தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

அன்பானவர்களுக்கு

– சேயோன் யாழ்வேந்தன்

இலக்கியமும் கவிதையும்
இன்னும் பலவும்
காலம் கடந்து நாம்
பேசிக்கொண்டிருந்ததில்
கணவன் சந்தேகிப்பான் என்பதையோ
மனைவி சபித்துக்கொண்டே
சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ
மறந்தேபோனோம்
வீடு திரும்ப மனமில்லாதது போல்
ரயில் வாராத
நடைமேடையில்
அமர்ந்திருந்தோம்
இன்னும் பேசவேண்டியது
மிச்சமுள்ளது போல்.
சட்டென எழுந்து நின்றோம்
விடைபெறும் வேளையில்
மனதில் வினா எழுந்தது
மறுபடி எப்போது
சந்திப்போம் என்று.
எதுவும் பேசாமல்
எதிரெதிர் திசை பிரிந்தோம்.
என்ன செய்ய,
அன்பில்லாதவர்களுக்கு
எளிதாக இருக்கும் விஷயங்கள்
அன்பு கொண்டவர்களுக்கு
மிகக் கடினமாக இருக்கிறது
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationமயிரிழைஆறு
Previous Topic:

Leave a Comment

Archives