ஆத்ம கீதங்கள் –23 மாறியது மேலும் மாறும் ..!

This entry is part 2 of 14 in the series 5 ஏப்ரல் 2015

 

[Change upon Change]

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

ஆறு மாதம் முன்பு நீரோடியது நதியில்

மல்லிகை மலரும் புதர்களுக்குள்;

இங்கு மங்கும் நடந்து உலவினோம்;

பனிமேல் படும் தடம் தொடர மாட்டார் !

நதி ஓரத்தின் புதர் வேலிக் குள்ளே

காதல் சுதந்திரக் களிப்போடு போ !

கால் தடச் சத்தம் கேளா விடில்

உறைந்து போன ஊமை நதியால்,

மலர்கள் உலர்ந் திடும் வேரோடு,

வேனிற் காலத்து மாறு தலால்

ஏனினிக் குறைவாய் நீ மாறுவாய் ?

 

 

குளிர்ப்பனி மெது, மெதுவாய்ப்

பொழிவது போல்,

கண்ணீர்த் துளிகள்

என் கண்களுக்கு இடம் மாறும் !

என் எளிய கன்னங்கள்

ஆறு மாதத் துக்கு முன்பு

சிவந்து போயின, வெட்கத்தில்,

உனது பாராட்டைக் கேட்டு !

வெளுத்துப் போய்த் தோன்றுவது,

வெளிப்புற மறைப்பே !

காதல் சுதந்திரக் களிப்புடன் போ !

என்முக நிறம் வெளுத்துப் போயின்,

உன் உறுதிப் பாடு முதலில்

முறிந்த தென அறிவாய் !

நொய்ந்து போன உன் காதல் தான்

பொய்யென நிரூபணம் ஆனது. !

இவையும் இப்போது மாறும் போது

ஏன் மாற வேண்டும் நானும்

உன் நிலைக்குக் குறைவாய் ?

 

+++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/
Series Navigationஇந்திரனின் நெய்தல் திணைமிதிலாவிலாஸ்-8
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *