தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

மழை நோக்கு

 

  • சேயோன் யாழ்வேந்தன்

எதையும் எதிர்பாராமல்

மழை பொழிவதாக

அதனைக் கேட்காமலேயே

முடிவு செய்துகொண்டோம்

வீழும் துளி அண்டம் துளைக்கையில்

எழுகின்ற மணம்

நனைகின்ற மலர்கள்

சிலிர்க்கும் அழகு

நனைந்தபடி நடக்கும்

மாதர்கள் வனப்பு

குளங்கள் எழுப்பும்

ஜலதரங்க இசை

சிறகை உதறிப்

பறக்கும் பறவைகள்

கதிர் சிரிக்கும்

வானவில்

இன்னும் எவ்வளவோ

எதிர்பார்த்து,

மனிதம் விளைக்கப்

பொழியும் மழை –

மானுடம் மலடானதறியாமல்!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்பறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு

Leave a Comment

Archives