நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?

author
3
0 minutes, 6 seconds Read
This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

சாம் ஹாரிஸ்

gaza”ஏன் நீ இஸ்ரேலை விமர்சிப்பதே இல்லை?” இந்தக் கேள்வியே அலுப்புத் தருவது. இஸ்ரேலையும் , மதத்தையும் நான் விமர்சித்தே வந்திருக்கிறேன். ஆனால் மிக வன்மையாக இந்த விமர்சனத்தை முன்வைக்கவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். இப்போது உலகில் இருக்கிற யூதர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் (ஒரு கோடி ஐம்பது லட்சம்.) இதைவிட நூறு மடங்கு முஸ்லீம்கள் இருக்கிறார்கள். நான் யூத மதகுருக்களுடன் விவாதித்திருக்கிறேன். பிரார்த்தனையைச் செவிமடுக்கும் கடவுள் பற்றி நான் விமர்சிக்க முற்பட்ட போது, என்னை நிறுத்தி, “பிரார்த்தனையைக் கேட்கும் கடவுள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று யார் சொன்னார்கள்?” என்பார்கள். கடவுள் கருத்தியலை மிக நெகிழ்ச்சியாய்க் கொண்ட பல யூதர்கள் இருக்கிறார்கள். யூதத் தன்மை மிக முக்கியம் என்று எண்ணும் பல லட்சக்கணக்கான யூதர்கள் நாத்திகர்களாய் இருக்கக் கண்டிருக்கிறேன். யூத மதத்தில் இந்த நெகிழ்ச்சி சாத்தியம். ஆனால் கிருஸ்துவம், இஸ்லாமில் இது சாத்தியம் இல்லை.

மத நூல்களை அடிப்படையாய்க் கொண்ட மூட நம்பிக்கைகளை வைத்துப் பார்த்தால், யூதர்கள் பெரிதும் இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற்றவர்கள் எனலாம். யூத மதத்தைப் பற்றி நான் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளேன். ஹிப்ரு பைபிளின் பகுதியான – லெவிடிகஸ், எக்ஸோடஸ் , டியூட்டிரானமி – போன்றவை மதப் புத்தகங்களிலேயே மிகவும் மோசமான, ஒழுக்கமற்ற பகுதிகள் என்று பதிவு செய்திருக்கிறேன். புதிய ஏற்பாட்டைக் காட்டிலும் அவை மோசமானவை. உண்மை என்னவென்றால், பல யூதர்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். இந்த வாசகங்களை அவர்கள் பெரிதும் மதிப்பதில்லை. பல இஸ்ரேலிகளும், பல யூதர்களும் அவர்களது மதநூல்களை(பைபிளை) வழிகாட்டியாய்க் கொள்வதில்லை – இது ஒரு நல்ல விஷயம்.

சிலர் விதிவிலக்காக இருக்கலாம். யூதர்களிடையேயும் மதத் தீவிரவாதிகள் உண்டு தான். இவர்கள் தீவிர முஸ்லிம்கள் போன்றே ஆபத்தானவர்கள். ஆனால் இவர்கள் வெகு சிலரே.

நான் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை என்பவர்களுக்கு – என் நிலை பாடு சிறிது முரண்பட்ட ஒன்று. சில கேள்விகளுக்கு என்னிடம் தீர்மானமான பதில் இல்லை. நான் எல்லோரையும் விமர்சிப்பதை வழக்கமாய்க் கொண்டவன். எனவே இது பற்றி சற்று உரக்கச் சிந்திக்கலாம்.

இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருக்கக் கூடாது என்று நான் எண்ணுகிறேன். ஒரு மதத்தை அடிப்படையாய்க் கொண்டு ஒரு நாட்டினைக் கட்டமைப்பது ஆபாசமானது, அறிவுபூர்வமானதல்ல, நியாமற்றது என்று நான் கருதுகிறேன். எனவே மத்திய கிழக்கில் யூதத் தாய்நாடு கொண்டாடத் தக்கதல்ல. பைபிளை அடிப்படையாய்க் கொண்டு ஒரு நாட்டை ஸ்தாபிப்பதும் எனக்கு உவப்பல்ல.

இருப்பினும், இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருக்கக்கூடாது என்று இப்போதுதான் சொன்னாலும், அப்படிப்பட்ட ஒரு நாடு ஏன் இருக்கவேண்டும் என்பதற்கான நியாயத்தை காண்பது எளியது. உலகில் பல பகுதிகளில், எடுத்ததெற்கெல்லாம் யூதர்களைக் கொன்றழிப்பது, வழமுறையாய் இருந்திருக்கிறது. ஒரு மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு, குறிப்பிட்ட மதத்தினரைக் காப்பாற்றுவதற்காக அமையலாம் என்று ஒப்புக் கொண்டால் யூத நாட்டிற்குத்தான் அந்த நிச்சயமான தகுதி உண்டு. இந்த காரணம் மிக பலவீனமான ஒன்று என்று இஸ்ரேலின் நண்பர்கள் கருதினால், இதைத் தவிர வலுவான காரணம் எனக்குத் தோன்றவில்லை. மத அடிப்படையிலான நாடு என்பது காலப் போக்கில் தவறான ஒன்று என்பது தான் என் நிலைபாடு. (குறிப்பு : இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்று இஸ்ரேல் மதம் சார்ந்த நாடல்ல. இஸ்ரேல் அமெரிக்காவைக் காட்டிலும் மதச் சார்பு குறைந்த நாடு. அதன் குடிமக்கள் பூரண மத சுதந்திரம் பெற்றவர்கள். இஸ்ரேல் மதத்தை அரசியல் சட்டதிட்டமாய்க் கொண்ட theocracy அல்ல. ஆனாலும் இஸ்ரேலை ஏன் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம் அளித்தால் அமைக்கலாமே என்று கேட்டால் மறுக்கக் கூடியவர்கள் யூதர்கள் என்ற வகையில் மதம் இஸ்ரேலின் உருவாக்கத்தில் எப்படி பங்கு வகிக்கிறது என்று உணர முடியும்.)

இஸ்ரேலை ஒரு யூத தேசமாக தக்க வைத்துக் கொள்ள இஸ்ரேலிகள் மிக மோசமான செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பாலஸ்தீனர்களுடன் அவர்கள் இடும் போர்களில், போராளியல்லாத பல சாமானியர்கள் மரித்துள்ளனர். கடந்த சில வாரங்களில் போராளிகளைக் காட்டிலும் மக்கள் மரணம் நிறையவே. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. காஸா பகுதி மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதி. இந்தப் பகுதியை ஆக்கிரமிப்பதும் இதில் போர் புரிவதும் சாமானிய மக்களின் மரணத்தில் தான் முடியும். இஸ்ரேல் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளது என்பதும் கேள்விக்கு இடமில்லாத உண்மை. அவர்கள் கொடூரமானவர்கல் ஆகியிருக்கிறார்கள் தான். இதன் முதன்மையான காரணம் அவர்களின் எதிரிகளின் குணாம்சம் தான். (குறிப்பு : இஸ்ரேலின் போர்க்குற்றம் சரிதான் என்பதல்ல நான் சொல்வது. மிக அடர்த்தியான ஜனத்தொகை கொண்ட பகுதியில், பயங்கரவாதத்தின் நிழலில் தொடர்ந்து இஸ்ரேல் வாழ வேண்டிய கட்டாயம் என்ற யதார்த்தம் தான் நான் சொல்ல வருவது. )

இஸ்ரேல் என்னதான் மோசமான முறையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக போர் புரிந்தாலும், அமெரிக்க, ஐரோப்பியர்கள் போரில் செய்த அட்டூழியங்களுடன் ஒப்பிடும்போது, கட்டுப்பாடு கொண்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிடும் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது விட மிக அதிகமான கவனத்தை இஸ்ரேலின் ஒவ்வொரு செயலும் உலகு முழுக்க பெற்று வந்திருக்கிறது. இஸ்ரேலிகள் என்று வரும்போது அவர்களுக்கு எதிரான விமர்சனம் வேறு பல பரிமாணங்களைக் கொண்டதாகிறது. (குறிப்பு : இஸ்ரேல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பதல்ல என் வாதம்.போர்க் குற்றங்கள் போர்க்குற்றங்களே.)

பலவருடங்களாக ஊடகப்போரில் இஸ்ரேல் தோற்றுகொண்டிருக்கிறது என்பது தெளிவான விஷயம். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தற்போதைய காஸா போரில் பாலஸ்தீன பக்கத்தில் சமநிலையின்றி அதிகமான உயிரிழப்பு மிகவும் அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது. இது நியாயமானதாக தோன்றவில்லை. இஸ்ரேல் தன் குடிமக்களை காப்பாற்ற குண்டுவெடிப்பில் பாதுகாப்பாக இருக்க மறைவிடங்களை கட்டுகிறது. பாலஸ்தீனர்கள் சுரங்கங்களை கட்டி அதன் மூலம் பயங்கரவாத செயல்களை செய்கிறார்கள், இஸ்ரேலியர்களை கடத்துகிறார்கள். இஸ்ரேல் தனது குடிமக்களை வெற்றிகரமாக பாதுகாப்பதற்காக அது குற்றம் சாட்டப்பட வேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை. (குறிப்பு: பாலஸ்தீன பக்கத்தில் போரிடாதவர்கள் கொல்லப்படுவது துயரமானது என்பதைத்தவிர நான் வேறொதும் சொல்லவில்லை. ஆனால், ஹமாஸுக்கு எதிராக பதிலடி கொடுப்பது என்பது அப்பாவிகளை கொல்லத்தான் செய்கிறது. இஸ்ரேலியர்கள் தங்களது குடிமக்களை காத்துகொள்வதும், அதே நேரத்தில் பாலஸ்தீன பக்கத்தில் அப்பாவி உயிரிழப்பும் அதிகமாகவே பாரபட்சமாக இருக்கத்தான் செய்யும்)

காஸாவிலிருந்து வரும் படங்கள் – முக்கியமாக குழந்தைகள் குண்டுகளில் சாவது – தீமையின் உச்சம் தான். இந்தச் செயல்களுக்காக இஸ்ரேலை ஆதரிக்க முடியாது. பாலஸ்தீனர்கள் இந்த ஆக்கிரமிப்பினால் பெரிதும் துயருற்றிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தப் படங்களில்தான் இஸ்ரேலை விமர்சிப்பவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அவலங்களுக்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என்பது சரியல்ல. இந்தப் போராட்டத்தின் இருபுறமும் உள்ளவர்களின் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்க தவறி விடுகிறார்கள். (குறிப்பு – குழந்தைகளின் மீதான தாக்குதல் மன்னிக்கத்தக்கதல்ல. பாலஸ்தீனர்கள் படும் துயரத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இஸ்ரேலை மட்டுமே இதற்கு காரணம் என்று சொல்வது சரியல்ல .)

இந்த நிலைக்கு இஸ்ரேலுக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையே ஒரு ஒழுக்க நெறி சார்ந்த வித்தியாசம் இருக்கிறது. இந்த வெளிப்படையான, மறுக்க முடியாத வேறுபாடு உண்மையானது. இஸ்ரேலியர்களைக் கொன்று அழிக்கத் துடிக்கும் இனப் படுகொலை நோக்கங்கள் கொண்டவர்கள் இஸ்ரேலைச் சூழ்ந்து இருக்கிறார்கள். ஹமாஸ் அறிக்கை இனப் படுகொலையை மறைவேயில்லாமல் வெளிப்படையாக தன் நோக்கமாக அறிவிக்கிறது. குரானின் வாசகங்களை பதிவு செய்கிறது. யூதனின் ரத்த தாகத்தில் பூமியே அலறுமாம். “கல்லும் பேசும் : என் பின்னால் ஒரு யூதன் மறைந்துள்ளான். முஸ்லிமே, வந்து அவனைக் கொள்வாயாக”. இது ஒரு அரசியல் அறிக்கை. இந்த ஹமாஸைத் தான் பெருவாரி மக்கள் வாக்களித்து அதிகாரம் அளித்திருக்கிறார்கள். ( குறிப்பு : ஆமாம் , எல்லா பாலஸ்தீனரும் ஹமாஸை ஆதரிக்க வில்லை. ஆனால் ஹமாஸ் ஒரு விளிம்பு நிலை குழுவல்ல.)

யூதர்களைப் பற்றி முஸ்லிம் உலகில் நடைபெறும் உரையாடல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை. யூதப் படுகொலைகள் ஹிட்லரால் நிகழ்த்தப் படவில்லை என்று வாதிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, வாய்ப்புக் கிடைத்தால் படுகொலைகளை நாமே நிறைவேற்றுவோம் என்று அறிவிக்கிறார்கள்.யூத இனப் படுகொலைகளை மறுப்பதை விட அருவருப்பானது, அது நடந்திருக்க வேண்டும் என்று விரும்புவதும், வாய்ப்புக் கிடைத்தால் முன்னின்று இனப்படுகொலைகளை நிகழ்த்துவோம் என்று பறை சாற்றுவதும் தான். யூதப் படுகொலைகளுக்கு ஐந்து வயது சிறுவர்களைத் தயார் செய்யும் குழந்தை நிகழ்ச்சிகள் பாலஸ்தீனப் பகுதிகளில் காட்டப் படுகின்றன.

இஸ்ரேலுக்கும் அதன் எதிரிகளுக்கும் உள்ள அடிப்படையான ஒழுக்க நெறி சார்ந்த வறுபாடு இது தான். இப்போது நம் முன் எழும் கேள்வி – வாய்ப்புக் கிடைத்தால், ஆற்றல் இருந்தால் யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தான். யார் பக்கம் நாம் நிற்பது என்பதை அதுதான் நிர்ணயிக்கும்.

யூதர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்றால், அவர்கள் என்ன செய்வார்கள்? ம்ம்.. நமக்கு அந்த கேள்விக்கு பதில் தெரியும். ஏனெனில் அவர்கள் என்ன விரும்பினாலும் அவர்கள் செய்யலாம். காஸாவில் உள்ள அனைவரையும் இஸ்ரேலிய ராணுவம் கொல்ல வேண்டுமென்றால் கொல்லலாம். அதற்கு என்ன பொருள்? அதற்கு என்ன பொருள் என்றால், சென்றவாரம் நடந்தது போல, பாலஸ்தீன கடற்கரையில் ஒரு குண்டை போட்டு நான்கு பாலஸ்தீன குழந்தைகளை கொன்றால், அது நிச்சயமாக ஒரு விபத்துதான். அவர்கள் குழந்தைகளை குறி வைக்கவில்லை. ஆனால், அவர்கள் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் குறி வைக்கலாம். ஒவ்வொரு பாலஸ்தீன குழந்தை இறக்கும்போதும், இன்னும் கொஞ்சம் ஒதுக்கப்பட்ட தேசமாக இஸ்ரேல் கருதப்படும். ஆகவே குழந்தைகளையும், போரில் ஈடுபடாதவர்களையும் குறிவைக்கக்கூடாது என்று இஸ்ரேல் கடும் முயற்சியை எடுத்துகொள்கிறது. (இந்த வரியில் ”ஆகவே” என்ற வார்த்தை, வருந்தத்தக்கது, தவறான கருத்துக்கு இட்டுச்செல்லக்கூடியது. இஸ்ரேல் குழந்தைகளை தாக்காததற்கு உலகத்தில் தன்னைப்பற்றிய எண்ணத்தை கெடுத்துகொள்ளக்கூடாது என்பதுதான் ஒரே (அல்லது மிக முக்கியமான) காரணம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனாலும், என்னதான் கேவலமான தூண்டுதல்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்தாலும், உண்மையிலேயே பாலஸ்தீன குழந்தைகளை கொல்லக்க்கூடாது என்பது இஸ்ரேலின் சுயநலனுக்கு முக்கியமானது)

அதே போல, சில வேளைகளை இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மன அழுத்ததின் காரணமாக கற்களை எறியும் குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு நடத்த வாய்ப்புள்ளதா? நிச்சயம். போரின் நடுவே இப்படி நடந்துகொள்பவர்களை எப்போதும் பார்க்கலாம். ஆனால், நாம் அனைவருக்கும் தெரியும், அது இஸ்ரேலின் முக்கியமான நோக்கம் அல்ல என்பது. இஸ்ரேலியர்கள் போரில் ஈடுபடாதவர்களை கொல்ல விரும்பவில்லை என்று அறியலாம். ஏனெனில், அவர்கள் விரும்பும் அளவுக்கு கொல்லலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.

நமக்கு பாலஸ்தீனர்களை பற்றி என்ன தெரியும்? இந்த ராணுவ சக்தி தலைகீழாக இருந்தால், பாலஸ்தீனர்கள், இஸ்ரேலில் இருக்கும் யூதர்களை என்ன செய்வார்கள்? பாலஸ்தீனர்கள் என்ன செய்வார்கள் என்பதை அவர்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். ஹமாஸ் போன்ற குழுக்கள் தாம் என்ன மோசமாக செய்வோம் என்று அவர்களே சொல்வதைக்கூட இஸ்ரேலை விமர்சிப்பவர்கள் நம்ப விரும்பவில்லை. நாம் ஏற்கெனவே ஒரு ஹோலோகாஸ்ட் (holocaust) என்னும் இன ஒழிப்பையும் இன்னும் பல இனப்படுகொலைகளையும் 20ஆம் நூற்றாண்டில் பார்த்துவிட்டோம். மக்களுக்கு இனப்படுகொலை செய்யக்கூடிய திறம் இருக்கிறது. அவர்கள் தாம் இனப்படுகொலை செய்வோம் என்று சொன்னால், அதனை நாம் காதுகொடுத்து கேட்கவேண்டும். பாலஸ்தீனர்களால் முடியுமென்றால், இஸ்ரேலில் இருக்கும் ஒவ்வொரு யூதர்களையும் கொல்வார்கள் என்று நாம் நம்ப காரணம் இருக்கிறது. ஒவ்வொரு பாலஸ்தீனரும் அந்த இனப்படுகொலையை ஆதரிப்பாரா? நிச்சயம் இல்லை. ஆனால், ஏராளமான பாலஸ்தீனர்களும், உலகத்தில் பரந்து வாழும் முஸ்லீம்களும் நிச்சயம் செய்வார்கள். சொல்ல தேவையின்றி, பாலஸ்தீனர்கள் பொதுவாகவும், ஹமாஸ் மட்டுமின்றி, பாலஸ்தீனர்கள் பொதுவாகவே மிகவும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் போரில் ஈடுபடாதவர்களை கொல்வதை வரலாறாகவே வைத்திருக்கிறார்கள். பஸ்களிலும், உணவு விடுதிகளிலும் தங்களை தாங்களே தற்கொலை செய்துகொண்டு வெடித்து பொதுமக்களை கொலை செய்திருக்கிறார்கள். இளம் சிறார்களை வன்படுகொலை செய்திருக்கிறார்கள். ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை கொன்றிருக்கிறார்கள். இப்போதும், பொதுமக்கள் வாழும் இடங்களுக்கு எந்த விதமான பாகுபாடும் இன்றி ராக்கெட்டுகளை சுடுகிறார்கள். திரும்பவும், காஸா அரசாங்கமே தனது கொள்கையாக, இஸ்ரேலிய யூதர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த யூதர்களையும் கொல்வதை தன் அரசாங்க கொள்கையாக அறிவித்திருக்கிறது. (குறிப்பு: மேலும், எல்லா பாலஸ்தீனரும் ஹமாஸை ஆதரிக்கவில்லை என்று அறிவேன். எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பும், அதனால் இதர இழப்புகளும், பாலஸ்தீன கோபத்தை எண்ணெய் ஊற்றி வளர்த்திருக்கிறது என்பதையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், பாலஸ்தீன பயங்கரவாதம் (கூடவே முஸ்லீம்களின் யூத எதிர்ப்பு கொள்கையும்) இருதரப்பும் இணைந்து வாழ்வதை சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கிறது)

இஸ்ரேலுக்கும் அதன் எதிரிகளுக்குமான ஒழுக்க தாரதம்மியத்தை அறியவேண்டுமென்றால், மனிதகேடயங்களை பற்றி அறிந்தால் போதுமானது. யார் மனித கேடயங்களை பயன்படுத்துவது? ஹமாஸ் நிச்சயம் செய்கிறது. ஹமாஸ் தனது ராக்கெட்டுகளை மக்கள் குடியிருப்பு இடங்களிலிருந்தும், பள்ளிகளுக்கு பின்னாலிருந்தும், மசூதிகளுக்கு பின்னாலிருந்தும் அனுப்புகிறது. சமீபத்தில் ஈராக், மற்றும் இடங்களிலும், முஸ்லீம்கள் மனித கேடயங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தங்களது சொந்த குழந்தைகளின் தோளில் தங்களது துப்பாக்கிகளை வைத்து, அவர்களின் உடல்களுக்கு பின்னாலிருந்து சுடுகிறார்கள்.

மனித கேடயங்களை பயன்படுத்துவதற்கும், அதனால் தடுக்கப்படுவதற்குமான ஒழுக்க வித்தியாசத்தை கவனியுங்கள். அந்த வித்தியாசமே நாம் பேசுவது. இஸ்ராலியர்களும், மற்ற மேற்கத்திய அரசுகளும், முஸ்லீம்கள் மனித கேடயங்களை பயன்படுத்துவதால், தடுக்கப்படுகிறார்கள், ஆனால் முழுமையாக அல்ல. போரிடாதவர்களை கொல்வது, உங்களால் தடுக்கமுடியுமென்றால், ஒழுக்கரீதியில் தவிர்க்கப்படவேண்டிய மோசமான விஷயம். உங்களது குழந்தைகளின் உடல்களுக்கு நடுவே இருந்து எதிரியை சுடுவது நிச்சயமாக ஒழுக்கரீதியில் மோசமான பழக்கம். இந்த பழக்கம் எந்த அளவுக்கு அசிங்கமான விஷயம் என்பதை சற்று நேரம் சிந்தியுங்கள். எவ்வளவு cynical ஆன விசயம் என்று புரிந்துகொள்ளுங்கள். எந்த காபிர்களை முஸ்லீம்களின் மதம் கடுமையாக நிந்திக்கிறதோ, அதே காபிர்கள், போரிடாத முஸ்லீம்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினால் தடுக்கப்படுவார்கள் என்ற அறிவுடனேயே இந்த முஸ்லீம்கள் மனித கேடயங்களை பயன்படுத்துகிறார்கள். யூதர்களை குரங்களிடமிருந்தும், பன்றிகளிடமிருந்தும் தோன்றியவர்களாக கருதுகிறார்கள். இருந்தும், அதே யூதர்கள் போரிடாத முஸ்லீம்களை கொல்லமாட்டார்கள் என்ற உண்மையை உபயோகப்படுத்திகொள்கிறார்கள். (இங்கே முஸ்லீம்கள் என்பது முஸ்லீம் போராளிகளை குறிப்பிடுகிறது. ஜிகாதிகள் என்றால் மிகவும் குறுகிய அர்த்தமுள்ள சொல்லாக மாறிவிட்டது. ஆனால், நான் எல்லா முஸ்லீம்களும் மனிதகேடயங்களை உபயோகப்படுத்துகிறார்கள் என்றோ, அல்லது யூத எதிர்ப்பாளர்கள் என்றோ, மேற்குடன் போர் புரிபவர்கள் என்றோ பொருள் கொள்ளவில்லை)

இப்போது, இடங்களை தலைகீழாக்கி கற்பனை செய்யுங்கள். இஸ்ரேலியர்கள் மனித கேடயங்களை உபயோகப்படுத்தி பாலஸ்தீனர்களை தடுக்க முயல்வது எவ்வளவு நகைப்புக்குறியதாக இருக்கும்! சிலர் ஏற்கெனவே யூதர்கள் அதனை செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்ரேலிய போர்வீரர்கள், பாலஸ்தீன பொதுமக்களை தங்கள் முன் கேடயமாக பயன்படுத்திக்கொண்டு ஆபத்தான இடங்களுக்குள் நுழைவதை பற்றிய அறிக்கைகள் இருக்கின்றன. நாம் பேசுவது அப்படிப்பட்ட மனித கேடயங்களை அல்ல. அது தவறான அதிர்ச்சியுண்டாக்கக்கூடிய விஷயம் என்பது சந்தேகத்துகிடமில்லாதது. ஆனால், இஸ்ரேலியர்கள் தங்களது சொந்த மனைவி மக்களை தங்களது கேடயங்களாக உபயோகப்படுத்திகொண்டு பாலஸ்தீனர்களிடமிருந்து காப்பாற்றிகொள்வதை கற்பனை செய்துபாருங்கள். நிச்சயமாக அது நகைப்புக்கிடமானது. பாலஸ்தீனர்கள் எல்லோரையும் கொல்ல முயல்கிறார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது அவர்களது திட்டத்தின் பகுதி. இங்கே இடங்களை தலைகீழாக்கி சிந்திப்பது விகாரமான நகைச்சுவை காட்சியாகத்தான் இருக்கும்.

மத்திய கிழக்கில் நடக்கும் போரை பற்றி பேசவந்தால், இந்த வித்தியாசத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த முரண்பாட்டை விட வேறெந்த இடத்தில் இருக்கும் ஒழுக்க முரண்பாடும் இதனை விட அதிர்ச்சி தரத்தக்கதாகவோ, தீவிர விளைவு உள்ளதாகவோ இருக்காது.

உண்மை என்னவென்றால், இதுதான் ஜிகாதிகள் செய்யும் மிக மோசமான விஷயம் என்றும் இல்லை. மற்ற ஜிகாதி குழுக்களை ஒப்பிடும்போது, ஹமாஸ் நடைமுறையில் மிகவும் moderate அமைப்பு. சிறு குழந்தைகளின் கூட்டத்தின் நடுவே தங்களை வெடித்துகொண்டு பல குழந்தைகளை கொல்லும் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அதுவும் முஸ்லீம் குழந்தைகள். அதுவும் அந்த குழந்தைகளுக்கு மிட்டாய் தருகின்ற ஒரு அமெரிக்க போர்வீரரை கொல்வதற்காக முஸ்லீம் குழந்தைகளையும் கொல்ல தயங்காத ஜிகாதிகள். தற்கொலை குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது, காயம்பட்டவர்களையும், அப்படி காயம்பட்டவர்களை காப்பாற்ற முனைகிற டாக்டர்களையும் நர்ஸ்களையும் சேர்த்து கொல்ல மருத்துவமனைக்கே அனுப்பப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும், இஸ்ரேலி ராக்கெட் குறி தவறி செல்வதையும், இஸ்ரேலிய போர்வீரர்கள் அப்பாவி இளைஞரை அடித்து நொறுக்குவதையும் படிக்கும்போதே, ஐ.எஸ்.ஐ.எஸ் ISIS என்ற அமைப்பு ஈராக்கில் சாலையோரங்களில் முஸ்லீம் கிறிஸ்துவ அப்பாவி பொதுமக்களை சிலுவையில் அறைவதையும் படித்திருப்பீர்கள். இடதுசாரிகளிடமிருந்தும், முஸ்லீம் உலகத்திடமிருந்தும் இதற்கான அறச்சீற்றம் எங்கே? 10000க்கும் 100000கும் மேலான கூட்டங்களில் ISISக்கு எதிரான போராட்டங்கள் ஐரோப்பிய தலைநகரங்களில் எங்கே? விபத்தான நிகழ்வில், ஒரு டஜன் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டால், முழு முஸ்லீம் உலகமும் கொந்தளித்து எழுகிறது. ஒரு குரானை எரித்தாலோ, அல்லது ஒரு நாவல் மறைமுகமாகவோ பொத்தாம்பொதுவாகவோ அவர்களது மதத்தை விமர்சித்துவிட்டாலோ, சொல்லவே வேண்டாம். இருப்பினும் முஸ்லீம்கள் தங்களது சமூகங்களை அழித்துகொள்ளலாம். மேற்குலகையும் அழிக்க விழையலாம். அதற்காக ஒரு சத்தமும் வராது. (பல முஸ்லீம்கள் ISIS போன்ற குழுக்களை விமர்சிப்பதை அறிவேன். ஆனால், என்னுடைய கேள்வி, இப்படிப்பட்ட உலகளாவிய ஜிகாதிஸத்துக்கு எதிராக எங்கே பிரம்மாண்டமான போராட்டங்கள் என்பதுதான். இந்த அமைப்புகள், மற்றவர்களை விட முஸ்லீம்களையே முதன்மையாக தாக்கினாலும், டானிஷ் கார்ட்டூன்களுக்கு எதிராக நடந்தது போன்ற போராட்டங்கள் எங்கே?)

ஆகவே, எனக்கு தோன்றுவது என்னவென்றால், நீங்கள் இஸ்ரேலின் பக்கமே இருக்கவேண்டும். ஒரு பக்கத்தில் தனது நோக்கங்களை அமைதி வழியில் ஸ்தாபித்துகொள்ள விழைந்து, தன் அருகாமை நாடுகளுடன் சமாதானமாக போக விரும்புகிறது. மற்றொரு பக்கமோ, ஏழாம் நூற்றாண்டு மத வெறி ஆட்சியை இஸ்ரேலில் உருவாக்க விழைகிறது. இந்த இரண்டு முரண்பட்ட கருத்துகளுக்கும் இடையே, அமைதியை காணவியலாது. அதன் பொருள், இஸ்ரேலிகளின் பக்கமிருந்து நடக்கும் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை கண்டிக்க முடியாது என்று அர்த்தமல்ல. அதே போல, இஸ்ரேலுக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையே இருக்கும் ஒழுக்க தாரதம்மியத்தை அங்கீகரிப்பது என்பது மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இருப்புக்கு எந்த ஒரு விடையையும் நமக்கு தரப்போவதில்லை. (குறிப்பு: இஸ்ரேலின் செயல்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று சொல்லவில்லை. அவர்கள் சமீபத்தில் காஸாவுக்குள்ளே சென்றது நியாயப்படுத்தக்கூடியது என்று கூட சொல்லவில்லை. பாலஸ்தீனர்கள் நாடற்றவர்களாக இருப்பதை அப்படியே வைத்துகொள்ளவேண்டும் என்றும் சொல்லவில்லை. அவர்கள் விவாதத்துக்குரிய இடங்களுக்குள் யூதர்களுக்கு வீடுகளை கட்டுவதையும் ஆதரிக்கவில்லை. இந்த போரில் யூதர்கள் சண்டைக்கு போகவில்லை என்பதைத்தான் சொல்லுகிறேன். சொல்லப்போனால், அவர்கள் மீது திணிக்கப்பட்ட சண்டையை எதிர்கொள்கிறார்கள். அதுவும் அதற்காக மிகுந்த விலை கொடுத்து)

தங்களது மதவெறியினிலும், அதன் தீர்க்கதரிசனங்களிலும் பல யூதர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். சிலர் விவாதத்துக்குரிய நிலங்களில் மெஸியாவுக்காக காத்திருக்கிறார்கள். கடவுளின் பெருமைக்காக இவர்கள் தங்களது சொந்த குழந்தைகளின் ரத்தத்தை தியாகம் செய்யவும் துணிந்திருக்கிறார்கள். ஆனால், பல வகையில், இவர்கள் இன்றைய யூத மதத்தையோ, அல்லது இஸ்ரேலிய அரசின் செயல்களுக்கோ, பிரதிநிதிகள் அல்ல. இஸ்ரேல் தனது மத பைத்தியங்களை எப்படி நேர்கொள்கிறது என்பதை வைத்துத்தான் அவர்கள் உண்மையிலேயே ஒழுக்க மதிப்பீடுகளில் உயர் நிலையில் இருக்கிறார்களா என்பதும் நிர்ணயிக்கப்படும். அவர்களது பலமிழக்க வைக்க இஸ்ரேல் இன்னும் நிறைய வேலைகளை செய்யவேண்டும். மிக பழமைவாத யூத கும்பல்களின் பிரமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடாது. விவாதத்துக்குரிய இடங்களில் வீடுகளை கட்டுவதை நிறுத்த வேண்டும். (குறிப்பு: இவ்வாறு விவாதத்துக்குரிய இடங்களி வீடுகளை கட்டுபவர்க எல்லோருமே பழைமைவாதிகள் அல்ல)

இந்த நிலத்தின் மீதான பொருந்திவராத மத பற்றே யூதர்களும் முஸ்லீம்களும் பகுத்தறிவுள்ள மனிதர்களாக ஒப்பந்தம் செய்யமுடியாமல் தடுக்கின்றது. இந்த மதப்பற்றே அவர்கள் அமைதியாக வாழமுடியாமல் செய்கிறது. இருப்பினும், முஸ்லீம்கள் பக்கமே அதிக குற்றம் இருக்கிறது. இஸ்ரேலிகள் தங்களது மோசமான நாளிலும் கூட, எந்த ஒரு முஸ்லீம் போராளியைவிட கருணையுடனும், சுயபரிசோதனையுடனுமே இருக்கிறார்கள்.

இந்த குழுக்கள் என்ன கோருகிறார்கள் என்று நாம் திரும்பவும் கேட்கவேண்டும். அவர்களால் சாதிக்கமுடியுமென்றால் எதனை சாதிப்பார்கள்? இஸ்ரேலியர்கள் முயன்றதெல்லாம் கிடைக்குமென்றால், எதற்கு முயல்வார்கள்? தங்கள் அருகாமை நாடுகளுடன் அமைதியாக வாழ்வார்கள், அந்த அருகாமை நாடுகள் இவர்களுடம் அமைதியாக வாழுமென்றால். தங்களுடைய உயர் தொழில்நுட்பத்தில் இன்னும் சிறந்து விளங்குவார்கள். (சிலர் இன்னும் நிறைய பாலஸ்தீன இடங்களை திருடுவார்கள் என்று விவாதிக்கலாம். யூத தீவிரவாதத்தை (நான் அதனை எதிர்க்கிறேன்) தவிர்த்தால், இஸ்ரேல் தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிப்பது அதன் பாதுகாப்புக்கு தேவையற்றது. பாலஸ்தீன பயங்கரவாதமோ அல்லது முஸ்லீம்களின் யூத வெறுப்போ இல்லையென்றால், நாம் ஒரு தேசத்தையே பார்க்கலாம். அதில் இப்படி வீடுகள் கட்டுவது பயனற்றதாகவும் ஆகும்)

ISIS அல்லது அல்குவேதா, அல்லது ஹமாஸ் ஆகிய குழுக்கள் விரும்புவதென்ன? அவர்கள் தங்களது மத நம்பிக்கைகளை மனித குலத்தின் மீதே திணிக்க விரும்புகிறார்கள். பண்பட்ட, படித்த, மத நம்பிக்கையற்ற மக்கள் விரும்பக்கூடிய ஒவ்வொரு சுதந்திரத்தையும் நசுக்க விரும்புகிறார்கள். இது மிகச்சிறிய வித்தியாசம் அல்ல. இருப்பினும், இஸ்ரேல் மீதான விமர்சனத்தை பார்க்கும்போது, வித்தியாசம் எதிர்திசையில் இருப்பது போன்று தோன்றுகிறது.

இப்படிப்பட்ட குழப்பம் நம் எல்லோரையும் மிகுந்த ஆபத்தில் தள்ளுகிறது. இதுவே நம் காலத்தின் மிகப்பெரிய கதை. தாங்கள் ஒரு பன்மைத்தன்மை கொண்ட, மதம் பின்னுக்கு தள்ளப்பட்ட ஒரு சமூகத்தில் அமைதியுடன் வாழ விரும்பாததாலும், சுவனத்துக்கு செல்ல விரும்புவதாலும், அதற்காக மனித சந்தோஷத்தை அழிக்க கிஞ்சித்தும் கலங்காத மனிதர்களை, மீதமான நம் வாழ்நாளிலும், நமது குழந்தைகளின் வாழ்நாளிலும் எதிர்கொள்ளப்போகிறோம். உண்மையென்னவென்றால், நாம் அனைவருமே இஸ்ரேலில் வாழ்கிறோம். நம்மில் பலர் அதனை இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை.

http://www.samharris.org/blog/item/why-dont-i-criticize-israel
குறிப்பு: சாம் ஹாரிஸ் ஒரு பாட்காஸ்டாக இதைப்பேசினார். அதைத்தொடர்ந்து பல கேள்விகள் அவரது கருத்தின் மீது கேட்கப்பட்டன, அவற்றிற்கு பதில் சொல்லும் முகமாக பாட்காஸ்ட் ட்ரான்ஸ்கிரிப்ட் மற்றும் அடைப்புக்குறிக்குள் அந்த இடத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் என்கிற வகையில் இந்தக்கட்டுரையை எழுதி வெளியிட்டார். அவையே குறிப்பு என்று அடைப்புக்குறிக்குள் வருகின்றன.

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஷாலி says:

    Why Sam Harris Won’t Criticize Israel.”என்ற தலைப்பில் Mr.Andrew Sullivan எழுதிய மறுப்பு.
    //இந்த குழுக்கள் என்ன கோருகிறார்கள் என்று நாம் திரும்பவும் கேட்கவேண்டும். அவர்களால் சாதிக்கமுடியுமென்றால் எதனை சாதிப்பார்கள்? இஸ்ரேலியர்கள் முயன்றதெல்லாம் கிடைக்குமென்றால், எதற்கு முயல்வார்கள்? தங்கள் அருகாமை நாடுகளுடன் அமைதியாக வாழ்வார்கள், அந்த அருகாமை நாடுகள் இவர்களுடம் அமைதியாக வாழுமென்றால். தங்களுடைய உயர் தொழில்நுட்பத்தில் இன்னும் சிறந்து விளங்குவார்கள். (சிலர் இன்னும் நிறைய பாலஸ்தீன இடங்களை திருடுவார்கள் என்று விவாதிக்கலாம். யூத தீவிரவாதத்தை (நான் அதனை எதிர்க்கிறேன்) தவிர்த்தால், இஸ்ரேல் தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிப்பது அதன் பாதுகாப்புக்கு தேவையற்றது. பாலஸ்தீன பயங்கரவாதமோ அல்லது முஸ்லீம்களின் யூத வெறுப்போ இல்லையென்றால், நாம் ஒரு தேசத்தையே பார்க்கலாம். அதில் இப்படி வீடுகள் கட்டுவது பயனற்றதாகவும் ஆகும்).//

    This is delusional. It’s not just Palestinian terrorism and Muslim anti-Semitism that makes a one-state solution moot; it is embedded in the very meaning of Zionism. If Israel requires a Jewish majority to survive as a Jewish state, a one-state solution is anathema to it. And if all Israel wanted to do was have its tech sector thrive within (roughly) the 1967 borders, and embrace serious, US-backed security arrangements vis-a-vis Jordan, I’d be backing it to the hilt.
    Instead, as Palestinian terrorism from the West Bank has declined drastically – the Israelis have intensified their theft of Palestinian land. Those settlements deeply hurt, rather than help, Israel’s security – because they alienate most of her allies, exacerbate bitterness and suspicion, and make the possibility of a two-state solution moot. You could secure the West Bank by military outposts if you wanted. But Israel is committed to engineering the demography of the place by settlements of religious fanatics of the sort Sam would usually excoriate. Netanyahu, we now know, would rather release hundreds of prisoners convicted of murdering Jews than remove a single brick from the West Bank settlements. It’s really not about security at all. It’s about race and religion in their ugliest zero-sum manifestations. Just because it isn’t as bad as Hamas doesn’t excuse it.
    “Why Sam Harris Won’t Criticize Israel.”
    //dish.andrewsullivan.com/2014/07/31/why-sam-harris-wont-criticize-israel/

  2. Avatar
    ஷாலி says:

    Why Don’t I Criticize Israel? “நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?” என்ற சாம் ஹாரிஸ் அவர்கள் கட்டுரைக்கு, Why Sam Harris wont criticize Israel? என்ற மறுப்புக்கட்டுரையை Mr.Andrew Sullivan என்பவர் தனது தளத்தில் dish.andrewsullivan.com/2014/07/31/why-sam-harris-wont-criticize-israel/ பதில் கொடுத்துள்ளார்.
    இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் மூலம் பாலஸ்தீன்-இஸ்ரேல் பிரச்சினை குறித்து வாசகர்கள் நடுநிலையோடு ஒரு முடிவுக்கு வரலாம்.

    .samharris.org/blog/item/making-sense-of-gaza.

    இருவரது உரையாடலைக் படித்தால் போதும் எனது பின்னூட்டம் இனி எதுவும் தேவையில்லை.

  3. Avatar
    Manjula Navaneethan says:

    ஷாலி ஆண்ட்ரூ சல்லிவனைப் பற்றி குறிப்பிட்டதற்காக நன்றி. ஆண்ட்ரூ சல்லிவனை ஷாலி முழுதும் படித்தாரா என்று தெரியவில்லை. சாம் ஹாரிஸ் குறிப்பிட்ட எல்லா விஷயங்களையும் சல்லிவன் ஒப்புக் கொள்கிறார். ஹமாஸ் எந்த அளவு கொடூரமான அமைப்பு என்பதும், இஸ்ரேல் மற்ற அரசாங்கங்களை ஒப்பிடும் போது போர்க் காலத்தில் கவனமாக செயல் படுகிறது என்பது பற்றியும் சாம் ஹாரிஸுடன் அவர் ஒத்துப் போகிறார். இஸ்ரேல் மற்ற மதத்தினரை நன்முறையில் நடத்துவது பற்றியும் சொல்கிறார். வாய்ப்புக் கிடைத்தால் ஹமாஸ் எந்த ஒரு யூதரையும் கொன்றழிக்கும் என்பதையும் ஒப்புக் கொள்கிறார். ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம் இது என்பதையும் அவர் சொல்கிறார். இதையெல்லாம் ஷாலியும் ஒப்புக் கொள்கிறார் என்பது ஆறுதல் அளிக்கிறது. முழுக்க முழுக்க இஸ்லாமியப் பிரசாரத்திற்கு அவர் அடிமை ஆகிவிடவில்லை என்பது குறித்து மகிழ்ச்சி.

    Still, Sam is unquestionably right about the theocratic extremism and despicable anti-Semitism of Hamas and its allies. It is much more extreme and central to Hamas than theocracy and anti-Arab racism is to Israel. He’s right that Hamas’ preference for building underground tunnels for war rather than underground bomb shelters for civilians makes them complicit (though far from solely responsible) in the horrifying carnage of the last few weeks. He’s also right about the difference between what Israelis would do if they had all the power and what Hamas would do in the same boat. Israel, with overwhelming power, gives many Arab citizens political rights even as it has penned a huge number into segregated bantustans, curtailed their travel, blockaded them (in Gaza), and surrounded them with theocratic Jewish settlements in the West Bank. Hamas would, in contrast, just kill every Jew it could find as soon as it could. That is an important difference.

    ஆண்ட்ரூ சல்லிவன் ஒரு விஷயத்தில் இஸ்ரேலைக் கண்டிக்கிறார். இஸ்ரேல் சில ஆக்கிரமிப்பு பகுதிகளில் குயிருப்புகளை ஏற்படுத்துவது பற்றிய விமர்சனம் அது. ஆனால் வரலாற்று ரீதியாகப் பார்த்தால், சமாதானத்திற்காக நிலம் என்ற கோட்பாட்டின் கீழ் எகிப்து, ஜோர்டான், சிரியா போன்ற நாடுகளுக்கு நிலப் பரப்பை வழங்கியது இஸ்ரேல். இன்றும் இரண்டு நாடுகளாக சமாதானமாக வாழவும், இஸ்ரேலையும் யூதர்களையும் அழிப்பது நோக்கமாகக் கொண்ட ஹமாஸ் கலைக்கப் பட்டால் நிலத்தை வழங்க இஸ்ரேல் தயாராக இருக்கிறது. பல குடியிருப்புகளைக் காலி செய்து பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் வழங்கியும் உள்ளது.

    தான் ஆக்கிரமித்த எந்த நிலப் பகுதிய இஸ்லாமிய நாடுகள் அதற்கு உரியவர்களிடம் இதுவரை வழங்கியிருக்கிறது?

Leave a Reply to Manjula Navaneethan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *