வேள்வி

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 31 in the series 4 மே 2014

கணேஷ் . க  

 

மிகுந்தமனவருத்தம், தேவியுடன்சண்டை, கோபம்கொண்டுசீக்கிரமேஅலுவலகம்விட்டுவீட்டுக்குபோய்விட்டாள், சண்டைகள்இப்போதெல்லாம்  சகஜம்ஆகிவிட்டிருந்தது, போகும்வழியில்போன்செய்யவில்லை, நான்அனுப்பியகுருஞ்செய்திகளுக்குமட்டும்விடைவந்துசேர்ந்தது, எப்படியும்போனில்அழைப்பால்என்றுதெரியும், இதைநம்பிக்கைஎன்றுகொள்வதா?, இல்லை, வேறுஏதோஒருதிமுருஎனக்குள்என்றேபட்டது, நான்அழைப்பேன்என்றுஎதிபார்திருப்பாள், நான்அழைக்கவில்லையே, சண்டைக்கு காரணம் நான் இல்லை என்றேபெரும்பாலும்நம்புவேன். இந்தநம்பிக்கையும்இன்னொருசண்டைக்குவித்திடும்என்றுஎண்ணிசிலசமயம்நானேஅழைத்துசண்டையைவளர்த்தகதைகளும்உண்டு. அதுஒருபக்கம்இருக்கட்டும், ஏன்சண்டைவருகிறதுஎன்றுஆராய்ந்தால்ஒன்றும்பெரிதாய்தோன்றாது, வெறும்சிகரெட்டுக்கு ஆகும்செலவுதான்மிச்சம். ஆகசண்டையில்தான்என்காதல்வாழ்க்கைபயணிக்கிறது, இந்தஉறவுஒத்துவராது, பிரிந்துவிடுவோம்என்றுவெறும்வாய்மொழிகள்பொழிந்தேஇரண்டுவருடங்கள்கடந்துவிட்டோம். இதுவும்காதல்தானா? இதுகூடவாகாதல்? இதுகாதலா? என்றபலகேள்விகளுக்குஇன்றளவும்இருவரும்சேர்ந்தேவிடைதேடிக்கொண்டிருக்கிறோம்.

 

பெரும்பாலும்சண்டையால்ஏற்படும்டென்ஷன்நானேஉருவாக்கிகொள்கிறேனோ? என்றுதோன்றும், ஏதோஒருசாக்குவேண்டும்சிகரெட்பற்றவைக்க, என்றுஎண்ணுவேன். காதல்துளிர்த்தகாலங்களில்தேவியின்கண்ணில்நீர்பார்த்தஉடனேசமாதானம்செய்யமுற்படுவேன், ஏனோஇப்போதெல்லாம்அப்படிதோன்றவில்லை, மாறாகபெண்களின்கண்ணீர்பெரும்பாலும்பொய்என்றேஎண்ணதோன்றுகிறது, காரியம்சாதிக்கவேகண்ணீர்ஆயுதமாகிறதுபெண்களுக்கு, “எவ்வளவுஅழகாநடிக்குறாஇவ”, என்றுஅவள்அழுகையைபார்த்துகொண்டிருக்கிறேன், விளைவுசண்டையின்அடுத்தகட்டம்போகிறோம்.

 

உண்மையைஅறிந்துகொள்வதுஉறவுகளில்பிழைதான்போலும். அவள்அழுகைக்குஆட்பட்டுவிட்டால்சண்டைமுடிந்துஒருமுத்தமோஅல்லதுசிறியஅளவிலானஒருஊடல்கூடல்என்றுஏதாவதுபரிசுகிடைக்கும். உண்மை,தெளிவுடன்இருக்கிறேன்என்றுபெருமைகொள்வதா? பரிசுபறிபோனதேஎன்றுவருத்தம்கொள்வதா?, சண்டைக்குபிறகுபரிசாககிடைக்கும்காமம்இன்பம்தான். மனுஷன்தன்காமவேட்கைக்குஎப்படிஎல்லாம்அழகுசேர்த்திருக்கிறான்!, இந்தஉண்மைநிச்சியம்என்மனதில்பதியகூடாது, பதிந்தால்துறவிதான்ஆகவேண்டும்நான். எதையோஆரம்பித்துஏதோபேசிகொண்டிருக்கிறேன்பாருங்கள். நம்மகதைக்குவருவோம்.

