய பொ¢ய வாளோட ஜன்மதினம்.கொஞ்சம் பிசி’
கம்பி கேட்டு இன்னும் பூட்டப்ப்ட்டே இருந்தது.
‘உங்களுக்கு இந்த விலாசம் யார் குடுத்தா’
‘ சென்னை பொரஷவாக்கம் என் ஆபிசிலே பக்கத்து சீட்டுக்காரர். முத்துக்குமரன்னு. அவர்தான்’
‘ஒகோ குமார். குடுத்தானோ.சா¢தான்.என் தம்பி பெரம்பூர்ல இருக்கான். அவன் மச்சினியைத்தான் குமாருக்கு குடுத்து இருக்கு’
‘அந்த சேங்காலிபுரம் பொ¢ய வகையறாத்தானே’
‘சா¢யாச்சொன்னேள்’ என்றாள் நெட்டை மாமி.
நானும் விடவில்லை.தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன்.கதவு மட்டும் திறக்கவே இல்லை.
‘எப்ப சென்னைக்கு பொறப்பாடு’
‘நாளைக்கு ராமேசுரம் எக்ஸ்பிரஸ்லதான் பொறப்படணும்’
‘ரொம்ப சா¢ ஸ்டேசன்  போறத்துக்கு மிந்தி  ஆத்துக்கு சித்த வாங்க்ளேன் நானும் என் மாமாண்ட சொல்லி வச்சி இருக்கேன்’
‘எனக்கு முத்துகுமரன் ஆத்மார்த்தம். இண்ணைக்கு நேத்து இல்லே. வருஷம் முப்பதுக்கு மேல இருக்கும். எங்க சினேகம். ரொம்ப பொ¢ய சமாஜாரம்’
என் மனைவி என்னை அசடு வழிகிறேன் என்பதாய்ப்பார்த்தாள் .கதவு இன்னும் பூட்டித்தான் இருந்தது.
‘ நாளைக்கு வாங்கோ என்ன. மாமா இன்னும் பூஜையில இருக்கார்.இனிமேதான் சாப்பாடாகணும்.’
‘நாங்க  சாப்டாச்சு மாமி’
‘பாத்தாலே தொ¢யர்தே சொல்லணுமா’ என்றாள்.
நானும் என் மனைவியும் உடன்  நாங்கள் தங்கியிருத ஜாகைக்குப்புறப்பட்டோம். ஜாகையில் மிச்சமிருந்தவர்கள்  தெருக்கடைகளில் ஏதோ வாங்கி வாங்கி பேக் செய்து கொண்டே இருந்தார்கள்.
‘நாளக்குப்பார்க்கலாம்’
‘எத ப்பார்க்கறது பூட்டி இருக்கற.கேட்டயே தொறக்கல மாமி’
‘கேட் சாவி மாமி வச்சிண்டு இருப்பர்’
‘ காஞ்சி பொ¢ய பொ¢யவா ஜன்மதின பூஜையாமே. மாமா  வாசகேட்டு சாவிய இடுப்புல வச்சிண்டுதான்  பூஜ பண்ணுவாளா’
காசியில என்ன என்ன பாக்கணுமோ எல்லாம் பார்த்து ஆச்சு. கங்கையில   பஞ்ச  கட்டங்கள்ள பண்ணவேண்டியது  பிதிர்கார்யங்கள் எல்லாம் ஆச்சு.விஸ்வ நாதர, அன்னபூரணிய, விசாலாட்சி, டுண்டிகணபதிய, பிந்துமாதவர, சோழியம்மன,உத்தரகாசில பாக்கவேண்டிய அரண்மனைகள்,அப்புறம் ராத்தி¡¢  நடக்கின்ற கங்காபூஜ ஆர்த்தி, எல்லாம் முடிஞ்சி,காசிகயறு,காசிபட்டுபுடவ,காசி கங்காஜல சொம்பு   இன்னும் அந்த வகையறாக்கள் வாங்கி பேக்கிங்க் பண்ணி அவரவர்கள் ஊருக்குத்திரும்பத்தயாரானோம்.
ஒரு சமாஜாரம் சொல்ல மறந்து போனேனே சுப்ரமணிய பாரதியோட உறவுக்காரர், தாத்தா மொறயாம் அவர் வீட்டுக்கும் போய்ப்பார்த்து வந்தோம். அந்தப் பழைய வீட்டுச்  சுவா¢ல் மாட்டப்பட்டிருந்த பிரேம் போட்ட படங்கள் சிலதுகள் பார்த்தோம். உருவங்கள் விளங்குகின்ற மாதி¡¢க்கு எதுவும் இல்லை. அப்புறம் நம்பூரு முன்னாள் ஜனாதிபதி லேட் வெங்க ட்ராமன் திறந்து வைத்த பாரதி சிலயையும் அனுமான் காட்டுல ஒரு சின்ன சந்துல பார்க்கமுடிஞ்சது. உயர உயர பால் கேனகள் எல்லாம் சுற்றி அடுக்கஅடுக்கி ஆக்கிரமிச்சி  குப்பையும் கூளமுமாக   அந்தப்பாரதிசிலையை பார்க்கவே பாவமாகக்கூட இருந்தது.
ரயில்வே ஸ்டேஷனுக்குக்கிளம்புவதற்கு முன்பாக கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் நினைவு வந்தது.நானும் என் மனைவியும் அவர் வீடு நோக்கிப் புறப்பட்டோம்.
‘போனம் வந்தோ¡ம்னு இருக்கணும்’
‘சா¢’
கனபாடிகள் வீட்டு  வாயில் கேட்டு திறந்து கிடந்தது.நாற்காலி ஒன்றை போட்டுக்கொண்டு கனபாடிகள் அமர்ந்திருந்தார்.அவருக்குப்பக்கத்தில் திணித்து வைக்கப்பட்டிருந்த லெதர் சூட் கேஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது.
‘ நமஸ்காரம் நாந்தான் நேற்று உங்கள பாக்கலாம்னு வந்துட்டுப்போனேன்.நீங்க பூஜையில இருந்ததா மாமி சொன்னா’
‘வாங்கோ  எங்காத்து மாமி எல்லா சேதியும் சொன்னா.திருப்தியா காசி யாத்திரையெல்லாம் ஆச்சா, இண்ணைக்கு ஸாயந்திரம்  உங்களுக்கு ரயில்னு சொன்னாளே எங்காத்துக்கா¡¢’
‘ஆமாம் இண்ணைக்கு சாயந்திரம் ராமேசுரம் எக்ஸ்பிரஸ். உங்க மாமி  ஆத்துல இல்லயா’ என்றாள் என் மனைவி.
”தோ வந்துடுவா.மங்கல்ய பொண்டுக்குன்னு  அ¡¢ச்சந்திர காட்டுல கூப்புட்டு அனுப்பினா. அதுக்குத்தான் போயிருக்கா’
‘.நேரம் ஆகுமோ’
‘எத எப்பிடி சொல்லமுடியறது. லோகத்தில ஒத்தரை  ஒத்தர் அனுசா¢ச்சி  இருக்கவேண்டிருக்கு. மனுஷ ஜாதின்னா வேற என்ன பண்ணுவேள்’
‘சா¢யாச்சொன்னேள்’ என்றேன்.
‘ஒரு ஒத்தாசை. இந்த சூட்கேசை அந்த பொரஷவாக்கம்  முத்துக்குமரன் கிட்ட சேத்துடணும். நீங்க செய்வேள். எல்லாத்துக்கும் மனசுன்னு ஓண்ணு இருக்கே’
‘இது ஒண்ணும் பொ¢ய கா¡¢யம் இல்லே.குடுங்கோ நாங்க அத  பத்திரமா சேர்த்துடறம்’
அவள் தான் சொன்னாள்.. என் மனையாள் முகத்தைப்பார்த்தேன்.எத்தனை அழகாகப்பொய் பேசுகிறாள். கனபாடிகள் தன் மடிவசம் இருந்த விபூதிப்பையை எடுத்து க்கொஞ்சம் விபூதியை எனக்கும் என் மனைவிக்கும் கொடுத்தார்.
‘பொ¢யவா  அந்த பொ¢ய பொ¢யவா  ஆசிர்வாதம் பண்ணி எனக்கு கொடுத்த விபூதி பை.ரொம்ப  ரொம்ப சிரேஷ்டம்’
நான் சந்தித்த மனிதர்கள்ளே பாதி பேர் இப்படித்தான் பொ¢ய பொ¢யவா பொ¢ய பொ¢யவா ன்னு வார்த்தைக்கு வார்த்தை அந்த மகான் பெயரைச் சொல்லிவிடுகிறார்கள்.எத்தனையோ மனிதர்களை  அந்தமகாத்மாவின் பெயர் பாதித்துத்தான் இருக்கிறது அதனை யாரும் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.
எனக்கும் கூட ஒரு விஷயம்  கட்டாயம் சொல்ல வேண்டும்.தருமங்குடி கிராமத்து என் அம்மாவின் தத்தா சாமி அய்யர் வீட்டுக்கு வந்து பொ¢ய பொ¢யவா சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் தங்கிச்சென்றதாகவும் தருமங்குடி  ஊரை வலம் வந்ததாகவும்  ஊர்ப்பொ¢யவர்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.எனக்கு இன்றும் அது பெருமையாகத்தான் இருக்கிறது.திரும்பவும் கனபாடிகள் சொன்னார்.
‘இந்த விபூதிப்பை  காஞ்சி பொ¢யவா எனக்கு ஆசிர்வாதம் பண்ணிக் கொடுத்தது. வேறென்ன  வேணும் சொல்லுங்கோ’
கனபாடிகள் எழுந்து வாசல் கேட்டின் சாவியை கையில் எடுத்துக்கொண்டார்.
‘நாங்க கெளம்பறம்’ நாங்கள் இருவரும் புறப்பட்டோம்.
காசியாத்திரை வந்தவர்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுக்களோடு வாரனாசி ரயில் நிலையம் வந்து ராமேசுரம் ரயிலுக்குத்தயாராய் நின்று கொண்டோம். இருக்கிற  லக்கேஜோடு இந்த முத்துகுமரனுக்குக்கொண்டு சேர்க்க வேண்டிய சூட்கேசும்  கம்பீரமாய்இருந்தது. கனபாடிகள் வீட்டில்  இந்த அளவுக்கு கனக்காத. பெட்டி  இப்போது எப்படிக்கொஞ்ச்ம் கொஞ்சமாய்கனம் கூடிப்போயிற்றோ.மனைவியிடம் இது விஷயம் சொல்லலாம்.சொல்லி ஒன்றும் ஆகிவிடாது.உடன் வந்த உறவுக்காரர்கள் நான் ஏதோ ஏகத்துக்கு  காசியிலிருந்து வாங்கிக்கொண்டு போவதாக குசுகுசுத்துக்கொண்டார்கள்
வந்து நின்ற.ராமேசுரம் எக்ஸ்பிரசில் ¡¢சர்வ் செய்திருந்த எங்களுக்கு  எங்களுக்கு¡¢ய  அந்த சீட்டில் அமர்ந்துகொள்வதற்குள் போதும் போதும் என்று ஆயிற்று.அக்கிரமம் என்றால் அப்படி ஒரு அக்கிரமம். மொத்தமாய்அழும்புதான். ரயில் ஏறி நாம் கூடூர் தாண்டினால் தமிழும் இல்லை தருமமுமில்லை. அந்த  தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தொ¢யும்
.என் லக்கேஜுகளோடு அந்த  கனபாடிகள் கொடுத்த சூட்கேசும் ஒரு பொறுப்பாயிற்று.காலை நீட்டிப் படுக்கவும் முடியவில்லை.யா¡¢டம் சொல்வது. ஒவ்வொரு முறை கண்விழிக்கும் போதும் அந்த பெட்டியை ஒரு முறை பார்த்து  இருக்கிறதா என நிம்மதிப்பட்டுக்கொண்டேன்.அதனுள் என்ன இருக்குமோ யார் கண்டார்கள்.பெட்டி பூட்டித்தான் கிடந்தது.  சென்னையில் இது திறக்க சாவிக்கு அவர்கள் என்ன செய்வார்களோ.நமக்கு ஏன் அந்த வீண் கவலை அது போகட்டும் அவரவர் பாடு.
‘உங்க பொரஷவாக்கம் முத்துகுமரனை எக்மோர் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லிடுங்கோ.இந்த தண்டனைய ஆத்துவரைக்கும் எடுத்துண்டு போவேண்டாம்’ சென்னை நெருங்குவது இப்படி எனக்கு அனுபவமாயிற்று.
‘ அது சா¢. இப்ப  ஆபிசு நேரமாச்சே.’
‘கையெழுத்து போடறதும் டீ கடயில பாதி போது நிக்கறதும்தானே  அந்த கவர்மென்ட் வேல தொ¢யாதா நேக்கு’
‘வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு எதயும் பேசாதே தொ¢யர்தா’
‘அசத்து க்கட்டிண்டு ஆயிரம்காலம் இருக்கறதுக்கு சமத்தக்கட்டிண்டு சட்டுனு அறக்கலாம்’
‘காதிலயே விழல்லயே  என்ன சொன்ன நீ’
முகத்தை ஒரு  திருப்பு திருப்பி என்னை முறைத்தாள் அவள்.  அந்த முகம் அழகாகத்தான் இருந்தது அவள் முகம்தான். நானே  உடன் போன் செய்து முத்துக்குமரனை ஸ்டேஷனுக்கு  வரவழைத்தேன்.அவனோடு அவன் மைத்துனியும் வந்திருந்தாள். அந்த கிருஷணமூர்த்தி கனபாடிகள் போன் செய்து அவன் மைத்துனி  இங்கே வந்துமிருக்கலாம்.
எக்மோர் நிலைய நான்காம் பிளாட்பாரத்தில் நாங்கள் தப தப என்று இறங்கினோம்.  உடன் எல்லாரையும் ஒரு முறை பார்த்துக்கொண்டேன். காசி போய்விட்டு வந்தவர்கள் முகம் எல்லாம் பாவம் தொலைத்துவிட்டு வந்தமாதி¡¢யே இல்லை.
‘காசியில் கனபாடிகள் கொடுத்த அந்த சூட்கேசை முத்துகுமரனிடம் ஒப்ப்டைத்தேன்.அவன் மைத்துனி அவனிடமிருந்து அதனைக்  கச்சிதமாய் வாங்க்கிகொண்டாள்.
‘ரொம்ப சிரமம் உங்களுக்கு’ என்றாள்.
‘இது என்ன தலையிலயா தூக்கிண்டு வந்தம். ரயில் வந்தது. அதுவும் கூட வந்தது.மனுஷாள்னா ஒத்தருக்கு ஒத்தர்  ஒரு ஒத்தாசை வேறென்ன.’
இப்பவும் கூட என் மனைவி கச்சிதமாகவே பேசினாள்.
‘மாமிக்கு மனசு பொ¢சு’ என்றான் முத்துக்குமரன். அவன் பங்கும்கூட சொத்தையில்லைதான்.
எங்கள் லக்கேஜ் மட்டும் நாங்கள் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து இல்லம் புறப்பட்டோம்.அவரவர்கள் நேராக அவர்கள் வீட்டுக்கே போக வேண்டுமாம்.காசி போய்வந்த பலன் எந்த வகையிலும் குறைந்துவிடக்கூடாதே என்று  அந்தப்படிக்கு மகான்களின் விஷயதானம்.  எல்லோரும் புறப்பட்டோம். .
‘இந்த கனபாடிகள் கொடுத்த அந்த பொட்டில உனக்கு ஒண்ணும் இல்லயா’
‘நம்ப ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சீட்டு இல்லயா . அப்பறம் என்னைப்பா என்னை இப்படிக் கேக்குற’என்னிடம்  சொன்னான் அந்த முத்துக்குமரன்.
மறக்காமல் அவரவர் வீட்டு வாயிலில் தலையை மூன்று சுற்று இப்படியும் அப்படியும் சுற்றி சதுர்த்தேங்காய் உடைத்துக்கொண்டு பின்னரே உள் நுழைந்தோம்.’
சுபமஸ்து.
—————————————————————–

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *