தீற்றிய தெறிக்கப்பட்ட
தோற்றமாய் வண்ணங்கள்
மறுமுறை காண
புதிய தரிசனத்தில்
நவீன ஓவியம்
மாங்குயிலின் ஒரே சீழ்கை
மனதை வருடும்
ஒவ்வொரு நாள்
வெவ்வேறாய்
கொட்டும் மழை
பொருத்தும் இறந்த காலத்தின்
அரிய பக்கங்களில்
வேறொன்றை ஒவ்வொரு முறையும்
என்னைத் தவிர
எத்தனை தேட இவருக்கென்று
சேணம் பூட்டாப் புரவியாய்
பயணங்கள்
வீட்டின் படிக்கட்டுகள்
அலுவலக நாற்காலி
பிடிப்பின் இறுக்கம்
அளவு குறையாத அன்றாடம்
ஜலதரங்க மேதையின்
முன்னே
குறைவாய் நிறைந்தே
இசைக்கும்
வேவ்வேறு அளவுக் கிண்ணங்கள்
- அழகுநிலாவின் “ஆறஞ்சு”
- புழுக்களும் மனிதர்களும்
- தொடுவானம் 105. குற்ற உணர்வு
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்
- திருப்பூர் எழுத்தாளர்களின் தொகுப்பு “ டாலர் நகரம் “ வெளியீடு
- காரைக்குடி கம்பன்கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம்
- இரு கவிதைகள்
- திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணா
- அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்
- ‘கலை’ந்தவை
- “கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”
- இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!
- அடையாளங்களும் அறிகுறிகளும்
- சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்
- கோணங்கள்
- பிரிவின் சொற்கள்
- English translation of Tamil Naaladiyaar
- மகாத்மா காந்தியின் மரணம்