வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(Not Heaving from my Ribbed Breast Only)
முறிந்த இதயப் பெருமூச்சு
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முறிந்து போன என் நெஞ்சு மட்டும்
பெருமூச்சு விட வில்லை.
வெறுப்புற்று என்மீது அதிருப்தியில்
வெகுண்டு இரவில் எழும்
நெட்டுயிர்ப்பில் இல்லை.
நீடித்து நொய்ந்து
அடக்கி வைத்த ஏக்கங்களின
உடைப்பில் இல்லை.
முறித்த சூளுரைப்பு
உறுதி மொழி களில் இல்லை.
தன்னிச்சையில்
தாறு மாறாய்ப் போன
ஆத்மாவின் துணிச்சலில் இல்லை.
மெதுவாய்க் காற்றிழுத்து
மேனி வளர்ப்பதில் இல்லை.
நெற்றி முட்டி, கை முட்டியால்
நெஞ்சில் அடிப்பினும்,
நேர்வ தில்லை !
மேல்கீழ் உடலில் ஏறி இறங்கும்
இரத்த அழுத்த மாற்றத்தில்
ஒரு நாட் பொழுதில்
வாழ்வே முடிந்து போகும்
ஊழ்விதியில் இல்லை.
கடும்பசி வேட்கையில்
வானோக்கி இருப்பதில் இல்லை.
தனிமையில் வெகு தூர
வனாந்திரத்தில்
அழுகை, சிரிப்பு, எதிர்ப்பு போன்றவை
என் மூலம் வரும் போது
ஏற்படு வதில்லை.
பல்லிறுக்கி, மூச்சுத் திணறி
மேல் தோலில் இருப்ப தில்லை.
திரும்பத் திரும்ப மந்திரம்
ஓதும் மொழிகளில்
உயிரில்லா வாய்ச் சொற்களில்
ஒருபோது மில்லை.
உறங்கும் போது வருமென்
கனாக்களின்
முணுமுணுப்பில் இல்லை.
ஒவ்வோர் தின
அதிசயக் கனவுகளின்
மௌனச் சொற்களில் இல்லை !
உனக்கேற்ற, நீடித்தேற் காத
உடலுறுப்பு,
மெய் உணர்வில் இல்லை.
எவற்றிலுமே இல்லை !
பிணைக்கும் உறவே !
பிறவியின் உயிர்த் துடிப்பே !
நீ நிலவி இருப்பது
நிச்சயம் எனக்குத் தேவை;
எனது பாடல் களிலே
நீ இருப்பதை நான்
நிரூபிக்கத் தேவை யில்லை.
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [April 24, 2014]
- திராவிட இயக்கம் எழுச்சியும் வீழ்ச்சியும் அத்தியாயம் 4
- முக்கோணக் கிளிகள் படக்கதை 1
- ஆகவே
- அந்தி மயங்கும் நேரம்
- நாடெனும்போது…
- மோடியா? லேடியா? டாடியா?
- திரை ஓசை டமால் டுமீல்
- சிறுநீர் கிருமித் தொற்று
- 1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.
- கனவு மிருகம்!
- திண்ணையின் இலக்கியத் தடம் -32
- கொள்ளெனக் கொடுத்தல்
- பாரின் சரக்கு பாலிசி
- தினம் என் பயணங்கள் -14
- அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்
- அங்கதம்
- நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு
- பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .
- தொடுவானம் 13. பிரியமான என் தோழியே.
- வாசிக்கும் கவிதை
- பிறன்மனைபோகும் பேதை
- புள்ளின்வாய்கீண்டான்
- வளையம்
- நீங்காத நினைவுகள் – 43