 

ஒருவழியாகவழக்கம்போல்அவளேஅழைத்தாள், உடனேஎடுத்தால்நம்மதன்மானம்என்னஆவது?, ஒரு 4 ரிங்குகள்விட்டுஎடுத்தேன், “5 மினுட்ஸ்லநானேகால்பண்ற”, என்றுசொல்லிசிகப்புபொத்தானைஅமுத்தினேன். விடுவாளஅவ, இரண்டுபக்ககுறுஞ்செய்தி, BYE என்றுசொல்லிமுடிந்தது, இப்போதுநான்அழைத்தேன், எங்கடாபோச்சுஉன்தன்மானம்என்றுகேட்காதிர்கள்தயவுசெய்து. நாளைக்காவதுபரிசுவேண்டும்எனக்கு. தினமும்பரிசுவேண்டாம்என்றுஇருப்பதுகஷ்டம்மக்களே. நான்சொல்வதுஆண்களுக்குபுரியும்என்றுநம்புகிறேன்.

அவள்குரல்தழுதழுத்தது, என்னோடுபேசும்போதுமட்டும்தான்இப்படியோஎன்றுமனம்எண்ணியது, வேண்டாம்டா, நாளைக்கும்பரிசுபறிபோகும்என்றுஎன்னைஎச்சரித்ததும்அதுவே! என்னமானம்கெட்டமனசுடாஇது?!!. ஒருவார்த்தைக்குஒருவார்த்தைஎன்றுபரிமாறினோம், “அப்பறம்” என்றசொல் பெரும்பாலும்காதலர்களிடம்புழங்கும், வேதனையில்புழுங்கும்என்றுகூடசொல்லலாம், வார்த்தைகள்அழகாகவிளையாடுகிறதுபாருங்கள், தமிழின்சிறப்புஅதுதான், நான்தமிழன்.

ஒருவார்த்தைகள்படிப்படியாகமுன்னேறிசண்டைக்கானகாரணம்தேடுவதில்பெரியவாக்கியங்களாய்   வந்துநின்றது, அய்யோ!, மறுபடியும்முதலில்இருந்தா?!, வேண்டாமே, பரிசுவேண்டும்அல்லவா?!, “மூடுடாவாய” என்றுமனம்கட்டளையிட, இந்தகட்டளைஎனக்குபிடித்திருக்கிறது, எனக்காபிடிக்காமல்போகும்?!!!.

ஆனாலும்சண்டைதீர்ந்தபாடில்லை, என்னசெய்ய? ஒன்றும்செய்யவேண்டாம், அவள்வீடுவந்துவிட்டது, இன்னும்இரண்டுநிமிடத்தில்அழைப்புதுண்டிக்கபடும். துண்டிக்கப்பட்டது, பரிசுநாளைக்குஉண்டா? இல்லையா?, அதுநாளைதான்தெரியும், நம்பிக்கையுடன்காத்திருப்போம்.

 

பழகிவிட்டசண்டைதான், இருந்தாலும்இந்தசண்டையின்காலஅளவுசற்றேபெரிது. காரணம்அப்படி, தன்னிலைதன்னியல்புமாற்றிகாதலிக்கநான்தேவைஇல்லையே?!, இருந்தும்சிறிதளவுமாற்றிதான்ஆகவேண்டும், ஆண்கள்பெரும்பாலும்பெண்களிடம்நடிப்புவாழ்க்கைதான்வாழ்ந்தாகவேண்டும்என்றுநினைக்கிறேன், இந்தநினைப்புஎந்தஅளவுஉண்மைஎன்பதுநான்அறியேன். என்னுடையஅனுபவஅளவில்மட்டுமேஇதைநான்சொல்கிறேன். உண்மையாகவாழ்பவர்கள்மேலும்சிறந்துவாழஎன்வாழ்த்துக்கள்.

 

என்அலுவல்நேரம்முடிந்துகிளம்பினேன், தனிமைஇனிமைதான், கூடவேஒருபெண்வாசத்தோடுநடந்துபழகிவிட்டதால்இந்ததனிமைகொஞ்சம்கொடுமையாகவும்இருந்தது. தனிமையின்எண்ணஅலைகளைஆட்கொண்டுநடந்தேன், அவளோடுநடக்கும்போதுஉணரும்ஒருவிதவெப்பம், பெண்ணுக்கேஉரியது, இப்போதுஇல்லை.

 

கிண்டிரயில்வேமேம்பாலம்கடந்துதான்பேருந்துநிலையம்செல்லவேண்டும். ரயில்வேபடியில்நெருக்கடிமிகுந்திருந்தது, அப்போதுதான்ஒருமின்சாரரயில்பயணிகளைஇறக்கிவிட்டுஅடுத்தநிலையம்நகர்ந்தது, கூட்டத்திற்குநடுவேஅவசரகதியில்ஓடிபடியில்தடுக்கிநிற்கிறார்கள்சிலர், கலைகல்லுரிமாணவர்களின்கும்பல்ஒன்றுபெரும்சத்தத்தோடுஎன்னைகடந்துசென்றது, காதுகளில்விழுந்தசிலகெட்டவார்த்தைகள்எல்லாமேபெண்களைஇழிவுபடுத்தியேஇருந்தது, யார்இப்படிகெட்டவார்த்தைகளைகண்டுபிடித்தார்கள்?!, படுபாவிகள்என்றுஎண்ணியமறுகணம்  இதைகேட்கநான்யார்?, என்றகேள்வியைஎன்மனம்முகத்தில்அறைந்தது.   நானும்அந்தவார்த்தைகளைஉபயோகிப்பேன்கோபம்வரும்சமயங்களில், ஆண்என்றஆதிக்கவர்கத்தில்நானும்அங்கம்தானே?!, என்ன, கொஞ்சம்என் அதிகாரஅளவைநானேகுறைத்துவைத்துகொண்டுள்ளேன், நான்பெற்றுகொண்டுள்ளசமூகஅங்கீகாரம்என்னைஇந்தஅடிப்படையில்அனுமதிக்காது, அவ்வளவுதான். படிகள்முடியும்இடத்தில்எதிரில்வரும்என்னைப்போலவே சமூக அங்கீகாரம் பெற்ற சில ஆண்களும், பெண்களும் பெரும்பாலும்மூக்கைபொத்திகொண்டேவந்தார்கள், அப்படிஒருமூத்திரவாடை, அதன்அருகிலேபிச்சைகாரர்களின்அணிவகுப்புகைகள்பிச்சைபாத்திரம்மட்டுமேபிடித்தபடி. ஒருமனிதன்கண்தெரியாதஒருபிச்சைகாரரிடம்சண்டையிட்டுகொண்டிருந்தான், நான்திரும்பிதிரும்பிபார்த்துகொண்டேதான்வந்தேன், என்கால்கள்அந்தகாட்சியைகடந்தபடிதான்இருந்தது, வெட்கமாகதான்இருக்கிறதுஇப்படிசொல்வதற்கு, நான்கண்டஎல்லாஅவசரகதிமனிதரின்கால்களும்அந்தகாட்சியைகடந்தேவந்தது. இன்னொருகண்தெரியாதபிட்சைக்காரரேவந்துஅவரைகாப்பாற்றிசென்றார். கண்கொண்டமனிதருக்குஇதற்கெல்லாம்நேரம்இல்லை, என்னஒருஅவசரகதிஉலகம்?!, இதில்நானும்ஒருவன்!, இப்படிநான்அவசரம்காட்டுவதுதொலைக்காட்சிபார்க்கவும், செய்திகள்கண்டுஎன்எதிவினைஆற்றவும், மனிதம்குறித்தபுத்தகங்கள்படிக்கவும்தான்.

இந்த 5 நிமிடகுற்றஉணர்வுதேவிஉடனானசண்டைகசப்பைமறக்கசெய்ததுநல்லவிஷயம். பேருந்தில்இடம்இருக்கவேண்டுமேஎன்றுமனம்எண்ணியசமயம்நண்பன்ஒருவன்சொன்னதுநினைவுவந்தது. அவன்சொன்னான்,” பஸ் கூட்டமாஇருந்ததாசூப்பர்மச்சி, பின்னாடிபோய்நின்னுக்கோ, அங்கதான்சொர்க்கம்இருக்குஎன்று”. நான்பெரும்பாலும்டிக்கெட்எடுத்துவிட்டுஓட்டுனர்இருக்கையின்அருகில்சென்றுநின்றுகொள்வேன். இதுநான்நல்லவன்என்பதற்குஅல்ல, பள்ளிபருவத்தில்ஒருபெண்ஒருத்தனைபஸ்லயேசெருப்பில்அடித்ததுஇன்னும்நினைவில்இருக்கிறது. ஆனால்இவ்வளவுதைரியம்படைத்தபெண்கள்பெரும்பாலும்குறைவுதான், ஏன்?இதைவிரும்பும்சில பெண்களையும்நான்பார்த்ததுண்டு.

 

தேவியுடன்பேசும்போதுஉருவானஒருவசனம்நினைவுக்குவருகிறது, “கிச்சடியில்பச்சையாகதெரிவதுபச்சைமிளகாயா? பீன்ஸா? என்றுசாப்பிட்டால்தான்தெரியும்”. இப்படிஎனக்குநிறையவசனங்கள்தேவியுடன்பேசும்போதும், சண்டையிலும்வரும்.

 

பேருந்துவந்தது, கூட்டம்தான், நிச்சயம்குன்றத்தூர்போய்சேரும்வரைஇடம்கிடைக்காது, இதைவிட்டால்அடுத்துவருவதுஇன்னும்கூட்டமாகவேவரும், ஏறினேன். கண்டக்டர்இருக்கையைவிட்டுஎழமுடியாதஅளவுக்குகூட்டம்இருந்தது, இந்தகூட்டத்தைசற்றேமுதியவரானஅந்தகண்டக்டர்விரும்புவார்என்றேதோன்றியது, இல்லையேல்அவர்அங்கும்இங்கும்நடந்துடிக்கெட்கொடுக்கவேண்டியிருக்கும். ஆண்கள்பெண்கள்எனகல்லூரிபட்டாளம்குதூகலமாய்இருந்தார்கள். மாணவர்களின்தகரஇசைகச்சேரிசகிக்கவில்லை, சினிமாபாடல்களின்வரிகளைமட்டும்மாற்றிஒருவன்சத்தமாகபாடிகொண்டேஇருந்தான், ஏதோமூக்கைமூடிக்கொண்டுஆழ்குரலில்இருந்துகேட்கும்சத்தமாய்அந்தபாடியகுரல்இருந்தது. அவர்களின்கல்லூரியைபுகழ்ந்தும், எதிரிகல்லூரியைஇகழ்ந்தும்வரிகள்இருந்தன. பாதிஅளவுக்குபெயர்ந்துஇருந்தபேருந்தின்தகரத்தில்எழுந்தஒலிமண்டையைபிளப்பதுபோலிருந்தது, மக்களின்சகிப்புதன்மையைபேருந்தில்நன்றாகவேஉணரலாம்.

 

பேருந்தில்இருந்தகல்லூரிபெண்களைகவரபாடப்பட்டபாடல்களில்பெண்களைஇழிவுசெய்தேவரிகள்இருந்தது, பெண்களின்மத்தியில்இதற்குஎவ்விதமானஎதிர்வினையும்தெரியவில்லை, மாறாகசிரித்துகொண்டிருந்தார்கள், அவர்களின்சிரிப்புபாடகனைமேலும்குஷிபடுத்தியது, மேலும்பாடல்கள்தோன்றியது. இதைஎல்லாம்விமர்சிக்கஎன்னதகுதிஎனக்குஇருக்ககூடும்?! மாணவ பருவம் கடந்து வந்தவன் தானே நானும்?, என்தகுதிஎன்பதுஎன்ஏக்கம்என்றேநான்கூறுவேன். இதெல்லாம்நான்செய்யவில்லையேஎன்றஏக்கம், நான்கல்லூரிக்குபேருந்துஉபயோகித்ததுகுறைவுதான், மேலும்நான்படித்தகல்லூரிஅப்படி,கல்லூரிநிர்வாகம் மிகவும் கண்டிப்பானது.

 

நந்தம்பாக்கம்நிறுத்தத்தில்பேருந்துஇன்னும்கூட்டம்ஆனது, கூட்டத்தைபாராமல்பெண்களும்ஏறினார்கள், நான்ஆண்களின்வரிசையோரம்ஒருஇடம்பிடித்துநின்றுகொண்டேன், என்னைகடந்துசிலபெண்கள்சென்றார்கள். ஜன்னல்பக்கமாகநான்வேடிக்கைபார்த்துகொண்டும், தேவியைநினைத்துகொண்டும்வந்தேன்.  சண்டைபோட்டநேரங்களில்கிடைக்கும் தனிமைகளில் அவளுடனான என் அந்தரங்க வாழ்க்கைகளை அசை போடுவது ஒரு மகிழ்வை தரும் எனக்கு. என் பார்வை சற்றே பேருந்தின் உட்புறம் சென்றதை ஒரு வித ஈர்ப்பு என்றே உணர்ந்தேன், ஈர்ப்பின் காரணம் கட்சிதமாய் நின்றிருந்த ஒரு பெண், பிங்க் கவரும் நிறம் தான், பிங்க் நிற சுடிதார் உடுத்தியிருந்தாள், மணமாகிய பெண் என்பதை உச்சி நெற்றியில் இருந்த குங்குமம் உணர்த்தியது  இருந்தும் பார்வை விலகவில்லை, விலக்கமுடியவில்லை. என் சுயம் தாண்டிய ஒரு உணர்வில் என் பார்வை தானாகவே அந்த பெண் பக்கம் சென்றது, சுயம் பெற்று பார்வை விலக்கியது ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. சுடிதார் அணிந்திருந்தாள், கைகள் எட்டி பேருந்தின் கம்பிகளை பிடித்திருந்தது.

என் பார்வை இப்படி அடுத்தடுத்து எடுத்த படையெடுப்புகளில் ஒரு ஆணின் உருவம் தடைப்பட்டது, 30 வயதுக்குள் தான் இருக்கும், சுருட்டை முடி, கருப்பான நிறம், பெரிய கட்டங்கள் போட்ட சட்டை, பஜார்’ல் எடுத்த ஒரு வெளுத்த ஜீன்ஸ் பேண்ட், கையில் 10 ரூபாய் காப்பு, மொபைல்போனை கையில் பிடித்துகொண்டு கம்பியை பிடித்தபடி அந்த பெண்ணின் அருகில் நின்றிருந்தான், அவன் பார்வையில் ஒரு ஜாக்கிரதை உணர்வு இருந்தது,யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்பதை உறுதி செய்த படியே நின்றிருந்தான். அந்த பெண்ணின் மார்பை நோக்கியே அவன் பார்வை பாய்ந்தது, அவன் கைகளும் அந்தபெண் பிடித்திருந்த கம்பியை பிடித்திருந்தது, பிரேக் போடும்போது அவளின் கைகள் உரசும்படி அவன் கைகள் இருந்தன, அந்த பெண்ணோ பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பேசிகொண்டே வந்தாள், எதையும் அறியாதவளாக, அல்லது அறிந்தும் அறியாதவளாக.இதையாவும் நான் பார்த்தது சமுகத்தின் அவலம் என்று நினைத்தா இல்லை அவன் இடத்தில் என்னை கற்பனை செய்தா?!, நிச்சயம் எனக்கு தெரியவில்லை!.

அந்த பெண் கோவூர் நிறுத்தத்தில் இறங்கினாள், பேருந்தும் கொஞ்சம் காலியானது, ஜன்னல் வழியே அந்த பெண்ணை பார்க்க அழகாக இருந்தாள், மாலை மங்கிய நேரத்தில் அவளின் சிறிய மூக்குத்தி ஜொலித்தது நட்சத்திரம் போல்.  பேருந்து அவளை கடந்தது, இப்பொழுது பேருந்தில் அந்த அளவிற்கு கூட்டம் இல்லை, எனக்கு இருக்கை கிடைத்தது. அந்த மனிதன் இப்போது படிகளில் நின்று பயணம் செய்தான், நான் அமர்ந்தபடியே அவனை பார்த்து என் பயணம் தொடர்ந்தேன்.

 

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *