குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 31 in the series 4 மே 2014

கோவிந்த் கருப்

மலருக்கு மலர் வந்துமர்ந்து, அம்மலரின் தேனை உறிஞ்சிச் சென்று வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பாய் சேர்த்து பின்னொரு நாள் மனிதனிடம் தேனை முழுதும் இழக்கும் தேனீ வகையறா இல்லை….
மலரெனினும் மலமெனினும் இலக்கேதும் அன்றி அமர்ந்து செல்லும் , உலகம் விலக்கும், ஈ யும் அல்ல…
தேனீ, ஈ இரண்டையும் நாம் அருகே சென்று முத்தமிட்டதில்லை… ஒன்று கொட்டும் , இன்னொன்று வியாதி தரும்…
ஆனால், நான் இன்னொரு வகையறா….
– பூப்பூவாய் தேடிச் சென்று மகரந்த சேர்க்கைக்கு, தேனைத் திருடாமல் , சேவை செய்யும் வண்ணத்துப் பூச்சி வகையறா..
வண்ணத்துப் பூச்சி கண்டு சந்தோஷிக்காதவர் யாருண்டு..? துரத்திப் பிடித்தாலும், தானே மேல் வந்தமர்ந்தாலும் அதை முத்தமிட்டு மகிழாதவரும் உண்டோ….

நான் சமீபத்தில் அமர்ந்த ஒரு புத்தகம்,
குமரிக்கண்டமா சுமேரியமா? தமிழரின் தோற்றமும் பரவலும்.
தொகுத்தெழிதயவர் பா. பிரபாகரன்.
தமிழர்களுக்கு பொதுவாகவே தனது ஆதி அந்தம் பற்றிய கேள்வி உண்டு. அதிலும், தங்களது இன அடையாளத்தை தேடும் போது, ஆரியர்கள் யார் என்ற ஒப்புமையுடனே அந்த தேடல் தொடர்கிறது.
தமிழர் – திராவிடர் என்ற சங்கிலித் தொடர் தனித்தே அன்றி, பக்கவாட்டாக ஆரியர் எனும் இனம் சங்கிலியாக ஓடிக் கொண்டே இருக்கிறது.
தனித்தில்லாமல், பிணைத்தே எல்லா இடத்திலும் இந்த ஆராய்ச்சி எனினும் அளவளாவல் எனினும் நடக்கிறது.
எழுத்தாளர் அகழ்வாராய்ச்சி, அல்லது டி என் ஏ ஆராய்ச்சி போன்ற தளத்தினர் அல்ல..
தொழில் அதிபர். ஆனால், தமிழ், தமிழர் பற்றிய தேடல் அதிகம் உள்ளவர். ஆழ, அகல படித்தவர். அதில் தன் வினாவிற்கான தேடலையும், அதில் தனது புரிதலின் மற்றும் நம்புதலின் அடிப்படையில் தனது வாதங்களையும், நம்பிக்கைகளையும் முன் வைக்கிறார்.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற பாடல் பிரபலமான தமிழக்த்தில், ஆரியன் எங்கிருந்து வந்தான், தமிழன் யார்… சூத்திரன் யார் என்ற தேடல் தமிழகத்தில் அனைவருக்கும் உண்டு,
ஒரு இனம் பொருளாதார மற்றும் ஆளுமை ரீதியான நிலைப்பாட்டில் இன்னொரு குழுவிடம் தோற்றதின் வெளிப்பாடே இந்த ஆரியர் – திராவிடர் அல்லது தமிழர் தேடல் தொடங்கியது.
இது பற்றி புதிய மாதவி அரசியல் ரீதியாக ஒரு கட்டுரை திண்ணையில் எழுதுகிறார்.
பிரபாகரனின் புத்தகம், லேழூகிர்யா கண்டம் என்ற நம்பிக்கை நிலைப்பாட்டில் கோடாலியை வீசி சுமேரியாவிற்கு தமிழனனின் ஆதி தேடி அழைத்துச் செல்லுகிறது.
ஆனால், ஒரு விசேஷம். தமிழர்களின் தங்கள் ஆதி பற்றிய ”கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்தக் குடி” என்ற மாதிரி , தமிழன் அந்தரத்தில் தோன்றியவன் போன்ற உணர்ச்சிப் பொட்டலங்கள் இல்லாமல், நிதானமாக ஆனால் விறுவிறுப்பாக தனது சிந்தனைகளைச் சொல்கிறார் எழுத்தாளர்.
சுமேரியா, தில்முன், மினோயன், சிந்துசமவெளி என்று அளவளாவிச் செல்கிறார்.
தமிழகம் குடியமர்த்தப்பட்டது பற்றி தனது நிலைப்பாடுகளையும், பூகோகோள நகர்வுகலுடன் நகர்த்திச் செல்கிறார்.
முத்தாய்ப்பாக தனது பூஜை அறையில் இருக்கும் கிண்ணத்துடன், சுமேரியாவை இணைத்து முடிக்கிறார்.
விவாதங்களுக்கு உட்படும் புத்தகம் எனினும், வரட்டுத்தனமின்றி விறுவிறுப்பாக இருக்கும் நடை பாராட்டுக்குறியது.
மத்தபடி, இதன் வரலாற்று விஷயங்களை , புத்தகம் படித்து பின்னோட்டத்தில் விவாதிக்க வேண்டுகிறேன்.
கோவிந்த் கருப்

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *