தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 ஆகஸ்ட் 2019

நாக்குள் உறையும் தீ

பத்மநாபபுரம் அரவிந்தன்

Spread the love

பத்மநாபபுரம் அரவிந்தன்
padmaarav
சில நாக்குகள் கனலை
சுமந்து திரிகின்றன

சில நாக்குகள் சதா
ஜுவாலையை உமிழ்கின்றன

சில நாக்குகள் கனல்
சுமக்க எத்தனிக்கின்றன

சில நாக்குகள் பிற நாக்குகளின்
கனலை ஊதி நெருப்பாக்குகின்றன

சில நாக்குகள் கனலை
அணைப்பதாய் எண்ணி
தவறிப் போய்
பெரும் நெருப்பை வருத்துகின்றன..

சில நாக்குகள் தீயை
உமிழ முடியாமல் விழுங்கி
தம்மையே எரித்துக் கொள்கின்றன

மொத்தத்தில் எல்லா நாக்குகளிலும்
உறைந்து கிடக்கின்றது தீ …
—————————-

Series Navigationகுப்பிகண்டெடுத்த மோதிரம்

2 Comments for “நாக்குள் உறையும் தீ”

  • தமிழ்த்தாசன் தாணு கோலப்பன் says:

    13.9.15.’திண்ணை’இதழில் வெளியான “நாக்குள் உறையும் தீ”கவிதையில் தீ,நெருப்பு, கனல், ஜுவாலை என்ற நான்கு சொற்களை வைத்து நடனமாடியிருக்கிறாா் கவிஞர். நாக்குகளில் உருவாகும் வாக்குகள் தாம் எத்தனை விதம் என்பதை நாசூக்காய் நவின்றிருக்கிறாா்.நல்ல ஒரு கவிதை.

    • Aravindhan says:

      நன்றி.. மிக்க நன்றி .. பத்மநாபபுரம் அரவிந்தன்


Leave a Comment

Archives