ஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 23 of 26 in the series 26 ஏப்ரல் 2015

நஸார் இஜாஸ்
வாசிப்பு வெறுமனே பச்சாதாபத்துக்காக மட்டும் இருக்கக் கூடாது. அது மனித மனங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தூர்ந்து போயிருக்கும் சமூகத்தின் விடியல் பற்றி அதிக அக்கறை செலுத்த வேண்டும். அந்த வாசிப்பில் எதிர்காலத்தின் ஒளி தெரிய வேண்டும். அதற்கான உந்து சக்தியாகவே அது எப்போதுமே திகழ வேண்டும்.
ஹியாம் நௌர் உலகப் புகழ் பெற்ற கவிஞரும், எழுத்தாளரும் தலை சிறந்த ஊடகவியலாளருமாவார். தன்னுடைய எழுத்தக்கள் அத்தனையும் பதியமிடப்பட்ட சில கணங்களிலேயே சர்வதேசத்தின் காதுகளில் உட்கார்ந்து கொண்டு ஆரோக்கியத் துளிர் விடும் ஆற்றல் கொண்டவை. ஹியாம் நௌர் தனது முதல் பதிப்பை 2002 ஆம் ஆண்டு ‘Pழநவசல4pயடயளவiநெ’ என்ற பெயரில் பிரசவம் செய்தார். இவருடைய இந்த இணையத்தளம் மிகப் பிரசித்தி பெற்றதாகும்;.
இவரின் எழுத்துக்கள் அத்தனையும் இஸ்லாமிய தேசத்தின் வீர காவியத்தையும் நீதியையும் நெஞ்சு நிமிர்த்துபவையாக இருக்கின்றன. இவரின் அணுத் திறன்மங்களின் மூலம் சேகரிக்கப்பட்ட அறிவு உற்பத்தித் திறனின் மூலம் சொற்கோர்வைகளாகின்றன. அத்தனையும் அநியாயமாக நிகழ்த்தப்படும் சோகங்களையே சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தன.
மனித உரிமை வழக்கறிஞராகவும் ஊடகவியலாளராகவும் சூழலியலாளராகவும் செயற்பட்டு வரும் ஹியாம் நௌர் தனது கட்டிளமைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே பலஸ்தீன் தேசத்தின் நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தன்னைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி வருபவர் என்பது சுட்டிக்காட்டத் தக்க ஒன்றாகும். ஊடகத் துறை, சட்டத்துறை என்பவற்றோடு கட்ட நிர்மாணத்துறை வடிமைப்பு போன்ற பல்வேறு பரிமானங்களில் மிளிர்கிறார்.
இருப்புகளின் வெளிகளில் வீசப்படுகின்ற தொடர் குண்டுகளில் காஸாவின் பசுமை வெளி பலிக்கடாவாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. மரம், செடி, கொடி, புற்பூண்டுகள் என அத்தனையும் நாசகாரமாக்கப்பட்டு அது ஒரு பாலைவனத்தின் இருப்பையே தொடர்ந்தும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது பாலைவனத்தில் உள்ளது போல் எமக்கு எதுவுமேயில்லை. காஸாவின் காலையில் துளிர்க்கும் பனித்துளி தங்க இருப்பிடமின்றி பூமி உறிஞ்சுகின்ற ஒரு சொட்டு நீரிலும் தாகம் தலை விரித்தாடும்.
காஸா மீதான இஸ்ரேலின் நியாயமற்ற போர்த் தொடுப்புக்களும், சிசுக் கொலைகளும், காட்டு மிராண்டித் தனமான போக்கும் ஹியாம் நௌரின் பேனா முனைகளில் அநியாயத்திற்கெதிரான கிளர்ச்சியாகப் பூக்கிறது.
ஹியாம் நௌர் பலஸ்தீனத்தின் நவீன கவிஞரும் சிறந்த எதிர்ப்பிலக்கியவாதியுமாவார். அவருடைய கவிதை வரிகள் வாசிப்போரில் ஒரு வித வித்தியாசமான நெருக்கத்தையும் நெருடல்களையும் ஏற்படுத்தக் கூடியது. பலருடைய எழுத்துக்களை ஒட்டியும் வெட்டியும் நிறையவே விவாதிக்கலாம். ஆனால் இவருடைய எழுத்துக்கள் தனித்துவமுடையவை.
இவருடைய குறிப்பிடத்தக்க பல கட்டுரைகளும் கவிதைகளும் அரபு, இத்தாலி, ஜேர்மன் ஹிந்தி போன்ற மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன, செய்யப்படுகின்றன. ஆனால் அவை அத்தனையும் மொழிபெயர்ப்புக்கள் என சொல்வதை விட வலிபெயர்ப்புக்கள் எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். அவரின் வலிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உலகத்துக்காக அழுது கொள் என்ற கவிதையும் ஒன்று.
உலகத்துக்காக அழுது கொள்
இந்த உலகத்துக்காக அழுவதைத் தவிர
உன் சுயநலத்துக்காக அழுது கொண்டிருக்காதே
நீ வாழ்வின் ஓரு புள்ளியே

பல குரூரமானவர்கள்
இப்பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்
அவர்கள் மலையளவு வலியையும்
நதிகளைப் போல் கண்ணீரையும் குருதியையும்
சிந்த வைக்கின்றனர்.

உனக்கு செயற்படுவதற்கு
சரியான சிந்தனையே தேவைப்படுகிறது
நடந்ததையே எண்ணிக் கொண்டிருக்காதே
முயற்சித்து முன்னேறு

இங்கு எமக்கெதுவுமேயில்லை
உன் மரணம் நிகழம் வரை
உலகம் இருந்து கொண்டேயிருக்கும்

ஒவ்வொரு பலஸ்தீனியனின் வாழ்க்கை பறிக்கப்படும் போதும் ஒரு புனிதப் போர் பிறக்கும். அப்போது ஒவ்வொரு பலஸ்தீனியனின் உடலிலும் புதிய இரத்தம் பீறிடும். அவை கிளைகளாக பரவும். அவை எப்போதும் ஆரோக்கியத்தின் இருப்பிடத்தை நோக்கியே நகரும் என்ற ஹியாம் நௌரின் சொற்களில் எத்தனை ஆழம் பொருந்தியிருக்கிறது.
காஸா இரத்தம் சிந்திக் கொண்ருக்கின்றது என்று யாரும் நினைத்தால், அவர் கூறியதை மீண்டும் ஒரு தடவை பரிசீலித்துக் கொள்ளட்டும். காஸா, இரத்தம் அற்றிருக்கும் இந்த சமூகத்துக்கு இரத்த தானம் செய்து கொண்ருக்கிறது என்ற கலாநிதி முஹம்மத் அரீபியின் வார்த்தைகள்தான் இப்போது என் மண்டைகளில் மனப்பாடம் செய்யப்பட்டுக் கொண்ருக்கிறது.
ஹியாம் நௌர் எழுத்துலகையும் தாண்டி பிரஜாவுரிமை பெற்ற 100 சிறுவர் சிறுமிகளைக் கட்டமைத்தல் என்ற தொணிப் பொருளில் செயற்பட்டு வருகிறார்.  டிசம்பர் 2008 இலிருந்து 2009 ஜனவரி வரை நடந்த யுத்தத்தில் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகளும் இன்னும் சிலரும் இதில் துயர் மீளச் செய்யப்படுகின்றனர். இவர்களது மரணத்தின் வாதை மிகத் துயரமானது. வாழ்வும் மரணமும்; பல்வேறு பரிணாமங்களில் பல்வேறு படிமங்களாக மாறுகின்ற போதிலும் மறுமைக்கான பயணிப்பு அவனுக்குள் நிரந்தரமான சந்தோசத்தையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கலாம் என்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது.
மட்டுமன்றி 2005 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட பலஸ்தீன் மற்றும் அமெரிக்க நட்புறவு  நிதியுதவியுடன் ‘காஸா இளைஞர் நிதி’ என்ற செயற்றிட்டத்தினை தலைமை தாங்கி செயற்பட்டவர் ஹியாம் நௌர். வெடிகுண்டுகள் புரளும் தேசத்தில் வாழ்ந்து கொண்ருக்கும் உதவிகள் தேவைப்படும் குடும்பத்தினரிடையே சுத்தமான நீரும் உளர் உணவுகளும் வழங்கினார். மற்றுமன்றி இதன் மூலம் பிரத்தியே வகுப்புகளுக்காக மாணவர்களுக்கு சிறிய நிதியுதவியும் தந்துதவினார்.
2003- 2004 காலப்பகுதியில் மற்றுமொரு செயற்றிட்டம் இவரைத் தேடி வந்தது. அதை அவர் ஏற்றுக் கொண்டார். காஸாவின் மனிதாபிமான அமைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற இத்திட்டத்தின் மூலம் அடைக்கலம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கு பயிற்றுவிப்பாளரகவும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதலில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் காஸாவைச் சேர்ந்தோருக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதிலும் மும்முரமாகச் செயற்பட்டவர்.
தான் ஒரு எழுத்தாளராக மட்டும் இருந்து விடாது சமூகத்தின் விடியலுக்காய் தீவிரமாக தன்னை அர்ப்பணித்தவர் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. வீரியம் பின்னும் எழுத்துக்களில் மட்டுமன்றி சமூக வரைபடத்திலும் பயணப்படும் சொற்களின் சொந்தக்காரி தன் பிறப்பை இப்போது வரைக்கும் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே இங்கு தெளிவான உண்மையாகும்.
ஒரு முறை காஸாவில் போர் உக்கிரம் பெற்றுக் கொண்ருந்த தருணம். படுகொலையில் மனிதப் பிணங்கள் மென்மேலும் பூமியில் விதைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. 104 – 135 இற்கு இடையில் மனித உயிர்கள் பறிக்கப்பட்டிருந்தன. இவற்றுள் இருவர் ஹியாம் நௌரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நியூயோர்க்கில் வசித்து வந்த ஹியாம் நௌரின் மனதில் இவ்விடயம் வேதனையை விலை பேசி விற்றுக் கொண்ருந்தது. காஸா போருக்கெதிரான கோஷங்களே இதன் உக்கிரத்திற்கு காரணம் என்பதை உணர்ந்த ஹியாம் நௌரின் குடும்பத்தினர் அவர் வெளியே செல்வதைத் தடை செய்தனர். அத்தருணத்தில் ஹியாம் நௌர் தன் குடும்பத்திற்கு சொல்லி வைத்ததெல்லாம் இதுதான். காஸா மீதான எனது கனவுகளை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. அப்போதுதான் என்னால் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைய முடியும் என்பதேயாகும்.
பலஸ்தீனத்தின் மீள்கட்டுமானம், கட்டமைப்பு என்பவற்றில் அதிக அக்கறை செலுத்திக் கொண்டிருக்கும் ஹியாம் நௌர் போன்றே ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் மனதிலும் பலஸ்தீனின் மீட்புக்கான தருணங்கள் எப்போது நிகழும் என்ற வினாத் தொடுப்புக்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. உண்மையில் ஹியாம் நௌர் சொன்னது போல பலஸ்தீன் அரேபிய நாடுகளின் இதயம்தான்.
ihதயளnஅ@பஅயடை.உழஅ

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *