சத்யானந்தன்
ஜூலை 1,2004 இதழ்:
திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407017&edition_id=20040701&format=html )
இதோ ஒன்று ஆபாசமான இணைப்பு – மாலதி
படிகளில் ஏறிவிட
வடிகால் அமைத்துத் தர
சேக்காளி குழு துருப்புச் சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக் கவிதை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60407014&edition_id=20040701&format=html )
ஜூலை 8, 2004
நேரடி ஜனநாயகம்- குண்டலகேசி
1999 முதல் ஸ்விட்ஸர்லாண்டில் நேரடி ஜனநாயகம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி மக்கள் பிரதிநிதி அவர் விருப்பப் படி முடிவெடுக்க முடியாது. மக்கள் முடிவை ஏற்று அதை செயல்படுத்தி நிர்வாகம் செய்வது மட்டுமே அவர் வேலையாகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=204070810&edition_id=20040708&format=html )
ஜுலை 15, 2004 இதழ்:
அரசியலும் ஆங்கில மொழியும் -ஜார்ஜ் ஆர்வல்
துல்லியமாய் எழுத முயலும் ஒவ்வொரு எழுத்தாளரும், ஒவ்வொரு வாக்கியம் எழுதும் முன்னர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய நான்கு கேள்விகள் இவை:
1.நான் என்ன சொல்ல முயற்சி செய்கிறேன்?
2.எந்த வார்த்தைகள் அதனை வெளிப்படுத்தும்?
3.எந்தப் படிமம் அல்லது சொற்றொடர் அதைத் தெளிவு படுத்தும்?
4.இந்தப் படிமம் படித்தவர்கள் மனதில் பதியுமாறு புதியதான ஒன்றாய் இருக்கிறதா?
இதில்லாமல் மேலும் இரண்டு கேள்விகளும் தன்னையே அவன் கேட்டுக் கொள்வான்:
1.இன்னமும் சுருக்கமாக இதை ஆக்க இயலுமா?
2.தவிர்க்கக் கூடிய மொழிக்கோளாறு ஏதாவது நான் எழுதி விட்டேனா?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60407157&edition_id=20040715&format=html)
ஜூலை 22, 2004 இதழ்:
கர்ணனின் மனைவி யார்?- சுகுமாரன்- கவிதையில் ‘வ்ருஷாலி’ என்று விளித்துத்தான் கர்ணன் தன் வாழ்வின் கடைசி முறையீட்டைச் செய்கிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60407221&edition_id=20040722&format=html )
அறிய விரும்பிய ரகசியம்- (எலி லீசலின் ‘இரவு’ நூல் அறிமுகம்)- பாவண்ணன்
தனக்குக் கிடைத்த ஒரே ஒரு கோப்பை சூப்பை, இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் தந்தைக்குக் கொடுப்பதா, அல்லது மறுநாள் உயிர்வாழத் தேவையான வலிமைக்காகத் தானே அருந்துவதா என்று அவன் மனம் தத்தளிக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60407224&edition_id=20040722&format=html )
அழகும் அதிகாரமும்- (காதல் தேவதை- மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்) பாவண்ணன்- மேல் கோட்டு இந்நாவலில் ஒரு முக்கியமான படிமமாக வருகிறது. அழகின் அடையாளமாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் ஒரே சமயத்தில் தோற்றம் தருகிறது அது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60407226&edition_id=20040722&format=html )
ஜூலை 28, 2004 இதழ்:
கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்- சின்னக் கருப்பன்- ஜுலை 2004 உயிர்மை இதழில் வெளியான கட்டுரைக்கு எதிர்வினை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20407293&edition_id=20040729&format=html )
ஆகஸ்ட் 5, 2004 இதழ்: பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன: எச். பீர்முகம்மது- அரபுலகில் தற்போது பத்திரிக்கைச் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரம் ஜனநாயக அமைப்பு முறைக்கு வலுவான காரணி ஆகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20408055&edition_id=20040805&format=html )
திருக்குறள் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா? திருக்குறள் ஒரு சமண நூலா? – நா.முத்துநிலவன்- சமணம் துறவு பற்றித் தானே பேசும். திருக்குறள் இல்லறம் பற்றிப் பேசும். உழவு சமணத்தில் உயிர் கொல்லி. திருக்குறள் உழவைப் போற்றுகிறதே?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60408055&edition_id=20040805&format=html )
ஆகஸ்ட் 12, 2004 இதழ்:
மக்கள் தெயவங்களின் கதைகள்- முனைவர் அ.கா.பெருமாள்: பூலங்கொண்டாள் அம்மன் கதை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20408124&edition_id=20040812&format=html )
ஆகஸ்ட் 12 2004 இதழ்: பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி- முனைவர் எஸ்.பி.உதயகுமார் – கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்து நாம் பேரிடர்களைத் தடுக்கவும் எதிர்கொள்ளவும் தேவையான பயிற்சியற்றவர்கள் என்பதையே நினைவு படுத்துகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20408128&edition_id=20040812&format=html )
ஆகஸ்ட் 19 2004 இதழ்: தூக்கு தண்டனை எதற்காக? -ஞாநி- மரண தண்டனை என்பது ஒரு சமூகம் சட்டத்தின் கீழ் ஒளிந்து கொண்டு கொலை செய்வதைத் தவிர வேறல்ல.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20408196&edition_id=20040819&format=html )
ஒரு துளியின் சுவை- பாவண்ணன்
ஊரார் புடவைக்கு வண்ணான் ஆசைப் பட்டதைப் போல
பொன் என்னுடையது
மண் என்னுடையது என்று மயங்கினேன்
உன்னை அறியாத காரணத்தால் உழன்று கெட்டேன்
கூடல சங்கம தேவா
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60408192&edition_id=20040819&format=html )
ஆகஸ்ட் 19, 2004 இதழ்:
சங்க இலக்கியம் – ஒரு எளிய அறிமுகம்- அக்கினிபுத்திரன்
எட்டுத் தொகை நூல்கள் -நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு ,பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு , புறநானூறு
பத்துப் பாட்டு நூல்கள்- திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தாராற்றுப் படை (மலை படு கடாம்), குறிஞ்சிப் பாட்டு, மதுரை காஞ்சி, முல்லைப் பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60408193&edition_id=20040819&format=html)
ஆகஸ்ட் 27 2004 இதழ்:
ரவி சுப்ரமணியன் கவிதைகள்- சுகுமாரன்-
சொல்லாமல் இருப்பது
போலவே தோன்றுகிறது
சொல்லிய பின்பும்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60408275&edition_id=20040827&format=html )
யோனி பிளஸ் முலை = நாஞ்சிலார் பிளஸ் சிபிச்செல்வன்=பாராட்டுகள்- குட்டி பத்மா
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60408272&edition_id=20040827&format=html)
- ஜெய் பீம் காம்ரேட் (தமிழ்) திரையிடல் @ பெரியார் திடல்
- தினமும் என் பயணங்கள் – 12
- தொடுவானம் 11. செம்பனைத் தோட்டம்
- இலக்கியச் சோலை நாள் : 20-4-2014 ஞாயிறு காலை 10 மணி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 70 ஆதாமின் பிள்ளைகள் – 3
- திண்ணையின் இலக்கியத் தடம் -30
- நீங்காத நினைவுகள் – 42
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2
- பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !
- திரை விமர்சனம் – மான் கராத்தே
- மருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 28
- பொலிவு
- 3 Books Launch in Canada – 6 th April 2014 – Kalam
- சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?
- நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.
- நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)
- தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்