தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 நவம்பர் 2020

ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !

Spread the love

 

[A Love Denial]

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

காலம் கடந்தது நாம் சந்திக்கவே !

தாமத மானது நமது சந்திப்பே !

நண்பா ! நீ நண்ப னுக்கு மேலில்லை !

மரணச் சவப் போர்வை சிக்கிடும் கால் சுற்றி,

தாண்ட முயன்றால் முடிவைத் தொடுவேன்

எனது இறுதித் துயருடன் நான் உன்னை

நெருங்க லாமா நகர முடியாத நிலையில் ?

இப்படிக் காதல் விளிப்புக்குப் பதிலளிப்பேன்

என் முகத்தைக் கூர்ந்து நீ பாரென்று !

 

 

நேசிக்க வில்லையே நான் உன்னை.

நேசிக்கத் துணிவு மில்லை எனக்கு,   

பேசாது போ, விடு எனது கரத்தை !

ரோஜா தேடின் பூக்கும் இடம் தேடிப்பார்

பூங்காச் சோலை, பாலை மணல் அல்ல.

பிறப்பும் இறப்பும் ஏற்குமா என் புகாரை,

நீ உன் பாடலை வளைக்கக் குனிவதேன் ?

நேசிக்க இயலா துனை யெனச் சொல்லும்

வாசகம் புரிந்திலை என்றால் சொல்வேன்

என் முகத்தைக் கூர்ந்து நீ பாரென்று !

 

 

முந்தி உன்னை நான் நேசித் திருக்கலாம்,

அன்று என் ஆன்மா உன்மேல் தாவியது,

இன்று நீங்கும் உன் காதல் துதி கேட்டு.

உலர்ந்த கன்னங்கள் அழுதிடும் முன்பு,

நெஞ்சும் சிரமும் விரும்புதா உனை என்று

என்னைக் கேள்வி நீ கேட்டால்

புன்னகை யோடு சொல்லி யிருப்பேன்,

என் முகத்தைக் கூர்ந்து நீ பாரென்று !

 

++++++++++++++++++++++

Series Navigationநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2வீடு பெற நில்!

Leave a Comment

Archives