திண்ணையின் இலக்கியத் தடம் -32

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

அரசியல் சமூகம்

திண்ணையின் இலக்கியத் தடம் -32

சத்யானந்தன்

நவம்பர் 4 2004 இதழ்: வீரப்பன் மட்டும் தான் கிரிமினலா?- ஞாநி- புதைக்கப் பட்ட வீரப்பன் உடலோடு சேர்த்துப் பல உண்மைகளும் புதைக்கப் பட்டன என்பதில் சந்தேகமே இல்லை.

படைப்பு

அஞ்சலி இயக்குனர் வான் கோ- நிறைவேற்றப் பட்ட ஃபத்வா- ஆசாரகீனன்- வான் கோ மொரோக்கோவிலிருந்து நெதர்லாந்துக்குக் குடியேறிய இஸ்லாமிய தீவிரவாதியால் கொல்லப் பட்டார்.
படைப்பு

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 8- அ.கா.பெருமாள்- வெங்கலராசன் கதை
படைப்பு

ப.சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம்’ ஒரு பார்வை- நா.திருப்பதி சாமி- படிப்பதற்கு நாவல் போலவும் வரலாற்று நூலுக்கு உரிய நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கிறது இந்நூல்

பொதுச் சிவில் சட்டத்துக்கு ஆதரவாக- பரிமளம் – எந்த ஜாதிக்காரரும் இந்துக் கோயிலில் அர்ச்சகராகலாம் என்பது பொது சிவில் சட்டத்தாலேயே சாத்தியமாகும்.

படைப்பு

நவம்பர் 11 2004 இதழ்:
இந்தியாவில் பணக்காரர்களை விட ஏழைகள் அதிக வரி செலுத்துகிறார்கள்- குனால் குமார் குண்டு
நேரடி வரிகள் 2003-04ல் 60% வருவாய் தந்தன. மறைமுக வரிகள் 40% . அதாவது ஏழைகள் தமது வருமானத்தில் மிகப் பெரும் பகுதியை மறைமுக வரிகள் மூலம் வரியாக செலுத்துகிறார்கள்.
படைப்பு

அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்- எச்.பீர் முகம்மது- சுல்தான் அல் நஹ்யான் மரபார்ந்த அடிப்படைவாதக் கருத்தியலிலிருந்து விலகியே இருந்தார்.
படைப்பு

மனுஷ்ய வித்யா- பி.ஏ.கிருஷ்ணன்
உலகம் மாயை என்று சங்கரர் தான் கூறுகிறார். எல்லாமே உண்மை என்கிறார் ராமானுஜர்.
படைப்பு

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9- அ.கா.பெருமாள்- சிதம்பர நாடார் கதை

நவம்பர் 18 2004 இதழ்:

தமிழர்களின் அணு அறிவு- புதுவை ஞானம்

எட்டுத் திசையும் எரிகின்ற காற்றோடு
வட்டத்திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே
படைப்பு

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 10- அ.கா.பெருமாள்-சேர்வைக்காரன் கதை
படைப்பு

பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு- கோச்சா – “ஒவ்வொரு சொட்டாத வியர்வைக்கும் இந்திய மதிப்பில் 47 மடங்கு சம்பாதிக்கும் என்று” தனது ஆனந்த விகடன் தொடரில் அமெரிக்கத் தமிழர்களை விமர்சிக்கிறார்.

நவம்பர் 28 2004 இதழ்:
பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி- ஜோதிர்லதா கிரிஜா- பெண்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் ஆண்களின் ஆண்மை அழிய வேண்டும் என்று வெடிக்கிற அளவு பெரியார் பெண் பரிவாளராக இருந்தார்.
படைப்பு

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 11- அ.கா.பெருமாள்- கட்டிலவதானம் கதை
படைப்பு

டிசம்பர் 2, 2004 இதழ்:

ஜமாத் என்றால் என்ன?- பிறைநதி புரத்தான்- ஜமாத் என்றால் கொள்கை அடிப்படையிலான “குழு”, “கூட்டமைப்பு”, “சங்கம்” என்று பொருள்.
படைப்பு

தியாகம் என்னும் உண்மை -‘போர் தொடர்கிறது’- ஸ்பானிய நாவல் அறிமுகம்- பாவண்ணன்- மனித குமாரன் நமக்காக ரத்தம் சிந்தினார் என்னும் நம்பிக்கையை ஒட்டிய விவாதமாக அமைந்திருக்கிறது அகஸ்டோ ரூவா பஸ்டோஸ் எழுதிய Son of Man என்னும் ஸ்பானிய நாவல். இதை ‘போர் தொடர்கிறது’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ்.பாலச்சந்திரன்.
படைப்பு

என் பார்வையில் நவீன தமிழ்க் கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்- மாலதி-

பிரமிளின் கவிதை “பல்லி”-

கவிதை
இறக்கத் துடிக்கும் வாலா?
உயிரோடு மீண்ட உடலா?

டிசம்பர் 9 2004 இதழ்:

உயிர்களை அலட்சியப் படுத்தும் நச்சுத் தொழிற்சாலைகள்- அசுரன்
போபாலில் நடந்த விஷவாயு விபத்து நடந்து 20 ஆண்டுகள் முடிந்த பின் கேரளாவில் எல்லூர் என்னும் இடத்தில் அளவில் சிறியதென்றாலும் கடுமையான நச்சு வாயுக்கள் பூச்சிக் கொல்லி ஆலை தீப்பிடித்து எரிந்ததில் வெளியாகி மக்களை பாதித்தன.
படைப்பு

‘புலன் அடக்கத்’தின் பொன் விழாக் கொண்டாட்டம் அன்று – ‘புலன் விசாரணை’யில் சிக்கிய திண்டாட்டம் இன்று- ஜோதிர்லதா கிரிஜா- ஜெயேந்திரரின் பாலியல் அத்து மீறல்கள் பற்றித் தொலைபேசியிலும் நேரிலும் எழுத்தாளர்களோடு அனுராதா ரமணன் விவரங்களைப் பகிர்ந்து வந்துள்ளார். எங்களுக்கு இது செய்தியே அல்ல. மக்களுக்குத் தான் அதிர்ச்சி.
படைப்பு

கண்ணில் ஒன்றைக் குத்தி காட்சி கொடுத்தால் தகுமோ- நளாயினி தாமரைச் செல்வன்- புலம்பெயர்ந்த இந்தியப் பெற்றோர் பலர் பெண் குழந்தைகளை மிகவும் கவனித்து வளர்க்கிறார்கள். மறுபக்கம் ஆண் குழந்தைகள் கவனியாது விடப்படுகின்றனர்.
படைப்பு

ஜோ டீ குருஸீன் ‘ஆழி சூழ் உலகு’ -ஜெயமோகன்- ஜோவின் நாவல் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டின் கதை.

படைப்பு

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 12- அ.கா.பெருமாள்- முத்துப்பட்டன் கதை

படைப்பு

டிசம்பர் 16 2004 இதழ்:
எம்.எஸ். ஒரு வரலாற்றுப் பதிவு -லலிதா- கீர்த்தனைகளில் உச்சரிப்பு, பாவம், சாஹித்ய சுத்தம் என்று அனைத்து லட்சணங்களையும் எம்.எஸ்.ஸின் கச்சேரிகளில் காண முடியும்.

படைப்பு

உயர்பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும் – மாலதி
தத்வம், ஹிதம் புருஷார்த்தம் என்ற மூன்று அம்சங்களும் திருமால்தான் என்று விளக்குவது திருப்பாவையின் தத்துவப் பார்வை.
படைப்பு

வஞ்சிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வரலாறு- என் எஸ் – நடேசன்- 18 , 19ம் நூற்றாண்டுகளில் லட்சக்கணக்கில் இடைத் தரகர்களால் இலங்கை மலைத் தோட்டங்களுக்குக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் தலித்துகள். இவர்களுக்காக இலங்கையில் யாரும் போராட முன் வரவில்லை. இன்று வரை இவர்கள் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லை.
படைப்பு

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 14- அ.கா.பெருமாள்- வன்னிராசன் கதை
படைப்பு

டிசம்பர் 23 2004 இதழ்:

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரசம்- பாலா-

கரிசேர் பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
படைப்பு

உயர் பாவை -2- மாலதி – சிறு வீடு என்றால் குறுகிய கால மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படும் ஒரு காலை நேர schedule.

டிசம்பர் 30 2004 இதழ்:
பெரானகன்- ஜெயந்தி சங்கர்

17ம் நூற்றாண்டில் மலேயாவுக்கு வந்த சீனர்களுக்கும் மலேயருக்கும் பிறந்த வாரிசுகளே பெரானகன்கள்.

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 15- அ.கா.பெருமாள்-
வன்னியன் கதை.

படைப்பு

சூசன் சாண்டாக்- சுகுமாரன்- ஒரு வாசகனின் அஞ்சலி- நுட்பமும், நம்பகமானதும் கலையின் நெகிழ்வு தென்படுவதுமான ஒரு பார்வை சூசன் சாண்டாக்குடையது.

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *