தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 அக்டோபர் 2019

வரலாறு புரண்டு படுக்கும்

சத்யானந்தன்

Spread the love

சத்யானந்தன்

பலரை சிறையில் அடைத்த
வாளும் கிரீடமும்
சிறைப்பட்டிருக்கின்றன

அருங்காட்சியகத்தில்
உயரமான மாணவர்களுக்குக் கூட
பெருமிதமான வரலாறு
சிறு குறிப்புகளின் ஊடே பிடிபடவில்லை

சிறுவரை அழைத்து வந்த
ஊர்தியில் யாருமில்லை
வெற்றிடமுமில்லை

பையன்கள் விளையாடுவர்
காட்சிக் கூடத்துக் காணொளிப் பதிவு இயங்கும்
வரலாறு புரண்டு படுக்கும்
சிலிக்கான் சில்லுகளில்

வெளியே வெய்யிலில்
மௌனமாய்
திறந்த அடைப்பில்
வரலாற்றின் உள் அறிந்த
அரிய பார்வையாளனாய்
கல் மரம்

Series Navigationநிழல் தரும் மலர்ச்செடிபோபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்

Leave a Comment

Archives