தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

மாறி நுழைந்த அறை

Spread the love

 

 • சேயோன் யாழ்வேந்தன்

 

அறை மாறி நுழைந்தபோது

அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள்

அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி

திரும்ப எத்தனிக்கும்போது

‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது

என்னையும் மாற்றிவிட்டுப்போ

ஏமாற்றாமல்’ என்றாள்

அவள் மனம் மாறி விடுமுன்

நான் மாறி விட்டேன்.

இப்போது இங்கே

எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationநித்ய சைதன்யா – கவிதைகள்‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

One Comment for “மாறி நுழைந்த அறை”

 • ஷாலி says:

  என்னையும் மாற்றிவிட்டுப் போ
  ஏமாற்றாமல்,என்றாள்

  அவள் மனம் மாறி விடுமுன்
  நான் மாறி விட்டேன்

  இப்போது இங்கே எல்லாமே
  மாறிக்கொண்டிருக்கிறது

  ஆம்!
  ஆணும் பெண்ணும் என்பது மாறி
  ஆணுக்கு ஆணாய்

  பெண்ணுக்கு பெண்ணாய்
  ஐக்கியப்படுகிறது

  இப்போது மேலை அரசு ஆதரவுடன்
  எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது.


Leave a Comment

Archives