தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 ஆகஸ்ட் 2019

வாழ்க நீ எம்மான்.(1 )

எஸ்ஸார்சி

Spread the love

1.எந்த சேவையும் செய்வதற்கு முன்பாகத் தன்னை அந்தச்சேவை செய்யத்தகுதியுடையவனா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கோழை எந்த உபதேசமும் செய்வதற்கு அருகதை அற்றவன்.

3.இந்திரனுக்கும் லட்சுமணனுக்கும் ஒரே திறமையும் ஆற்றலும் இருக்க, இந்திரன் ஏன் தோற்றுப்போனான்? இந்திரனுக்கு அறம் துணைக்கு வரவில்லையே ஆகத்தான்.

4.பூசாரிகளே மொத்த பேராசைக்கும் உபயதாரர்கள்.

5.விசித்திர வார்த்தைகளுக்கு அலைவதும் அவற்றின் உச்சரிப்புகளைச் சொல்லியே காலம் கடத்துவதுமா கற்றவர் வாழ்க்கை.

6.1914 ஆம் ஆண்டு இந்தியாவில் காலராவும் பிளேக்கும் விழுங்கிய மனித உயிர்கள் 46,49,663

7.’நான் மீண்டும் ஜென்மம் எடுப்ப்து என்றானால் தீண்டத்தகாதவனவே நான் பிறக்கவேண்டும்’.

8.உலகில் ஏற்படும் தண்ணீர்ப்பஞ்சம்
வெள்ளக்கொடுமைகள்
பூகம்பங்கள் இவை இயற்கை தருபவை.
மனிதனின் ஒழுக்கத்திற்கும் அவைகட்கும் ஒரு தொடர்புண்டு என்பது என் அபிப்ராயம்.

9.தீண்டாமை பாவத்துக்காக பூகம்பம் தெய்வத்தின் கோபத்தின் அறிகுறியாக இருக்கலாம்.( 30/09/1893 மகாராஷ்ட்ரா சாவு 40,000)

10. தருமர் தன்னுடைய நாயையும் அனுமதித்தாலன்றி சுவர்க்கம் தனக்கு வேண்டாம் என்றார்.

11.பிறப்பு காரணமாக ஒரு சகோதரரை சாதிப்ரஷ்டமாக நடத்தும் வரையில் நாம் சுயராஜ்யம் பெறக்கடவுள் விடமாட்டார்.

12.தீண்டாமை என்கிற களங்கத்தைத்துடைக்கும் தவத்தை மேற்கொள்ளாதவர்கள் தம்மை ஹிந்து என்று நம்பி ப்பெருமை கொள்ள முடியாது.

13.தீண்டாமைக்களங்கம் ஒழியாமல் நமக்கு அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தீண்டாதோரின் நிலை இன்னும் மோசமாகிவிடும்.(06/02/1931-யங் இந்தியா)

14. அந்த்யஜன்(கடைசியாப்பிறந்தவன்) என்பதையே மாற்றி ஹரிஜன்( இறைவனின் மனிதன்) என்று கூறுகிறோம்.

15.தீண்டாமையை ஒரு உண்மையான மதம் அனுமதிக்க முடியாது. ஆனால் சைத்தான்கள் எப்போதும் வேத சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்கூறுவதுண்டு.

16.மாட்டிறைச்சி உண்பதில் முளைத்த வித்தியாசமே தீண்டாமைக்கு வித்திட்டது.

17.சைதன்யர்,ஞானதேவர்,துகாராம்,

திருவள்ளுவர்,ராமகிருஷ்ண பரமஹம்சர்,ராஜாராம் மோஹன்ராய்,மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்,விவேகானந்தர்
ஆகியோர் பேசியது மெய்யயை மட்டுமே.

18.பிராம்ணரல்லாதோர் எதை மீதம் வைத்து க்கொடுக்கிறார்களோ அதைக்கொண்டு பிராம்ணர்கள் திருப்தி அடையுங்கள்;( கடலூரில் நிகழ்த்திய உரை)

19.சிறிதளவு கைமாறும் எதிர்பாராமல் பூரண தொண்டு புரியும் உரிமை கோரியதற்காகமட்டுமே பிராமணர்களுக்கு மரியாதை காட்டினார்கள்.

20.தீண்டாமை இருந்துவருவதைவிட ஹிந்து மதம் செத்துப்போவது மேல்.( யங் இந்தியா 26/11/1931)
———————————————————————————

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​

Leave a Comment

Archives