ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 29 in the series 19 ஜூலை 2015

unnamed (4)

jnanam

austra

ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில், ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம், எதிர்வரும் ஆடி மாதம் 26ஆம் திகதி (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரையில், ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் (Peacock Room, Shri Shiva Vishnu Temple, 52 Boundary Road, Carrum Downs, Vic 3201) நடைபெறும்.

சங்கத்தின் தலைவர் திரு ஜெயராமசர்மா அவர்களின் தலைமையில் –
திரு ஜெயக்குமரன், திருமதி சாந்தினி புவனேந்திரராஜா, திரு ஜூட் பிரகாஷ் என்பவர்கள் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் பற்றிப் பேசுவார்கள்.

948 பக்கங்களில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழில் 50 கட்டுரைகள், 75 சிறுகதைகள், 126 கவிதைகள், 2 நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்,

ஸ்ரீநந்தகுமார்
(செயலாளர்)
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

Series Navigation‘ரிஷி’யின் கவிதைகள்காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *