சங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 23 in the series 18 ஜனவரி 2015

வைகை அனிஷ்

நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படம் தயாரித்து தற்பொழுது திரையரங்குகளி;ல் திரையிடப்பட்டாலும் நாயிக்கு பின்னர் சங்க காலம் கொண்டு வரலாறே உள்ளது.
சங்க இலக்கியங்களில் நாய்
நன்றி கெட்ட நாயே என வசைபாடுவதையும், ஏன்டா நாய் மாதிரி லோ லோ என அலைகிறாய் எனவும், நாய் வாயில் கிடைத்த தேங்காய் மாதிரி என நாயை பற்றி கீழ்தரமாக வார்த்தைகளை அன்றாடம் பிரயோகிப்போம். நாய்கள் சங்க காலத்திலிருந்து இன்று வரை எப்படி மனிதனுக்கும் நாயுக்கும் உள்ள உறவு எப்படி உள்ளது என்பதுதான் இக்கட்டுரை..
கி.மு.7700 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷையர் மக்கள் தான் முதன் முதலில் நாயை வீட்டில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். அரிசோனா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர்கள் நாயுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்தள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள். சைபீரியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கிடைத்த சுமார் 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் நாய்களின் மண்டை ஓடுகளை ஆய்வு செய்து இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.
வீட்டைப் பாதுகாக்கவும், எஜமானர்களுக்கு விசுவாசமாகவும், ஆடுகளை மேய்க்க காவலாளியாகவும், யானைகளை விரட்டவும், பனிப்பகுதிகளில் புதையுண்டு கிடக்கும் மனிதர்களை தன்னுடைய மோப்ப சக்தியால் கண்டுபிடித்து கண்டுபிடிக்கவும், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை தன்னுடைய மோப்ப சக்தியால் நுகர்ந்து ஆட்களை அடையாளப்படுத்தவும் காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு, சுரங்கங்களில் மனிதன் இருந்தால் நாய் மூலம் இன்று வரை கண்டுபிடிக்கப்பயன்படுகிறது. பண்டைய காலத்தில் கர்நாடகா போரிலும், பாலிகர் போரிலும் ஆங்கிலேயருக்கு எதிராக ராஜபாளையம் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நாய் வாலாட்டுவதிலும் ஒரு சிறப்பு உள்ளது. வலது புறம் ஆட்டினால் நட்புடன் ஆட்டுகிறது என்றும் இடது புறம் ஆட்டினால் வெறுப்புடன் உள்ளது என்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
பொதுவாக நாய்கள் குரைக்கும் தன்மை உடையது. சில நாய்கள் குரைக்காது. நாய்கள் முணங்கிக்கொண்டு குரைத்தால் காதல் உணர்வுடனும், உறுமிக்குலைத்தால் சினத்துடன் இருக்கும் என்றும், கனைத்தால் விட்டுக்கொடுக்கும் உணர்வுடன் செயல்படும் என கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த காலங்களில் பாரிவேட்டை என்று சொல்லக்கூடிய போட்டி இருந்தது. அதில் நாய் முக்கிய பங்கு வகித்தது. இன்றும் பன்றிகளை பிடிப்பதற்கும், முயல்களை கவ்விப்பிடிப்பதற்கும் வேட்டை நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். சில பங்களா வீடுகளில் நாய்கள் ஜாக்கிரதை என்ற அறிவிப்பு பலகையும் வைத்திருப்பார்கள். சில குறிப்பிட்ட சமூகத்தில் இன்றளவும் நாய் வளர்ப்பது நடைமுறையில் உள்ளது. நாயில் பலவகை உண்டு. அவைகள் டாபர்மேன், கிரேட் டேன்ஸ், பாக்சர், யார்க்ஷைர், டெர்ரியர், ஜெர்மன், பொமரேனியன், டால் மேஷியன், பக், செயிண்ட், மினியேச்சர், பிரேட்டன், ஆப்கன் ஹன்ட், ஐரிஷ் செட்டர், கேரவுன் கவுன், டேசன் டாக், லசாப் சோ, ரெட்ரீவர், பாக்ஸ் டெரியர், ராஜபாளையம், சிப்பிப்பாறை, பேரையா என பலவித நாய்கள் இனங்கள் உள்ளது.
இந்தியாவில் வளர்க்கப்படும் நாய்கள் மனிதனோடு அண்டிப் பிழைப்பவை. ஆனால் ஐரோப்பிய நாய்கள் தாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வரும் தன்மை உடையது. தமிழகத்தில் ராஜபாளையம், கோம்பை நாய், கன்னி நாய், ஆலங்கு நாய் என நாட்டு நாய்கள் உள்ளது. சுனாமி, நிலநடுக்கம் மற்றும் இயற்கை பேரழிவு போன்றவைகளை முன்கூட்டியே மனிதனுக்கு தெரிவிக்கும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களில் சில ஊளையிட்டால் அந்த வீட்டில் ஏதோ அபசகுணம் நடப்பதாக இன்று வரை கிராம மக்கள் நம்புகின்றனர். உலகில் முதன் விண்வெளிப் பயணி லைக்கா என்கிற நாய்தான். 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ரஷ்யாவில் ஸ்புட்னிக் விண்கலத்தில் லைக்கா நாய் பறந்தது. புவி சுற்றுப்பாதையில் 4 நாட்கள் லைக்கா உயிரோடு இருந்தாக அப்போது விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலே செல்ல செல்ல அது இறந்துவிட்டது என்று 45 ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்தனர்.
கோம்பை நாய்
தேனி மாவட்டத்தில் தேவாரம் ஜமீனுக்கு உட்பட்ட கோம்பை நாய் தான் இந்திய இனத்தில் உள்ள அனைத்து வகை நாய்களை விட பலம் வாய்ந்தது. இது அதிகம் குரைக்காது. உருமல் மட்டும் தான். மருதுபாண்டியரின் கோட்டைக்கு காவலுக்கு இருந்த கோம்பை நாய்கள் இறுதிவரை ஆங்கிலேயரை உள்ளே அனுமதிக்கவில்லையாம். கோம்பை நாய்களுக்கு கருவாய் செவளை என்ற இன்னொரு பெயரும் உண்டு. கோம்பை நாயைப்பற்றி தேனி மாவட்டத்தில் நடந்ததை கதையாகக் கூறுவதுண்டு. கடந்த 1950 ஆம் ஆண்டு சன்னாசி என்பவர் தான் வளர்த்த நாயுடன் முயல்வேட்டைக்குச் செல்வது வழக்கம். தனியாக முயல்வேட்டைக்குப் போன நாயோ புதரில் மறைந்திருந்து பதுங்கி இருந்தது. அப்பொழுது அப்பகுதியில் வந்த புலியின் கழுத்தை கவ்விக்குதறியது. கவ்விய நிலையில் நாயின் குரைச்சல், புலியின் உருமல் மாறி மாறி மலையடிவாரத்தில் எதிரொலித்தது. கேட்ட உடனே வெட்டரிவாளுடன் சென்ற சன்னாசி கொண்டு சென்ற அக்கொடுவாள் கொண்டே வேங்கைப் புலியின் கழுத்தை வேகமாக வெட்டியுள்ளார். புலி இறந்துவிட்டது. புலி அடிக்காவிட்டாலும் கிலி அடியாதவாறு அவரும், தன்னுடைய வீர நாயும் பெருமையுடன் பாரவண்டியில் ஊருக்குள் வந்து சேர்ந்தார்கள். வரும்பொழுது இறந்த புலியை அழைத்து வந்துள்ளார்கள். அவ்வ+ர் மக்கள் மாலைபோட்டு நாயுக்கும் சன்னாசிக்கும் வரவேற்பு அளித்தனர். அதிலிருந்து கோம்பை நாய் புகழ்பெறத்துவங்கியது. கோம்பை நாய் கொடும் புலி கழுத்தையும் கவ்வும் என்ற பழமொழி இப்பகுதியில் இன்றளவும் கூறப்படுவதுண்டு. இலண்டனில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கோம்பை நாய் இனம் என்று தனியாக வளர்க்கிறார்கள். வேட்டைக்குச் செல்வதற்கும் பண்ணைகளைப் பாதுகாப்பதற்கும் கோம்பை நாய்களை வாங்கி செல்கின்றனர். அதனுடைய நினைவாக வெட்டும்புலி தீப்பெட்டி என்ற தீப்பெட்டியே வெளிவந்தது.
யானையை விரட்டும் நாய்கள்
சிப்பிப்பாறை, இராஜபாளையம் போன்ற வேட்டை நாய்கள் யானைகளை எதிர்த்து விரட்டும் தன்மை உடையது. இராஜபாளையம் நாய்களை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு அஞ்சல் தலை ஒன்றையும் வெளியிட்டது.
நடுகல்லும் நாயும்
இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படுவது நடுகற்கள். இவ்வாறு இறந்த நாய்களுக்கும் நினைவாக பண்டைய காலத்தில் நடுகற்களை அமைத்திருந்தனர். கி.பி.949 ஆம் ஆண்டு கங்க மன்னன் இரண்டாம் ப+துகனின் சேவகன் மணலரதா என்பவன் தக்கோலம் போரில் ஈடுபட்டான். அப்போது காளி என்ற பெயருடைய அவனுடைய வளர்ப்பு நாய் போர்களத்தில் இறந்துவிட்டது. அதற்காக நாயின் நினைவாக நடுகற்களை எழுப்பிஉள்ளான்.
கொல்லாரஹட்டியில் நாய்க்கு எடுக்கப்பட்ட நடுகல் ஒன்றைக் தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி ஒன்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனிஷா என்ற நாய் காட்டுப் பன்றியைக் கடித்துக் கொன்று நாயும் உயிர்துறந்துவிட்டது. இதே போல திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் எடுத்தனூரில் ஒரு கள்ளனைக் கடித்து உயிர்விட்ட கோபாலன் என்ற நாய்க்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
கடப்பா மாவட்டம், புலிவெண்ட்லா என்ற வட்டத்தில் லிங்கலா என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் போரகுக்கா என்ற நாய் எஜமானுடன் இருந்தது. எஜமான் இறந்தபோது அதுவும் துங்கம் தாங்காமல் இறக்கவே நாய்க்கும் நடுகல் எழுப்பப்பட்டது.
இவ்வாறாக மனிதனுடன் வாழ்ந்து வரும் நாயை பற்றி அறிந்து கொள்ள இன்னும் பல விடயங்கள் உண்டு.

வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
செல்:9715795795
Series Navigationசீஅன் நகரம் – வாங்க.. சாப்பிடலாம் வாங்கபஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழா
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    saravanan says:

    அருமையான கட்டுரை.. ராஜபாளையம் மட்டும்தான் தமிழ்நாடு நாய் வகை என்று நினைத்தேன் இன்று பல வகையை தெரிந்து கொண்டேன். நன்றி…

    வைகை அனிஷ், “The Red Dog” (Australia film), Hachi: A Dog’s Tale படங்களை பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.

  2. Avatar
    விஸ்வநாத் says:

    ராமநாதபுரம் மந்தை நாய் என‌உண்டு. மேலும் அலங்கு என்னும் நாய் இனம் உண்டா? அதனை அடையாளம் காண இயலுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *