ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பதில் கிடையாது ! நீரூற்றின்
ஓசைப் பண்ணிசை
வாசல் முற்றத்தில் தனித் தொலிக்கும்;
பளிங்கு மேல் விழும் நீர்போல்
என் இதயம் வீழ்ந்திடும் தவித்து;
காதல் பெரு மூச்சு
சாதல் நோக்கிப் போகும் !
மரணம் முன்தூண்டும்
நமது காதல் வெற்றி பெற !
ஒளிவீசும் விழிகள்
வெளிப்படும் எப்போதும் !
நிச்சயம் தேடி வருவாயா ?
இச்சகம் விட்டு நான் நீங்கும் போது,
எங்கே ஒளிந்திருக்கும்
என்னினிய சுவைகள் எல்லாம் ?
அங்கே
உன் குரலோ
என் கனிவு மனப் படைப்போ
எந்தக் கதவையும் திறக்காது !
அழுகுரல் எழுப்பிடு காதலனே !
முடிந்தது நம் காதல் !
அழுவாய் சைப்பிரஸ் மரத்தின் கீழே !
ஒளிமிகு விழிகள்
வெளிப்படும் எப்போதும் !
தேவதையர் கன்னி மாடத் தருகே
ஆலய மணி அடிக்கும் போது,
நடந்து செல்வாயா நீ ?
தேவதையர் கீழிறங்கி வரப்
பாடும் குழுவினர் இசைப் பாட்டை
நினைவில்
தேடிக் கொள்வாயா ?
ஆன்மீகப் பாப மன்னிப்பில்
காண்பேன் சொர்க்கம்,
உன் புன்னகை மின்னும் வரை !
மாசுகள் உள்ளதா இப்புவி ?
ஒளிமிகு விழிகள்
வெளிப்படா எப்போதும் ?
+++++++
- ஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்
- சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்
- சோசியம் பாக்கலையோ சோசியம்.
- அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்
- வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை
- பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)
- நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு
- புது டைரி
- Caught in the Crossfire – another English Book – a novel
- கோசின்ரா கவிதை
- வாய்ப்பு
- தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
- மூன்றாம் பரிமாணம்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)
- விடாது சிகப்பு
- நகைகள் அணிவதற்கல்ல.
- வேறு ஆகமம்
- தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு
- மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி
- கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்
- திருக்கூடல் என்னும் மதுரை [ஒரே ஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
- மிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
- மரபு மரணம் மரபணு மாற்றம்
- இலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்