தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

நித்ய சைதன்யா கவிதை

Spread the love

 நித்ய சைதன்யா

  1. பார்வைக்கோணம்

தரைக்குமேல் விரியும் வானம்

இருள்மொக்கு அவிழும் போது

ஒளிப்புள்ளிகளாய் மினுங்கும்

நிலா வெறிக்கும் சமயம்

வந்துகவியும்

பாட்டியின் தனிமைத்துயர்

 

இரவின் குரல்கொண்ட

தொடுகை

இட்டுச்செல்கிறது விண்ணிற்கு

 

வெளிச்சத்துண்டுகளாய்

சிதறிக்கிடக்கிறது

விளையாட்டுப் பொருள்போல்

நகரம்

 

 

Series Navigationஉலகெங்கும் மசூதிகளில் இமாம்கள், “காபிர்களை முஸ்லீம்கள் வென்றெடுக்க ” அல்லாவை வேண்டுகிறார்கள்துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்

Leave a Comment

Archives