:-
கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் இனங்கண்டு அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பதை ஜி ராஜேந்திரன் தகுந்த விளக்கங்களுடன் அளித்துள்ளார்கள்.
Constructive Pedagogy பற்றி ( ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறை ) கோட்பாட்டில் ஆர்வமுள்ள இவர் ஒரு ஆசிரியர், எழுத்தாளர், கற்பிக்கும் முறைகளிலும் கற்றுக்கொள்ளும் முறைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறார்.
அறிவு என்றால் என்ன. அறிவும் திறமையும் ஒன்றா, எப்படி வேறுபடுகிறது. நினைவாற்றல், புதியன கற்பது, மரபணுக்கள் மூலம் பதிந்தவை, என பல தலைப்புகளில் ஆராய்ந்து கட்டுரை ஆக்கி இருக்கிறார். மேலும் ஒவ்வொரு குழந்தையிடமும் தனி மனிதரிடமும் உள்ள ஒன்பது வகையாக அறிவையும் வகைப்படுத்தி முடிவில் என் துறை என்ன துறை என்று அக்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அவர்களின் தனிதிறனைக் கண்டுணரும்படிக் கொடுத்துள்ளார்.
மனதின் மூளையின் பன்முக அறிவுச் செயல்பாடுகளை வகைப்படுத்தும் அவர். அதன் மூலம் எப்படி ஒருவரின் தனிப்பட்ட திறமையையும் விருப்பமிருக்கும் துறையையும் கண்டறியலாம் என்றும் அதன் மூலம் அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்றும் கூறுகிறார்.
ஒரு குழந்தையிடமே பல்வேறு வகையான அறிவும் கலந்து கொட்டிக் கிடந்தாலும் ஓரிரு துறைகளில் சிறப்பாகச் செயல்பட முடியும் அதை நாம் கண்டறிந்து அவர்களை வழி நடத்த இவர் தந்திருக்கும் பயிற்சிகள் உதவுகின்றன.
குழந்தைகளை கல்வியைத் திணிக்கும் மிஷின்களாக நடத்தாமல் இயல்பாக வளர்த்து இயற்கையாகப் பரிணமிக்க இந்நூல் உதவும். தங்கள் குழந்தைகளின் தனித்திறன் கண்டறிய விழைவோர் இந்தப் புத்தகத் திருவிழாவில் மறக்காமல் வாங்க வேண்டியது இந்நூல். படி படி என்று ரொம்பவும் சிரமப்படுத்தாமல் மிக எளிதாக உங்கள் குழந்தையின் தனித்திறன் கண்டறிந்து அவர்களுக்குப் பிடித்தமான துறையில் ஈடுபடுத்தினால் அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆவார்கள் என்பதை உறுதிபடக் கூறுகிறது.
நூல் :-உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்.
ஆசிரியர் :- ஜி. ராஜேந்திரன்.
பதிப்பகம் :- கிழக்கு
விலை :- ரூ. 65/-
- அஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா? – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )
- ”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”
- ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்
- சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று
- நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்
- உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்
- மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை
- ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்
- அழகான சின்ன தேவதை
- டொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை
- கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?
- பொங்கலும்- பொறியாளர்களும்
- பாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது?
- பத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.
- நாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது
- தொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்
- பாயும் புதுப்புனல்!
- மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….
- இலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்?
- “பேனாவைக்கொல்ல முடியாது”
- வாழ்த்துகள் ஜெயமோகன்
- தமிழுக்கு விடுதலை தா
- கைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்
- சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்
- நாவல் – விருதுகளும் பரிசுகளும்
- பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்
- கலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..
- பேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…
- நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்
- ஆனந்த பவன் -21 நாடகம்
- பிரசவ வெளி