பத்மநாதன் கலாவல்லி
முனைவர்பட்ட ஆய்வாளர் (சே.எண் – 2109)
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாëர்.
பல அங்கத்தவர்கள் தொகுப்பு குடும்பம், பல குடும்பங்களின் தொகுப்பு சமூகம். பல சமூகங்களின் தொகுப்பு சமுதாயம். ஒரு சமுதாயத்தில் வாழும் மனித இனம், அவ்வினத்தின் நாகரிகம், வளர்ச்சி, வரலாறு, பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல், சமுதாயநிலை, பொருளாதாரம், கல்வி போன்ற அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தும் முக்கியக் கூறு மொழி ஆகும். மேலும் மொழி ஒரு சமதாயத்திற்குள்ளும் பல சமுதாயங்களுக்குள்ளும் தொடர்புகளை ஏற்படுத்துகின்றது. அதன் மூலம் மொழிக்கூறுகளுக்கும் சமுதாயக் கூறுகளுக்குமிடையே மிக நெருக்கமான தொடர்புகள் ஏற்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற பொழுது மொழி இன்றேல் சமுதாயம் இல்லை; சமதாயமின்றேல் மொழி இல்லை என்ற நிலையில் மொழிக்கும் சமுதாயத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு வெளிப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையில் வழக்கிலுள்ள தமிழ் சிங்கள மொழிகள் கீழ்வருமாறு இரு சமூகங்களுக்கிடையே உயர்ந்த சமுதாயப் பணிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளன.
அ). கருத்துப்பரிமாற்றக் கருவி
மொழியின் முதன்மையான பயன்பாடு கருத்துப் பரிமாற்றமாகும். கருத்துப் பரிமாற்றம் என்பது ஆங்கிலத்தில் ஊழஅஅரniஉயவழைn எனக் குறிப்பிடப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழிச் சொல்லான ஊழஅஅரnளை என்பதிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இலத்தீன் மொழியில் இச்சொல்லுக்குப் பொதுவாக்கு, பகிர்ந்துகொள், செயல் விளைவு, பயன், செய்தியைப் பரப்பு என்னும் பொருள்கள் உண்டு. ஆகவே ஒருவருக்கு, இருவருக்கு, பலருக்கு இடையே அல்லது பல அமைப்புகளுக்கிடையே இடம்பெறும் செய்திப் பரிமாற்றமும் அதனால் ஏற்படும் புரிதலும் கருத்துப் பரிமாற்றம் எனப்படும்.
ஒரு செய்தியைத் தெரிவிப்பவர் தான் கூற வரும் கருத்;தை அல்லது செய்தியைக் கேட்போர் அல்லது பெறுநருக்குச் சில குறியீடுகளைப் பயயன்படுத்திக் கூறுவதோடு கேட்போரது கருத்துகளையும் பெற முயல்வதாகும். மொழியியல் சூழலில் செய்தியைத் தருநரும் (ளுழரசஉந) பெறுநரும் (சுநஉநiஎநச) மனிதர்களாக அமைகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தளவில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கும் தாங்கள் வாழ்கின்ற பன்மொழிச் சமூகத்தில் ஏனையவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கும் குறிப்பிட்ட மொழிகள் பயன்படுகின்றன. பல்லின சமூகத்தில் இனங்களுக்கிடையே தொடர்பாடுவதற்கு மொழியே முதன்மை காரணியாக உள்ளது. அந்த வகையில் இலங்கையில் இனங்களுக்கிடையே தொடர்பாடல் அற்றுப் போனமையாலேயே புரிந்துணர்வு ஏற்படாமல் இன முரண்பாடுகள் தோற்றம் பெற்றன என்பதை நன்குணர்ந்து கொண்ட சிங்களவர்களும் தமிழர்களும் அம்மொழிகளை இரண்டாம் மொழிகளாகக் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகவே பல்லின கலாசார சமூகக் கட்டமைப்பில் இன ஒற்றுமைக்கு கருத்துபரிமாற்றம் மிகவும் முக்கியமாகும். அதற்கு மொழி மிகவும் பயன்பாடுடையதாக விளங்குகின்றது. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் அப்பணியைச் செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளமையைத் தற்காலத்தில் காண முடிகின்றது.
ஆ). இரு சமூகங்களினதும் வாழ்வியலை வெளிப்படுத்துதல்
தமிழ் மொழியானது அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத் தமிழர்களாகட்டும் மலையகத் தமிழர்களாகட்டும் இலங்கையில் வாழ்கின்ற ஏனைய தமிழர்கள் மட்டும் முஸ்லிம்கள், அவர்களது தனித்தன்மை, கலாசாரம், பண்பாடு, மதம் பற்றி அறிந்து கொள்வதற்கு இலங்கையில் வழக்கிலுள்ள தமிழ் மொழி பெரிதும் உதவியாக உள்ளது. அதேபோல் சிங்கள மொழி இலங்கையில் வாழ்கின்ற சிங்கள மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரம், மதம் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இ). கற்றல் – கற்பித்தல்
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இரண்டாம் மொழிகளாகக் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக போர் முடிவடைந்ததன் பின்னர் தமழர்கள் சிங்கள மொழியையும் சிங்களவர்கள் தமிழ் மொழியையும் இரண்டாம் மொழியாகக் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றளர்கள். அதற்குக் காரணம் இலங்கையில் ஏற்பட்ட போருக்குக் காரணம் இங்கு வாழக்கின்ற இனங்கள் தங்களுக்கிடைலே உரையாடாமையால் ஏறு;பட்ட எதிர்மறையான புரிந்துணர்வே என்ற உண்மையை உணர்ந்து கொண்டமையாகும். அந்த வகையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கற்பிக்கின்ற பொழுது தமிழ் சமுதாயத்திற்கான பணி நிறைவேறுவதாகவும் அம்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கின்ற பொழுது சிங்கள சமதாயத்தின் தேவையை நிறைவேற்றுவதாகவும் உள்ளது. அதன் மூலம் இலங்கையில் தமிழ் மொழி தமிழ்ச் சமுதாயத்திற்கும் சிங்கள சமுதாயத்திற்கும் சிறந்த சமுதாயப் பணியை ஆற்றுகின்றமையை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் வெளிநாட்டவர்களுக்குத் தமிழ் மொழி அயல் மொழியாகக் கற்பிக்கின்ற பொழுது உலக சமுதாயத்திற்கே பணி ஆற்றுவதாகவும் அமைந்துள்ளது. அதேபோல் சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கற்பிப்பதன் மூலம் சிங்கள சமூகம் நன்மை பெறுகின்றது. அதனைத் தமிழர்களுக்கு இரண்டாம் மொழியாகக் கற்பிக்கின்ற பொழுது தமிழ்ச் சமுதாயம் பயனடைகின்றது. அம்மொழியை அயல் மொழியாக வெளிநாட்டவர்களுக்குக் கற்பிக்கின்ற பொழுது உலகச் சமுதாயம் பயனடைகின்றது.
இவ்வாறு தமிழர்கள் சிங்கள மொழியையும் சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்வதன் மூலம் முரண்பட்ட இரு சமூகங்கள் தங்களுக்குள் தொடர்பாடலை ஏறபடுத்திக் கொண்டு சிறந்த புரந்துணர்வையும் நட்புணர்வையும் வளர்த்து இன நல்லிணக்கத்தினை மேம்படுத்தலாம். அதன் மூலம் இலங்கையில் தமிழ், சிங்களச் சமூகங்கள் இன ஒற்றுமையோடும் அமைதியோடும் தங்களது வாழ்க்கையைத் தொடர முடியும். அது இலங்கையின் நிரந்தர சமாதானத்திற்கு வழிகோலுவது மட்டுமன்றி புலம் பெயர்ந்து அந்நிய நாடுகளில் அகதிகளாக சொல்லொண்ணாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மீண்டும் இலங்கையில் வந்து வாழ்வதற்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தும். அந்த வகையில் தமிழ் மற்றும் சிங்கள மொழி கற்றல் – கற்பித்தல் செயல்பாடானது முரண்பட்ட இரு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் மிகப் பெரிய சமுதாயப் பணியை ஆற்றிக் கொண்டுள்ளது.
ஈ). Áல்களைப் படைத்தல்
இலங்கையில் தமிழ் சிங்கள மொழிகளிலே பல்வேறு Áல்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியங்கள், இலக்கண நூல்கள், புலம்பெயர் மக்கள் சார்ந்த இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், கல்வியியல் சார்ந்த நூல்கள், நவீனதொழில் நுட்பம் சார்ந்த நூல்கள் போன்ற பல்துறை நூல்கள் படைக்கப்பட்ட வண்ணமுள்ளன. அதன் மூலமும் தமிழ் சிங்கள மொழிகள் தங்களது சமூகங்களுக்குப் பயன்பாடுடையனவாக அமைந்துள்ளன.
உ). மொழி பெயர்ப்பு
பல்வேறு சிங்கள மற்றும் ஆங்கில நூல்களை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதன் மூலம் தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்திற்கு மிகவும் பயனுடைய ஒரு செயல்பாட்டினை ஈட்டக் கூடியதாகவுள்ளது. அதாவது சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் உள்ள அரிய செய்திகளைத் தமிழ்ச் சமுதாயம் அறிந்து கொள்ளவதற்கு ஒரு மிகப் பெரிய வாய்பாக அது அமைந்து விடுகின்றது. அதேபோல் தமிழ் மொழியியலுள்ள பல நூல்களைச் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கின்ற பொழுது தமிழ் மொழி அதன் தொன்மை போன்றவற்றைச் சிங்கள சமுதாயம் அறிந்து கொள்ள வாயப்பாக அமைகின்றது. இவ்வான மொழிபெயர்ப்புகள் மூலம் இரு மொழிகளிலுமுள்ள பல அரிய Áல்கள் மற்றும் அவற்றிலுள்ள செய்திகளை அம்மொழி சார்ந்த சமுதாயங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.
இயந்திர மொழி பெயர்ப்பு இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த மொழிபெயர்ப்பு முறையாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இலங்கையிலும் தமிழ் சிங்கள மொழிகள் தொடர்பான இயந்திர மொழிபெயர்ப்புச் செயல்பாடுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு பலர் அதில் ஈடுபட்டுள்ளமையை அறிய முடிகின்றது. அந்தவiகியல் கொழும்பு பல்கலைக்கழகம் முன்னணியில் செயல்படுகின்றமை இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்க ஒரு விடயமாகும்.
உ). அகராதி
• தமிழ், சிங்கள ஒரு மொழி அகராதிகள்
• தமிழ் – சிங்கள மற்றும் சிங்கள – தமிழ் இரு மொழி அகராதிகள்
• தமிழ் – சிங்கள -ஆங்கில மற்றும் சிங்கள – தமிழ் – ஆங்கில மும்மொழி அகராதிகள்
என இலங்கையில் பல அகராதிகள் காலந்தோறும் தோன்றிய வண்ணம் உள்ளன. குறிப்பாகத் தற்காலத்தில் அடிக்கடி அகராதிகள் வெளியிடப்படுகின்றன. ஏனெனில் இலங்கை அரசு தமிழ் சிங்கள மொழிகளை இரண்டாம் மொழிகளாகக் கற்றலை கட்டாயப்படுத்தும்; புதிய மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளமையால் மக்கள் அம்மொழிகளைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் அம்மொழிச் சொற்களின் பொருண்மையை அறிந்து கொள்வதற்கு அகராதிகள் அவசியமாகின்றன. தமிழ் மற்றும் சிங்கள அகராதிகளின் தேவையை உணர்ந்து அரசுசார் மற்றுமு; அரசுசாரா பல்வேறு நிறுவனங்கள் அகராதிகளை உருவாக்கி வெளியிட்ட வண்ணமுள்ளன. அவ்வகராதிகள் பள்ளிக்கூட மாணவர்கள் முதல் தொழில் புரிபவர்கள் வரை அவை மிகவும் பயனுடையனவாக அமைந்துள்ளன.
ஊ). கலைச்சொல்லாக்கம்
தற்காலத்தில் எங்கும் நவீன தொழில்நுட்பம் எதிலும் நவீன தொழில்நுட்பம் என்ற ஒரு நிலைப்பாடு நிலவுகின்றது. அதனால் ஒவ்வொரு மணித்துளிகளிலும் புதிய புதிய கலைச்சொற்கள் தோன்றிய வண்ணமுள்ளன. குறிப்பாக ஆங்கில மொழியில் நாள்தோறும் புதிய கலைச்சொற்கள் உருவாகியவண்ணமுள்ளன. ஆகவே அவற்றுக்கு இணையான சொற்களை அந்நதந்த மொழியில் உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையயாக உள்ளது. எடுத்துக்காட்டாக கனிணியுடன் தொடர்புடைய ஆங்கிலச் சொற்களுக்குக் கீழவரும் கலைச்சொற்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் சிங்கள ஒலிபெயர்ப்பு தமிழ்
internet அன்தர்ஜாலய இணையம்
email வித்யுத் தெப்பால் மின்னஞ்சல்
website வெப் அடவிய வளைத்தளம்
ஆங்கில மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ் மற்றும் சிங்களச் சொற்களைத் தருகின்றன என்ற வகையிலும் அம்மொழிகள் சமுதாயத்திற்கு உதவுகின்றன. அந்த வகையிலே இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் கருத்துப்பரிமாற்றம், இரு சமூகங்களினதும் வாழ்வியலை வெளிப்படுத்துதல், கற்றல் – கற்பித்தல், Áல்களைப் படைத்தல், மொழிபெயர்ப்பு, அகராதிகளைத் தயாரித்தல், சொல்லாக்கம் போன்ற பல்வேறு நிலைகளில் சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இ
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்