சங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 17 of 22 in the series 16 நவம்பர் 2014

வைகை அனிஷ்
சங்க இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளது. அந்நடுகற்கள் இன்றளவும் காலங்களை கடந்து பழமையை உணர்த்துகிறது.ஆநிரையைக் கவர்தல் அல்லது மீட்டல் காரணமாகவோ ஊர் அழியப்பொறேன் என்ற எண்ணத்தில் ஊரைக்காக்கவோ விலங்குகளைக் கொல்லவோ வீரர்கள் போரிட்டு மாண்டுள்ளார்கள். மேலும் ஊரில் தொல்லைதந்த புலியை வெட்டிக்கொன்றுள்ளார்கள். நாடான்ட அரசணுக்காகவும், தன்னுடைய கணவன் இறந்த துயரத்திற்காகவும் பலர் மாண்டுள்ளனர். இதே போல கோயில் திருப்பணி செம்மையாக நடைபெறாமல் இருந்தாலோ, கோயிலை கொள்ளையடிக்க முயன்றாலோ அதனால் உயிர்விட்டவர்கள் ஏராளம். இப்படி இறந்தவர்கள் நினைவாக ஆங்காங்கே கோயில்களில் சிலைகளாவோ கல்வெட்டுக்களாவோ பொறித்து வைத்துள்ளனர்.
போரில் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ~போரில் வீரமரணம் எய்தும் வீரனுக்குச் சொர்க்கம் உண்டு~ என்று மகாபாரதமும் பகவத்கீதையும் போரில் இறந்தால் சொர்க்கம் என்கிறது. அர்த்த சாஸ்த்திரம் எழுதிய சாணக்கியரும் ~போர்களத்தில் மாண்டால் புண்ணியவான் ஆவான்~ என்றும் ~கோழைகள் இறந்தால் நரகம் செல்வர்~ என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமின்றி வெ;வேறு காரணங்களுக்காக இறந்தவர்களுக்கும் நினைவுக்கற்கள் மக்கள் தோற்றுதவித்தனர். அவை பலவகைப்படும். ஊர்க்காத்தான் கோவில், பெண் மீட்டான் அல்லது சிறைமீட்டான் கல், அறம்காத்தான் கல், சாவாரப் பலிக்கல், புலிக்குத்திப்பட்டான், பன்றிக்குத்திப்பட்டான் கல், கோழிக்கல், நவகண்டம், பாம்பு கடித்து மாண்டார் கல் , யானைகுத்திப்பட்டான் கல், கிளிக்கு எடுத்த நடுகல், எருமைக்காக எடுத்த நடுகல் இவை தவிர எல்லைக்காக- தண்ணீர் உரிமைக்காக-ஊருக்காக-துயரைத்தாங்க முடியாமல் உயிர்நீத்தோர் என பலவகைப்படும்.
நடுகற்கள்
~ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தால் எத்தகு புண்ணியம் கிடைக்குமோ அத்தகு புண்ணியம் போரில் இறக்கும் வீரனுக்குக் கிடைக்கும்~ என்று ரிக்வேதமும் அதர்வண வேதமும் கூறுகின்றன.(ர்ளைவழசல ழக னூயசஅய ளயளவசய மழட ஐஐஐ p58). ;இந்தியாவில் தமிழ் மக்கள் வாழ்வுக்குப் போகாவிட்டாலும் சாவுக்கு செல்லும் வழக்கம் உடையவர்கள். அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நடுகற்கள் நிறுவும் பழக்கமும் இன்று வரை உள்ளது.
பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு நினைவுக்கற்கள் உலகமெங்கும் எடுக்கப்பட்டாலும் போர்களில் மாண்டவர்களுக்கு ஹீரோ ஸ்டோன்ஸ் எடுப்பது சிறப்பாக கருதப்பட்டு வந்துள்ளது. தமிழில் நடுகல் என்பது, வீரகலு அல்லது வீரசிலாலு எனக் கன்னட, தெலுங்கு மொழிகளில் கூறப்பட்டுள்ளது. மேற்கு இந்தியாவில் நினைவுக்கற்களைப் பலியா என்றும், கம்பியா என்றும் அழைக்கின்றனர். மத்திய இந்தியாவில் மாரியர்கள் வழிபடும் நினைவுக்கற்கள் உரஸ்கல் எனவும், வட இந்தியக்கொல்லா மற்றும் போயா இனத்தவர்கள் வீர்கா என்று நடுகல்லை அழைக்கின்றனர். இந்நடுகற்களும் ஓராயிரம் உண்மைகளை கூறிக்கொண்டிருக்கிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள புலிமான்கோம்பை, சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள ப+லாநந்தபுரம், அம்மையநாயக்கனூர் ஆகிய ஊர்களில் இன்றளவும் நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
நடுகல் வழிபாடு
சங்க காலத்தில் நடுகல் வழிபாடு சிறப்புடன் மிகுதியாக விளங்கியது
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறம்.335)
என்று பாடுகிறார் சங்கப்புலவர்
உருவமும் எழுத்தும்
முதலில் நடுகல்லாக நெடுநிலை நடுகல் எனப்படும், நீண்ட உயர்ந்த கல் நடப்பட்டது. அதன் பின்னர் சிறு அளவில் நடுகற்கள் நடப்பட்டன. அக்கற்களில் முதலில் உருவமோ, பெயரோ, பெருமையோ குறிப்பிடாமல் அவை வெறும் கற்களாக மட்டுமே இருந்தன. பின்னர் காலம் செல்லச்செல்ல உருவம் செதுக்கப்பட்டது. பீடும், பெயரும் உளியால் எழுத்துக்களாக செதுக்கப்பட்டன. இதனை
நட்ட போலும் நடா நெடுங்கல்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி ச+ட்டிய பிறங்குநிலை நடுகல்
மரம்கோள் உமண்மகன் பேரும் பருதிப்
புன்தலை சிதைந்த வன்தலை நடுகல்
கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்து
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்;குல் நுணுகிய பேஎமுதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்றுகுயில்
எழுத்து (அகம் 297)
என சங்க இலக்கியம் கூறுகிறது.
வீரர்களும் நாட்டுப்புறத்தெய்வங்களும்
கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்~
என்ற நிலையில், வீரர்களைத் தமிழ்ப் பெண்கள் விரும்பி வீரமில்லாதவர்களை வெறுத்தனர். கொல்லேறு தழுவுதல், புலி, யானை, குதிரைகளை அடக்குதல் யாவும் வீரச்செயல்களாக கருதப்பட்டன. வீரமரணம் எய்தியவருக்கு நடுகல் உருவாக்கி வழிபடும் மரபு உருவாயிற்று. மதுரை வீரன், நொண்டிக்காடன், சப்பாணி, அண்ணன்மார், போன்ற நாட்டுப்புறத்தெய்வங்கள் வீரர்களாக இருந்தவர்கள் பின்பு நடுகற்களாகி நாட்டுப்புற தெய்வங்களாக மாறினார்கள்.
இதனை வலியுறுத்தியே திருவள்ளுவர் கூட
~வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்~
என்ற திருக்குறளில் வரும் ஆடவர் நடுகல் வீரருடன் ஒப்பிட்டுள்ளார். கணவன் இறந்த பிறகு தீப்பாய்ந்த பெண்ணும் நடுகல் தெய்வமானாள்.
சங்ககால இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்ப+ரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் நடுகற்கள் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடும்போது மேற்கோள் பாடல்களையும் குறிப்பிட்டுள்ளனர். இதில் தொல்காப்பியர் அகத்திணையை ஏழாக வகுத்துக் கொண்டது போல புறத்திணையையும் ஏழாக வகுத்துக்கொண்டார். இதே போல அதியமான நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நடப்பட்டதை ஒளவையார் கண்ணீர்த் ததும்பப் பாடுகிறார்
~நடுகற் பீலி ச+ட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ~ (புறம் 232)
என்றும் பாடுகிறார்.
ஆவ+ர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிநாட்டுக் காரியாதி என்பவனுக்கு நடுகல் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். அப்பாடல் பின்வருமாறு
~பல்லா தழீஇய கல்லா வல்லில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
நாகுமுலை அன்ன நறும்ப+ங் கரந்தை
விரகறி யாளர் மரபிற் ச+ட்ட
நிரையிவண் தந்து நடுகல் ஆகிய
வெள்லே விடலை~ (புறம் 261)
~கரந்தை ப+வைச் ச+டி நிரையினை மீட்டு வந்த வெள்வேல் விடலை, நடுகல் ஆனான்~ என்பதை இப்பாடலின் மூலம் அறியலாம். கரந்தைப்போரில் ஒருவீரன் ஆநிரைகளைப் பகைவர்களிடமிருந்து மீட்டின பின்பு அவனுடைய உடம்பு முழுவதும் பகைவருடைய அம்புகள் தைத்து அவன் இறந்து போனதை வடமோதங்கிழார் என்ற நல்லிசைப் புலவர் குறிப்பிடுகிறார்.
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு என்ற சங்க நூலில் ஓதலாந்தையார் எழுத்துடை நடுகல்லைப் பெரிய யானையின் துதிக்கைக்கு உவமைப் படுத்தி எழுதியுள்ளார்.
~விழுந்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப்பிணர்ப்
பெருக்கை யானை (பாடல் 352)
மலைபடுகடாம்
மலைபடுகடாம் என்ற கூத்தராற்றுப் படையில் இரு இடங்களில் ஏழுவரிகளில் நடுகல் பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன. நடுகல்லில் உருவங்கள் அல்லது ஓவியங்கள் இருந்ததையும் வழிபடும் கடவுளாக நடுகல் இருந்ததையும் இவ்வரிகளில் காணலாம்.
~ஒன்னாந் தெவ்வர் உலைவிடத் தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரோடு நட்ட
கல்லேசு கவலை எண்ணுமிகப் பலவே~
(வரி 386-389)
~செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார்
கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடேசு கவலை~ (வரி 394-96)
பரிசு பெற்ற கூத்தன் பரிசு பெற இருக்கும் வறிய கூத்தனுக்குச் செங்கை நகருக்கு வழி கூறும்போது வழியிடை மராமத்தின் நிழலில் தோற்றோடியவரை இகழ்பவை போல நடுகற்கள் இருக்குமென்று கூறுகிறான்.
பட்டினப்பாலை
நடுகல்லுக்கு அரண் இடப்பட்ட செய்தியைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது, அதாவது கேடயத்தை அல்லது வேலியை நட்டனர் என பொருள்படும்.
~கிடுகுநிரைத் தெகூன்றி
நடுகல்லின் அரண்போல~ (பட்டினப்பாலை 78-79)
சதிக்கற்கள்
சங்க இலக்கியத்தில் உடன்கட்டை ஏறிய மனைவியரைப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. புறநானூறு 250-ஆம் பாடல் உடன்கட்டை ஏறிய கற்புக்கரசியைப் போற்று இவ்வாறு பாடுகின்றது
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை எட்டி இறைஞ்சுவர்.
(பரிபாடல் 20-80-89)
புறநானூறு கற்புக்கு அடையாளமாக அருந்ததியைக் குறிப்பிடுகிறது. (புறம் 22-8-9) சிலம்பும் அருந்ததியைப் போற்றுகிறது. பிற்கால நூல்களும் அருந்ததியைப் போற்றும்
இருந்து தோன்று விசும்பின் உலகத்து
குறும்பை மணிப்ப+ண் புதல்வன் தாயே
என்று அகம் அருந்ததியைப் பாராட்டுகிறது.(அகநானூறு 42-3-5)
கணவன் இறந்த பின் தீப்பாய்ந்து இறந்து போன பெண்ணிற்காக நடுகற்கள் எடுக்கப்பட்டன. கைம்மை நோற்கும் பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்ததும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டிருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். மற்றொரு புறம் கணவன் இல்லாத வாழ்வைப் பொறுத்துக்கொள்ளமுடியாது தீப்பாய்ந்து இறந்துபோன பெண்களைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடியதைக் கண்டு தீக்குளிப்பதை பெண்கள் விரும்பியிருக்கவேண்டும். இக்கோயில்கள் மாலையம்மன்கோயில், தீப்பாய்ந்த அம்மன்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. தீப்பாய்ந்து இறந்துபோன பெண்களின் உருவங்கள் கணவனோடு அமர்ந்து இருப்பது போன்றம் சேர்ந்து இருப்பது போன்றும், கணவனை வணங்கி நிற்பது போன்றும் சதிகற்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர கற்பின் பெயராலும், கணவன் இறந்தாலும் தம் எதிர்காலம் பாழ்பட்டுப்போய்விடும் என்ற அச்சத்தாலும் பண்பாடு, மரபு சிந்தனைகள் தாக்கத்தாலும் பெண்கள் கணவன் மரணமடைந்ததும் தாங்களும் தன் பலியாகச் சிதையில் விழுந்து இறந்த செய்திகள் கூடக் காணப்படுகின்றன.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
தேனி மாவட்டம்
;

Series Navigationஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *