வையவன் 75 ஆவது வயது நிறைவு வாழ்த்து விழா

author
1
0 minutes, 11 seconds Read
This entry is part 22 of 23 in the series 21 டிசம்பர் 2014

vaiyavan

 

 

டாக்டர். எம்.ஜீவகன்,  M.B.B.S, M.S, D.N.B

Urologyt, Senior Consultant, R.G.Stones, Chennai

 

டாக்டர்எஸ் லக்ஷ்மி பிரசன்னா ஜீவகன்,  M.B.B.S,D.A

Anesthetist, Sankar Nethralaya, Chennai

 

 

அன்புடையீர், 

 

வணக்கம்.  எங்கள்  தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராஜன்] M.A.B.L.அவர்களின் அண்ணாவுமான M.S.P.முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின், 75 ஆவது வயது நிறைவு நாள் விழா வரும் 24 டிசம்பரில் [புதன் கிழமை] 2014, மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு, காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நடைபெற உள்ளது.

 

பல முக்கியப் பிரமுகர்களும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் அவரது நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் துவக்கம், இதயத்துடிப்பு பத்திரிகை விநியோகம், ஆருத்ரா மாத ஏடு துவக்கம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது.

 

59 ஆண்டுகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வரும் வையவன் அவர்கள்  வைரமணிக் கதைகள், மணல்வெளி மான்கள், ஜங்ஷ னிலே ஒரு மேம்பாலம், ஜமுனா , உயிரோட்டம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தமிழ் உலகிற்கு அளித்து மௌனமாகப் பணியாற்றுபவர்.

 

தனக்கே உரிய தனித் தன்மை பெற்ற அவரது எழுத்துக்களில் எந்த இசத்தின் தாக்கமும், எந்த அந்நிய மற்றும் தமிழ் எழுத்தாளர் பாதிப்பும் இராது. மானுட மேன்மையும் அன்பின் ஈரமும் நிறைந்தது வையவன் எழுத்துக்கள், கிராம வாழ்வானானும் சரி  நகரவாழ்வானாலும்  சரி அதன்  ஆழத்தைத்  தொட்டுச் செல்லக் கூடியது. வையவன் எழுத்துக்கள் குமுதம் கல்கி ஆனந்தவிகடன் இதழ்கள் இவருடைய படைப்புகளை விரும்பி வெளியிட்டன.

59 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கிவருகிறா இவருக்கு , அங்கீகாரமோ விருதுகளோ  ஒரு பொருட்டல்ல என்றாலும் தரத்தோடும் அறத்தோடும்,  அதே சமயம் இலக்கிய  செழுமையிலும் சமரசம் செய்து  கொள்ளாத  எழுத்தாளர் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி  போன்ற எழுத்தாளர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க வையவன் படைப்புக்கள் கட்டுரை, இலக்கிய ஆய்வு, நாடகம் ,கவிதை என்று பன்முகப்பார்வை  கொண்டவை,

 

இவரது கதை வசனத்துடன்  எடுக்கப்பட்ட ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ குறும்படம் தமிழ் நாடு முழுவதும் கிராமங்களில் திரையிடப்பட்டது.   ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலையும் பிற மலையாள எழுத்தாளர் படைப்பையும் மொழிபெயர்த்தவர் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி ராஜீவ் காந்தி, மேனகா காந்தி, ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஆளுநர் சுர்ஜீத் சிங் உள்ளிட்ட பல தலைவர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர். எழுதப் படிக்கத் தெரியாதவருக்கான எழுத்தறிவுப் பணியில் இவர் சேவைக்காக மால்கம் ‘ஆதிசேஷையா விருது’ பெற்ற இவர் இன்னும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்

 

அனைத்து மொழிகள்  மீதும் ஆர்வமும் நேசமும் கொண்ட இவர் உள்ளம் சாதி மத வேறுபாடுகள் அற்றது. எந்த குழுவிலும் இயக்கத்திலும்  சாராமல் தன்னளவில் சரி என்று பட்டதை மட்டும் செய்துவரும் வையவன் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய  உரிய அங்கீகாரமோ அடையாளமோ கிடைக்கவில்லை என்ற வருத்தம் நமக்கு இருந்தாலும் அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்,  இப்படி எந்த லாபியும் செய்யாமல் ஊடகவெளிச்சம் படத் தந்திரங்கள் மேற்கொள்ளாமல்  அரசியல் பின்புலமோ அதிகாரச் செல்வாக்கோ இல்லாமல், தொடங்கிய பணியை வயது காரணம் காட்டி நிறுத்திவிடாமல் ,காட்டு மலர் போல் பூத்துக்கொண்டே இருக்கும் இவரது படைப்பாற்றலுக்கும் பதிப்பாற்றலுக்கும் ஒரு சிறு நன்றியைத் தெரிவிக்கிற ஒரு வாய்ப்பே  இந்த விழா . அன்புகூர்ந்து தாங்கள் வருகை தந்து மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டு கிறோம்.  வந்த விருதுகளுக்கு வரவேற்பு சொல்லி, வராத விருதுகளுக்கு நன்றி கூறி, “ என் கடன் பணி செய்து கிடப்பதே,” என்று தொடரும் அவரது ஆக்கபூர்வ வாழ்வுக்குப் பாராட்டுகள் சொல்வோம் வாருங்கள்.

http://innaiyaveli.blogspot.in

 

++++++++++++++++++++++++++++++++++

image

Series Navigationதிருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை 2015 பிப்.5,6 நாள்களில் நிகழ்த்தும் துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம்அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *