மிதிலாவிலாஸ்-6

This entry is part 25 of 25 in the series 15 மார்ச் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி டிராயிங் ரூமுக்கு வந்தாள். சித்தார்த் கண்ணாடிக் கதவு அருகில் நின்று கொண்டு புல்தரையை பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலியின் மனதில் இனம் தெரியாத கலவரம். மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்து வரும் போது காலடிச் சத்தம் கேட்டு அவன் இந்த பக்கம் திரும்பினான். மைதிலி குசலம் விசாரிப்பது போல் முறுவலித்தாள். அவன் வணக்கம் தெரிவித்தான். அந்த முகத்தில் தயக்கம் தென்பட்டுக் கொண்டிருந்தது. “உட்கார்! அவர் போனில் பேசிக் […]

உதிராதபூக்கள் – அத்தியாயம் 6

This entry is part 24 of 25 in the series 15 மார்ச் 2015

இலக்கியா தேன்மொழி கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து. வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது. சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது. பலர் தங்களது வாகனங்களில் தங்களை நிறைத்துக்கொண்டு பார்க்கை விட்டு போய்க்கொண்டிருந்தனர். கிரிஜா வினய்யின் எண்ணை தேர்வு செய்து அழைத்தாள். ‘ஹலோ’ ‘ஹேய் வினய்..பக்கி.. இன்னிக்கு வேணாம்ன்னு சொன்னேன்.. கேட்டியா? இப்போ பாரு மழை வரப்போகுது.. […]

உறையூர் என்னும் திருக்கோழி

This entry is part 2 of 25 in the series 15 மார்ச் 2015

பாச்சுடர் வளவ.துரையன் [ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்] திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே ”இவர் உறையூரையும், தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் […]

அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு

This entry is part 3 of 25 in the series 15 மார்ச் 2015

வைகை அனிஷ் கி.பி.1559-1564 ஆம் ஆண்டு தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர் மூலம் நாயக்கர் ஆட்சி உருவானது. அப்பொழுது 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாளையங்களில் சந்தைய+ர் பாளையமும் ஒன்று. சந்தைய+ர் ஜமீனுக்கு உட்பட்டது வத்தலக்குண்டு. சந்தைய+ர் கொப்பை நாயக்கருக்கு பாதுகாவல் கிராமமாக அதாவது காவல் ப+மியாக மதுரை நாயக்க மன்னரால் வழங்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு பகுதியில் பன்னிரெண்டு கொத்தளங்களுடனும், ஐந்து வாயில்களுடனும் கோட்டை ஒன்று கட்டப்பட்டிருந்தது. கி.பி.1760 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிலிருந்து வந்த ஹைதர் அலியின் படைக்கும், […]

செத்தும் கொடுத்தான்

This entry is part 4 of 25 in the series 15 மார்ச் 2015

சிறகு இரவிச்சந்திரன். மெயின் ரோட்டில் இறக்கி விட்டிருந்தார்கள். மோகன் கொஞ்சம் களைப்பாக இருந்தான். இது இந்த மாதத்தில் நான்காவது முறை. இதே ஊர் ;இதே பேருந்து; இதே இடம்.. இங்கிருந்து இரு கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். மோகனுக்கு இருபத்தி எட்டு வயது. நல்ல களையான முகம். நறுக்கு மீசை.. கொஞ்சம் வெட்டிய உதடுகள் மட்டுமே அவனது அழகைக் கெடுத்தன. அதனால் என்ன பரவாயில்லை. அவன் என்ன சொற்பொழிவா நிகழ்த்தப் போகிறான். வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தேடி […]

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள்

This entry is part 5 of 25 in the series 15 மார்ச் 2015

ஆத்ம கீதங்கள் –20 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings] (தொடர்ச்சி) ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் பாடல் முடிந்த தென்று உனக்கு நினைவின்றிப் போனால், ஒத்திசைவின் மென்மை போகும் ! உன்னை விட்டொருவன் நீங்கினா னென்று உனக்கு உணர்வில்லை என்றால், மற்றவரும் அவனைத் தொடர்வா ரென அறிவாய் ! உன்னை அவன் விடும் மூச்சிலும் மதிக்கா திருப்பது உனக்குத் தெரிய வில்லை யென்றால், புரிந்து […]

வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம்

This entry is part 6 of 25 in the series 15 மார்ச் 2015

ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள். சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் (1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் கூட நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக […]

மட்டில்டா ஒரு அனுபவம்

This entry is part 7 of 25 in the series 15 மார்ச் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 ரோஆல்ட் டாஹ்ல் கதைகளைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். யூ ட்யூபில் தற்செயலாக சந்தானத்திற்கு மத்தியில் விழுந்தவள் தான் மட்டில்டா! 1996ல் ட்ரைஸ்டார் நிறுவனத்தால் எடுக்கப் பட்ட படம். கதை மட்டில்டா எனும் அபூர்வ சக்திகள் கொண்ட குழந்தையைப் பற்றியது. ஆனால் அதை இயக்குனர் டேனி டிவிட்டோ படமாக்கியிருக்கும் விதம் காமெடி கார்னிவல். ஆரம்பக் காட்சியே அமர்க்களம். ஹாரிக்கும் ஸினியாவுக்கு ஒரு மகனுக்குப் பிறக்கிறாள் மட்டில்டா எனும் பெண் குழந்தை. பழைய கார்களுக்கு […]

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

This entry is part 8 of 25 in the series 15 மார்ச் 2015

மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை இதனைத் தங்கள் இதழில் வெளியிட்டு உதவ அன்புடன் வேண்டுகிறேன். நன்றி அன்புடன் மு.பழனியப்பன்

தொடுவானம் 59. அன்பைத் தேடி

This entry is part 9 of 25 in the series 15 மார்ச் 2015

மிகுந்த மன வேதனையுடன்தான் வேரோனிக்காவிடம் விடை பெற்றேன். ஒரு வேளை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் எங்களுடைய பிரிவு நிரந்தரம் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. அதே வேளையில் நான் மனது வைத்தால் இவளுக்காக இலக்கியம் படிக்கலாம்.அனால் ஒரு பெண்ணுக்காக மருத்துவப் படிப்பை விட்டுக் கொடுப்பதா? இந்த இக்கட்டான சூழலில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதைப் பார்த்தபின்பு ஒரு முடிவு எடுக்கலாம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். ஒரு பெண்ணை விட்டுப் பிரிந்துபோகவேண்டும் என்பதற்காகவே அப்பா […]