“உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்

This entry is part 8 of 23 in the series 21 ஜூன் 2015

[ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : வளவ துரையன் ]

Ruskin-Bond நான் லிட்ச்சி மரத்தின் கிளயில் உட்கார்ந்திருந்தேன். தோட்டத்துச் சுவரின் மறுபக்கத்திலிருந்து கூன் விழுந்த ஒரு வயதான பிச்சைக்காரன் பறக்கின்ற வெண்மைத் தாடியுடனும், கூரிய பார்வையுள்ள பழுப்பு நிறக் கண்களும் கொண்டவனாய் என்னைப் பார்த்தான்
” உன் கனவு என்ன “ என்று என்னை அவன் கேட்டான்.
தெருவில் செல்லும் கந்தையான ஆடை உடுத்தியிருந்த ஒருவனிடமிருந்து வந்த அந்தக் கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. அதுவும் அவன் ஆங்கிலத்தில் கேட்ட்து என்னை மேலும் திடுக்கிட ச் செய்ததது. அந்தக் காலத்தில் ஆங்கிலம் பேசும் பிச்சைக்காரர்கள் அபூர்வமாகத்தான் இருந்தார்கள்.
’ உன் கனவு என்ன ‘ அவன் திரும்பவும் கேட்டான்.
” எனக்கு ஞாபகம் இல்லை “ என்று சொன்ன நான் “ நேற்று இரவு நான் எந்தக் கனவையும் காணவில்லை “ எனத் தொடர்ந்து கூறினேன்.
” நான் அதைக் கேட்கவில்லை. நான் அதைக் கேட்காததும் உனக்குத் தெரியும், உன்னை நான் கனவு காண்பவனாகப் பார்க்க முடிகிறது. இது லிட்ச்சி மரத்தில் உட்காரும் பருவ காலமன்று. ஆனால் நீ இந்த மரத்தில் மதியவேளையில் உட்கார்ந்து கனவு கொண்டிருக்கிறாய். ”
“நான் இங்கே சும்மா உட்கார்ந்திருக்கிறேன் “ என்று சொன்னேன். நான் என்னைக் கனவு காண்ப வனாக ஒப்புக் கொள்ள மறுத்தேன்.
’ பையா, வாழ்க்கையில் நீ மிகவும் விரும்புவது ஒரு கனவுதான். நீ மிகவும் விரும்பி ஆசைப் படுவது எதுவுமே இல்லையா? ‘
’ நான் உடனே, ‘ எனக்குச் சொந்தமாக ஓர் அறை வேண்டும் ‘ என்றேன்.
’ ஆ—- சொந்தமாக ஒரு மரத்தைப் போல, சொந்தமாக ஓர் அறை; உனக்குத்தெரியுமா? பலர் அவர்களுக்கான சொந்த அறைகளைப் பெறமுடியவில்லை. ஒன்று கூடி வாழ இடமும் இல்லை. ‘
” ஒரு சின்ன அறை போதும் “

”தற்போது எந்த மாதிரியான அறையில் நீ இருக்கிறாய்? “
” அது பெரிய அறைதான்; ஆனால் என் சகோதரர்களுடனும் சகோதரிகளுடனும் அதைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் அத்தை வரும்போதும் அதே நிலைதான்.”
” அப்படியா? உனக்கு வேண்டியது சுதந்திரம்; சொந்தமாக ஒர் அறை; சொந்தமாக ஒரு மரம்; இவ்வுலகில் சொந்தமாக ஒரு சிறிய இடம் “
” ஆமாம், அது போதும் “
” அது போதுமா? அதில் எல்லாம் உள்ளதா? “ உனக்கு எல்லாம் கிடைக்கும் பொழுது நீ உன் கனவைக் கண்டுபிடித்துவிடுவாய். “
” எப்படிக் கண்டுபிடிப்பது என்று கூறுங்கள்?”
” அது ஒன்றும் மாயமந்திரமில்லை நண்பனே; நான் எல்லாம் தெரிந்த ஞானியாக இருந்தால் உன்னிடம் எனது நேரத்தை இங்கே வீணடித்துக் கொண்டிருப்பேனா? “ உனது சுதந்திரத்துக்காக நீ பணியாற்ற வேண்டும். அதை நோக்கியே எப்போதும் போக வேண்டும் . அதைக் கண்டுபிடிக்கும் வழியில் வருபவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும். பிறகு வெகு சீக்கிரமாக நீ உன் சுதந்திரத்தை, உனக்குச் சொந்தமாக ஒர் அறையைக் கண்டுபிடித்துவிடுவாய்; அதற்குப் பிறகுதான் கஷ்டமான நேரம் வந்து சேரும். “
” அதற்குப் பிறகா? “
“ ஆமாம் நண்பனே, என்னை இப்போது பார், நான் பார்ப்பதற்கு ஒர் அரசனைப் போல அல்லது ஒரு ஞானியைப் போல இருக்கிறேனா? நான் விரும்பியதெல்லாம் அடைந்தேன். பிறகு மேலும் மேலும் விரும்பிக்கொண்டே போனேன்,——- உன்னுடைய அறையை நீ பெற்றால், பிறகு நீ ஒரு கட்டடத்தை விரும்புவாய்; உனக்கு உன் கட்டடம் கிடைத்த பிறகு பெரிய மாவட்டத்தை விரும்புவாய்; சொந்தமாக மாவட்டம் கிடைத்த பிறகு சொந்தமாக ராஜ்யம் விரும்புவாய்; கடைசியில் எல்லாவற்றையும் வைத்துப் பராமரிப்பது கஷ்டமாக இருக்கும்; முடிவில் எல்லாவற்ரையும் இழப்பாய்; எல்லா ராஜ்யங்களும்போய்விடும்; உன்னுடைய அறை கூட உனக்கு இருக்காது. “
“ நீ ஒரு ராஜ்யத்தைப் பெற்றிருந்தாயா? “
” அது போல்தான் இருந்தது————-தம்பி; உன் சொந்தக் கனவைத் தொடர்ந்து போ; பிறரது கனவுகளை எடுத்துக் கொள்ளாதே; யாருடைய வழியிலும் நிற்காதே; பிறருடைய பாடலையோ, நம்பிக்கையையோ அறையையோ பறித்துக் கொள்ளாதே. “
அவன் திரும்பிக் கால்களைத் தேய்த்துக்கொண்டே இதுவரை நான் கேட்டிராத கீழே உள்ள பாடலின் ஒரு பகுதியைப் பாடிக் கொண்டு போனான். அது அவனுடையதாக இருக்கலாம்.
” அறிவுடன் உறுதியுடன் நீடு வாழ்க நண்பனே
” ஆனால் எவருடைய பாடலையும் பறிக்காதே “
நான் மரத்திலேயே உட்கார்ந்துகொண்டு அவனுடைய ஞானம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எப்படி ஒரு அறிவுள்ள மனிதன் ஏழையாக இருக்க முடியும்? ஒருவேளை அவன் பின்னாளில் அறிவாளியாகி இருக்கலாம்.
எப்படியோ அவன் மனத்தில் கபடம் இல்லை. நானும் மனம் தெளிவாக இருந்தேன். நான் வீட்டுக்குத் திரும்பினேன். எனக்குச் சொந்தமாக ஒர் அறை வேண்டுமென்று கேட்டுப் பெற்றேன்.
சுதந்திரம் என்பது வற்புறுத்திப் பெறுவது என்பதைப் உணர்ந்து கொண்டேன்.
—————————————————————————-
[ ரஸ்கின் பாண்டின் ‘Our Trees Still Grow in Dehra “எனும் சிறுகதைத் தொகுப்பில் உல்ள ‘ What”s Your Dream?’ எனும் கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ]
வெளியீடு : Penguin Books India Pvt. Ltd, 11 Community Centre, Panchsheel Park, New Delhi, 110 017
ரஸ்கின்பாண்ட்
1934—இல் இமாசலப் பிரதேசத்தில் கவுலியில் பிறந்தார். குஜராத்தின் ஜாம்நகரிலும், டேராடூனிலும்,ஷிம்லாவிலும் வளர்ந்தார். Room on the Roof எனும் தன் முதல் நாவலை பதினேழாவது வயதில் எழுதினார். 1957—இல் “ஜான் லியுலைன் ரைஸ்” நினைவுப் பரிசைப் பெற்றார். அதன் பிரகு முன்னூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதினார்.
குழந்தைகளுக்கான முப்பது நூல்கல் எழுதி உள்ளார். தன் சுயசரிதையை இரண்டு பாகங்களாக எழுதி உள்ளார். 1992—இல் அவரின் ஆங்கில எழுத்திற்காக அவருக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப் பட்டது. 1999—இல் அவர் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

Series Navigationகாஷ்மீர் மிளகாய்நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *