க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம்.
பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் தனது இரண்டு மகன்களில் ஒருவரை இழந்தபின்னால், மற்றொரு மகனுக்கு வெளிநாட்டில் புதிய வாழ்வை உண்டு பண்ணித்தரும் தீவிரத்தில் இருக்கிறார்.
தன் சகோதரனை இந்த தாக்குதலில் இழந்த அவரது இன்னொரு மகன் இக்பால் ஹூஸேன் தனது வேலையையும் தனது குடும்பத்தையும் விட்டுவிட்டு நம்பிக்கையை தேடிச் செல்லும் ஆயிரக்கணக்கானவர்களோடு சேர்ந்து வெளிநாட்டுக்கு செல்ல கிளம்பியிருக்கிறார்.
க்வெட்டா நகரில் இருக்கும் ஷியாபிரிவினர் அதிகம் வசிக்கும் மாரி அபாத் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திலும் இறப்பும், வெளி நாடுகளுக்கு ஓடுதலும் கதைகதையாக இருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் ஷியா பிரிவினருக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. பாகிஸ்தானின் 200 மில்லியன் மக்களில் 20 சதவீதத்தினர் ஷியா பிரிவினர்.
சமீபத்தில் புதன் கிழமையில் கராச்சியில் 44 ஷியா பிரிவினர் படுகொலை செய்யப்பட்டார்கள். இது ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் உலகளாவிய பயங்கரவாத பிரிவு முதன்முறையாக கராச்சியில் நடத்திய படுகொலையாகும். ஆனலும் இதனைவிட படுபயங்கரமான தாக்குதல்கள், சுமார் 200000 ஷியாக்கள் வசிக்கும் பலுச்சிஸ்தானில் நடந்திருக்கின்றன என்று அங்குள்ள பிராந்திய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இடைவிடாத பயங்கரவாத தாக்குதல்கள் இளைஞர்களை சட்டத்துக்கு புறம்பான குடியேற்றத்தை நோக்கி துரத்துகின்றன. ஜனவரி 10, 2013 இல் ஒரு தற்கொலை குண்டுதாரி, ஒரு ஸ்னூக்கர் விளையாடும் இடத்தில் வெடித்ததால் ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டதே மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது.
பத்து நிமிடங்களுக்கு பிறகு, அந்த தாக்குதல் இடத்துக்கு உதவச்சென்றவர்கள் போனபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டுகள் நிறைந்த லாரி வெடித்தது. சுமார் 100 பேருக்கும் மேலானவர்கள் அங்கு கொல்லப்பட்டார்கள். அங்கு உதவ சென்றவர்களில் ஒருவர்தான் ஹாசன். இவரது மகன்.
அவரது சகோதரர் ஹூசைன் தப்பினார். ஆனால், உடலெங்கும் 38 உலோக துண்டுகள் பதிந்திருக்கின்றன.
”ஆறு மாதங்களாக, அவரது தாயார் திரும்பத்திரும்ப கூறிகொண்டிருந்தார்.” எனது ஒரு மகனை இழந்துவிட்டேன். இன்னொரு மகனையும் இழக்க விரும்பவில்லை”
சுமார் 20000 அமெரிக்க டாலர் பெறுமதியான பணத்தை சேமித்திருந்த தந்தை அலி, தனது மகன் ஹூசேனையும், ஹூசேனின் தாயாரையும் கராச்சிக்கு அனுப்பினார். அங்கிருந்து சட்டத்துக்கு புறம்பாக இந்தோனேஷியாவுக்கு அனுப்பினார்.
அங்கு தங்கள் உயிர்களை ஆள்கடத்தல் காரர்களின் கையில் ஒப்புவித்து, அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சென்றார்கள். (ஆஸ்திரேலியாதான் அவர்கள் செல்லவிரும்பிய வாக்களிக்கப்பட்ட தேசம். ) அங்குள்ள அரசாங்கம் சட்டத்தை மாற்றி, சட்டத்துக்கு புறம்பாக குடியேறுபவர்களை திருப்பி அனுப்ப ஆரம்பிப்பதற்கு முன்னால் சென்றுவிட்டார்கள்.
“படகு மிகவும் ஆபத்தானது. அதில் 200 பேர்கள் இருந்தார்கள். அதில் 20 பேர்கள் க்வெட்டாவை சேர்ந்தவர்கள். கடுமையான பிரயாணம். கடலும் கடுமையாக இருந்தது. நாங்கள் ஒரு மீன்பிடி படகால் காப்பாற்றப்பட்டோம்” என்று ஹூசேன் சொன்னார்.
அதன் பின்னர் ஒரு குடியேற்ற முகாமுக்கு சென்று அங்கிருந்து மெல்போர்னுக்கு சென்றார்கள். இன்று ஹூசேன் ஆங்கிலம் கற்றுகொண்டிருக்கிறார்.
“இளம் ஷியாக்களுக்கு பாகிஸ்தானில் எந்த விதமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லை, இங்கே ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கை இருக்கிறது” என்று சொன்னார்.
ஹூசேனை மாதிரியே இன்னொரு இளைஞரான அலி ராஜாவும் புதிய வாழ்க்கை வேண்டினார்.
ராஜா ஹஜாரா என்ற ஷியா பிரிவு சமூகத்தை சேர்ந்தவர். ஹஜாரா சமூகத்தினரின் தனிப்பட்ட முக அடையாளங்கள் காரணமாக லஷ்கார் ஈ ஜங்வி போன்ற தீவிரவாத சுன்னி பிரிவு பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காகிறார்கள். 2011 இல் க்வெட்டாவில் நடந்த ஒரு தாக்குதலில் தனது நெருங்கிய நண்பரை ராஜா இழந்தார்.
அந்த தாக்குதலுக்கு பிறகு அவருக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான். பாகிஸ்தானை விட்டு ஓடுவது.
அவரது தந்தை சையது கோர்பான் என்ற டயர் விற்பனையாளர். அவர் இவர் மலேசியாவுக்கு செல்ல உதவி புரிந்தார். அங்கே ஒரு கடையை வைத்து பிழைத்துகொள்ள திட்டம். ஆனால் அது நடக்கவில்லை. “என் மகன் என்னை கூப்பிட்டு நான் ஆஸ்திரேலியாவுக்கு போகிறேன் என்று சொன்னான். நான் போகாதே என்று சொன்னேன்” என்று அழுதார்.
250 சட்டத்துக்கு புறம்பாக குடியேற முனைந்தவர்கள் இருந்த அவர்கள் சென்ற பழைய படகு கடலில் மூழ்கியது.
சில அழுகிய உடல்கள் கிடைக்கப்பெற்றன. ராஜாவின் உடல் உட்பட பல கிடைக்கவில்லை. அவரது குடும்பம் இன்னும் அமைதியடையவில்லை.
“இன்றைக்கும் எப்படி இது நடக்க விட்டேன் என்று கஷ்டமாக இருக்கிறது” என்று தந்தை கூறினார்.
முஷ்டாக் என்பவர் ராஜா சென்ற அதே படகில்தான் இருந்தார். ஆனால், கடலில் மூன்று நாட்கள் குடிக்க தண்ணீர் இன்றியும், சூரியனால் சுடப்பட்டும் தத்தளித்தார்.
”நாங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டபோது என் உதடுகள் எல்லாம் வெடித்திருந்தன. எனது தோல் வெந்துவிட்டது” என்று நினைவு கூர்ந்தார்.
இந்தோனேஷியாவுக்கு திருப்பி அனுப்பட்டாலும், அவர் மீண்டும் சட்டத்துக்கு மாறாக ஆஸ்திரேலியாவில் குடியேற முனைந்தார். அவ்வாறு செல்லும்போது “எனக்கு பிரஞ்கை தப்பிவிட்டது. ஒரே பயம் ஏறிவிட்டது” என்று சொன்னார்.
“என்னால் தூங்கமுடியவில்லை. ஒவ்வொரு வினாடியும் செத்துவிடுவேன் என்று பயந்தேன்” என்று முஷ்டாக் கூறினார். இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு கோழி பண்ணையில் வேலை செய்கிறார்.
”நான் பாகிஸ்தானில் இருந்திருந்தால், நான் கொல்லப்படுவேன் என்று பயந்தேன். நான் கடலுக்கு சென்றபோது, நான் செத்துவிடுவேன் என்று பயந்தேன். இரண்டு பக்கமும் சாவுதான். ஆனால், இதில் ஒரு நம்பிக்கையாவது இருக்கிறது” என்றார்.
ஷியா பிரிவு சேர்ந்த ஹஜாராக்கள் தங்களது வாழ்விடங்களை தவிர வேறெங்கும் போவதில்லை. அவர்களது சொந்த ஊரான ஆப்கானிஸ்தானிலோ, ஈரானிலோ, பாகிஸ்தானிலோ அவர்களுக்கு எதிர்காலமே இல்லை என்று வாழ்கிறார்கள்.
“இவ்வாறு நாடுவிட்டு நாடு செல்ல உதவுபவர்களை எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்கிறார்கள். எங்களை பொறுத்தமட்டில், அவர்களுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது” என்று அப்துல் காலிக் ஹசாரா (தேசியவாத ஹசாரா டெமாக்ரடிக் பார்ட்டி தலைவர்) கூறுகிறார்.
”எனக்கு நிம்மதியை கொடுங்கள். அப்புறம் இவர்களை தடுக்கவேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்று கூறுகிறார்.
வயதான அலியின் இரண்டு சகோதர்கள் அவர்களது மத நம்பிக்கைக்காக கொல்லப்பட்டார்கள். அவரது மகனும் அதேமாதிரி மத நம்பிக்கைக்காக கொல்லப்பட்டார். இவர்களது கல்லறைகளின் நடுவே அலையும் வயதான அலியின் இதயமோ எந்த நாட்டில் தனது பிரியமானவர்களை இழந்தாரோ அந்த நாட்டோடு இறுக்க பிணைந்து கிடக்கிறது.“நானும் போய்விட்டால், இவர்களுக்காக யார் அழுவார்கள்?”
- புறநானூற்றில் மனிதவள மேம்பாடு
- மிருக நீதி
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்
- மிதிலாவிலாஸ்-20
- தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்
- பரிசுத்தம் போற்றப்படும்
- “என்னால் முடியாது”
- அந்தப் புள்ளி
- ஒலி வடிவமில்லாக் கேள்விகள்
- எழுத நிறைய இருக்கிறது
- ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்
- வடு
- தங்கராசும் தமிழ்சினிமாவும்
- திருக்குறள் உணர்த்தும் பொருளியல்ச் சிந்தனைகள்
- சும்மா ஊதுங்க பாஸ் – 3
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7
- விளம்பரமும் வில்லங்கமும்
- பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்